ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியினரிடையே எதிர்ப்பு. திட்டத்தை கைவிடும்படி பலமுறை கட்சிக்காரர்கள் வற்புறுத்தியும் அசைந்து கொடுக்கவில்லை இராஜாஜி. அது அவரின் 50 ஆண்டுகால கனவு திட்டம் அல்லவா அதுவும் இல்லாமல் முதல்வர் பதவிக்கு அவர் போட்டியிடவில்லை காங்கிரஸ் மேலிடம் திட்டத்தை கைவிட அவரை வற்புறுத்தியது அதன் விளைவு தான் இந்த நிலை.
ஓமந்தூர் ராமசாமி முன்னாள் முதல்வர் இந்த கல்வித் திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். காமராஜருக்கு விருப்பமே இல்லை இந்த திட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விகே ராமசாமி முதலியார், கோசல்ராம், டி ஜி கிருஷ்ணமூர்த்தி, பஞ்சாட்சரம் செட்டியார், ஏ எம் சம்பத் என பெரும்படையே ராஜாஜிக்கு எதிராக காமராஜருக்கு பின்னால் நின்றது.
மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் காமராஜரின் ஆதரவாளருமான டாக்டர் வரதராஜூலு நாயுடு ராஜாஜி கல்வி திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்.
சரி காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே “புதிய கல்வித் திட்ட”த்திற்கு ஆதரவு இருக்கிறதா பார்த்துவிடலாம் காமராஜர் முடிவு செய்தார். கட்சிக்குள்ளே வாக்கெடுப்பு நடத்துவது இது கல்வித் திட்டத்திற்கு அல்ல ராஜாஜிக்கு செல்வாக்கு இருக்கிறதா? இல்லையா? என்று காமராஜர் நடத்திய சோதனை. 6 ஜனவரி 1964 தயாரானது வாக்கெடுப்புக்கு. முதல்வர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் ராஜாஜி வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
24 ஜூன் 1954 சட்டசபைக்கு வந்தார் ராஜாஜி எனக்கு உடல் நலம் சரியில்லை எனவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார். கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
1947 முதல் 1948 வரை வங்கதேச ஆளுநராகவும், 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும், 1951 முதல் 52 வரை உள்துறை அமைச்சராகவும், பணியாற்றியவர் ராஜாஜி. அதன் பின்னர் “சுதந்திராக் கட்சி”யைத் தோற்றுவித்தார் 1962 ….67 மற்றும் 1972 பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஒரு அணியை அமைத்து அதையும் வெற்றிபெறச் செய்து சுதந்திர இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி ஆட்சி செய்ய வித்திட்டவர் ராஜாஜி. ஆமாம் 1967 திமுகவின் வெற்றிக்கு முழு காரணமாக ராஜாஜி திறந்தார் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றார்.
பாதுகாப்புப் படையினரின் முகாம்களாகும் சமுதாயக் கூடங்கள் – காஷ்மீர் தலைவர்கள் கண்டனம்
ராஜாஜி ராஜினாமாவிற்கு பிறகு யார் முதல்வர்? சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது சி.சுப்பிரமணியத்தை தற்காலிக முதல்வராக தேர்ந்தெடுக்கலாம் ராஜாஜி கருத்து தெரிவித்தார். தற்காலிக முதல்வர் பதவி எல்லாம் தேவையில்லை அடுத்த பொதுத் தேர்தல் வரை ஒரு முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார் காமராஜர் 1954 மார்ச் 30 புதிய முதல் மந்திரிக்கான வாக்கெடுப்பு நடத்துவது என காங்கிரஸ் முடிவு எடுத்தது. முதல்-மந்திரியாக நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் வரதராஜுலு நாயுடு உள்ளிட்ட பல எம்எல்ஏக்கள் காமராஜரை வற்புறுத்தினர்.
தேர்தல் நடத்த ஆயத்தமானது காங்கிரஸ் தேர்தலை கண்காணிக்க டெல்லியில் இருந்து சிறப்பு பார்வையாளர் ஒருவர் அனுப்பப்பட்டிருந்தார் அவர் வேறு யாரும் இல்லை நேருவின் மகள் இந்திரா காந்தி மூத்த அமைச்சர் பக்தவச்சலம் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு சி.சுப்பிரமணியம் பெயரை முன்மொழிந்தார்.
டாக்டர் வரதராஜுலு நாயுடு காமராஜர் பெயரை முன்மொழிந்தார். இதற்கு முன்னர் காமராஜர் சுப்பிரமணியனை முன் நிறுத்துவதாக தான் இருந்தது அதுதான் ராஜதந்திரம் வாக்கெடுப்பு தொடங்கியது.
காமராஜருக்கு 93 வாக்குகள் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி சுப்பிரமணியம் 41 வாக்குகள். அடுத்த முதல்வர் காமராஜர் தான் ஏப்ரல் 13 1954 அன்று காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் .அடுத்து அமைச்சரவை பட்டியல் தயார் செய்ய வேண்டும் கோஷ்டி அரசியல் வளரக்கூடாது முடிவுசெய்தார் காமராஜர். தன்னை எதிர்த்து முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட சி சுப்பிரமணியத்தை அமைச்சர் ஆக்கினார். அது மட்டுமல்ல அவரை முன்மொழிந்த பக்தவச்சலத்தையும் மந்திரி ஆக்கினார். காமன்வீல் கட்சி மாணிக்கவேலர், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ராமசாமி படையாட்சி ஆகியோரும் அமைச்சரவையில் இடம் பெற்றனர்.
இஸ்லாமியர்களின் தொழுகை இடத்தில் கோவர்தன் பூஜை நடத்திய இந்துத்துவவாதிகள் – கலந்து கொண்ட பாஜக தலைவர்
பதவியேற்பு முடிந்தது முதலமைச்சராக பொறுப்பேற்ற காமராஜர் சட்டமன்ற உறுப்பினர் இல்லை. திருவில்லிபுத்தூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இப்போது சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் குடியாத்தம் தொகுதி காலியாக இருந்தது காமராஜர் போட்டியிட்டார். குடியாத்தம் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை அப்போது கம்யூனிஸ்ட் கட்சி பிரியவில்லை, காமராஜரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோதண்டராமன் போட்டியிட்டார். காமராஜரை விருதுநகர் பக்கம் போட்டியிட வலியுறுத்தினர் கட்சியினர். குலக்கல்வித் திட்டத்திற்கு காமராஜர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து திகவும், திமுகவும் காமராஜரை ஆதரித்தது ஆதரித்துப் பிரச்சாரம் செய்தனர். “குலக்கொழுந்தே குணாளா”என பாராட்டினார் அண்ணா. காமராஜர் வெற்றி பெற்றார்.
காமராஜர் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பரமேஸ்வரன் ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். அப்போதெல்லாம் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் கோயிலுக்கு செல்ல முடியாது அதுவும் பட்டியல் சாதியினர் என்றால் கனவில் கூட எண்ணிப் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட காலத