Aran Sei

அரசியலோ அரசியல் – காமராசர் ஆட்சியும் இமானுவேல் சேகரன் கொலையும்

1957 இல் நடந்த இரண்டாவது பொதுத் தேர்தல் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. 1957 ஏப்ரல் 13ம் தேதி காமராஜர் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார் அவருக்கு கவர்னர் ஏ ஜே ஜான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முந்தைய மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த சி சுப்பிரமணியம் பக்தவச்சலம் எம் ஏ மாணிக்கவேலர் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர் அவர்களுடன் கக்கன், ஆர்.வெங்கட்ராமன், வி. இராமையா, லூர்தம்மாள் சைமன் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த முறை அமைச்சரவையில் ஒரு பிராமணர் இடம்பெற்றிருந்தார் அவர் வேறு யாருமல்ல ஆர். வெங்கட்ராமன் தொழில்துறை அமைச்சர். காமராஜர் முதல் அமைச்சரவையில் பிராமணர் யாரும் இடம்பெறவில்லை. பெரியார் காமராஜரை ஆதரிக்க இதுவும் ஒரு காரணம். சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் குறைவாக இருந்ததால் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது 16 இடங்களில் வெற்றி பெற்ற “காங்கிரஸ் சீர்திருத்த கமிட்டி” எதிர்க்கட்சியாக அமர்ந்தது. வீ.கே ராமசாமி எதிர்க்கட்சித் தலைவரானார் அண்ணா திமுக சட்டமன்ற கட்சி தலைவராகவும் அன்பழகன் துணைத் தலைவராகவும் கருணாநிதி சட்டமன்ற கொறடாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அரசியலோ அரசியல் – காமராசர் முதலமைச்சரான கதை

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி என்னும் கிராமத்தில் மீனவ குடியில் பிறந்தவர் லூர்தம்மாள் பத்தாம் வகுப்பு வரை நாகர்கோவிலில் படித்த லூர்தம்மாள் பின்னர் அதே பள்ளியில் ஊதியம் இல்லாத ஆசிரியராக பணிபுரிந்தார். பின்னர் குளச்சலை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் ஈரான் நாட்டில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் இருவரும் வளைகுடா நாட்டில் வாழ்ந்து வந்தனர். பின்னர் இந்தியா திரும்பியதும் அலெக்சாண்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1951 விளவங்கோடு தொகுதியிலும் 1954 கொல்லங்கோடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

1957 ல் குளச்சல் தொகுதியில் போட்டியிட்ட லூர்தம்மாள் சைமன் காமராஜர் சட்டசபையில் உள்ளாட்சித் துறை மீன்வளத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

லூர்தம்மாள் மீன்வளத்துறை அமைச்சர் ஆனதும் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக 1959 இல் சீனாவிலிருந்து “வெள்ளி கெண்டை மீன்” ஜப்பானிலிருந்து “புல் கெண்டை மீன்” ஆகிய ரக மீன்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினார். இது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அரசியலோ அரசியல் – ராஜாஜியின் குலக்கல்வித் திட்டமும் வெகுண்டெழுந்த பெரியாரும்

லூர்தம்மாள் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் ஏட்டளவில் மட்டுமே இடம்பெற்றிருந்தது 1958 ல் இவரின் முயற்சியால் தான் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் உருவாக்கப்பட்டது உள்ளாட்சி அமைப்புகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது அதேபோன்று பெண்களை நியமன உறுப்பினர்களாக நியமித்து கொள்ளவும் வழிவகை செய்தவர் லூர்தம்மாள்

காமராஜர் கொண்டு வந்த இலவச மதிய உணவுத் திட்டத்தை “கேர்” என்கிற அமெரிக்க நிறுவனத்தின் உதவியுடன் பிற மாவட்டங்களிலும் பிரிவு கொடுத்தவர் இவரே. 1962 ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட லூர்தம்மாள் தோல்வியை சந்தித்தார் அத்துடன் தன் அரசியல் வாழ்வை முடித்துக்கொண்டு மீனவ சமுதாய மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார்

இரண்டாவது முறையாக காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் ராமநாதபுரத்தில் ஏற்பட்ட சாதிப் பூசல் காமராஜருக்கு தலைவலியை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் பல்வேறு சாதியினர் இருந்தபோதும் தேவர்கள், தேவேந்திர குல வேளாளர்கள், நாடார்கள் எண்ணிக்கை அதிகம். தேவர்களுக்கும் ஒடுக்கப்பட்ட  இனத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படும்.

அரசியலோ அரசியல் – காங்கிரஸின் தந்திர நடவடிக்கை

தேவர்கள் பெரும்பாலும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பார்வர்ட் பிளாக் கட்சியில் தான் இருப்பார்கள். தேவேந்திர குலத்தில் இளம் தலைவர் ஒடுக்கப்பட்டோர் பெரும்பாலும் இமானுவேல்சேகரன் பக்கம்தான். இமானுவேல் சேகரனுக்கு  நாடார்கள் ஒருபக்கம் ஆதரவு. முதுகுளத்தூர் சட்டமன்றம், திருவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இதில் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் தேவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் மீண்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் சசிவர்ணத்தேவரை நிறுத்தினார் தேவர் தேர்தல் நடைபெற்றது மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சி வெற்றி பெற்றது.

இருந்தாலும் காங்கிரஸ் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது இமானுவேல்சேகரன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்தார். இந்த கோபம் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தேவர்களுக்கு ஏற்பட்டது; கலவரம் வெடித்தது; பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஆட்சியர். தேவர், இமானுவேல் சேகரன், சௌந்தரபாண்டியன் நாடார் என பேச்சுவார்த்தை துவங்கியது சாதி மோதல்களைத் தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவு கல்வியறிவு இல்லாதவர்கள் அவர்களுக்கு படிக்கத் தெரியாது என்று துண்டு பிரசுரம் கொடுக்கும் பணியை ஆட்சேபித்தார் முத்துராமலிங்கத்தேவர்.

அரசியலோ அரசியல் – ராஜாஜியும் இந்தி திணிப்பும்

இமானுவேல்சேகரன் ஆத்திரம் அடைய வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தேவர்க்கு இமானுவேல் சேகரன் தனக்கு இணையாக அமர்ந்து பேசுவது பிடிக்கவில்லை அவரது ஆதரவாளர்களுக்கும் தான். ஒருவழியாக பேச்சுவார்த்தை முடிந்தாலும் தேவர் இன மக்கள் சார்பாக முத்து ராமலிங்க தேவர் கையெழுத்திடுவார் ஒடுக்கப்பட்ட  மக்கள் சார்பாக இமானுவேல்சேகரன் கையெழுத்திடுவார் இதில்தான் தேவர்களுக்கு பிரச்சனை

இமானுவேல் சேகரன் பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர் ராணுவத்தில் பணியாற்றியவர் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்களில் இணைந்து பணியாற்றியவர். இமானுவேல் சேகரனை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டால் இன்னும் வசதியாக இருக்கும் என நினைத்தார் காமராஜர். கக்கன் மூலம் அதையும் சரிசெய்தார். இது தேவர் ஆதரவாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. சமாதானமாக பேச்சுவார்த்தை முடிவில் தனக்கு சமமாக இமானுவேல் சேகரன் இருந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்  பணிக்கர் வேறு முடிவெடுக்கிறார். இருவரும் அரசு விதிகளை மதிப்பதாக தனித்தனியே கையெழுத்து பெறுகிறார்.

செப்டம்பர் 11   1957 இருக்கையில் தேவருக்கு இணையாக உட்கார்ந்ததால் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாடு தலைவர் மற்றும் விசுவாசிகளால் இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்படுகிறார் பின்னர் வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுதலை செய்கிறது. இந்த நேரத்தில் கலவரம் வெடிக்க இரண்டு தரப்பில் இருந்தும் பலர் படுகொலை செய்யப்படுகின்றனர். பல வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது கலவரம் வெடிக்கிறது இமானுவேல் சேகரன் கொலைவழக்கில் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிந்து தேவர் விடுதலை செய்யப்பட்டு வழக்கில் தொடர்புடைய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைதி திரும்பியது இது ஒரு பெரிய அரசியல் சார்ந்த நிகழ்வாக பார்க்கப்பட்டது.

அரசியலோ அரசியல் – காமராசர் ஆட்சியும் இமானுவேல் சேகரன் கொலையும்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்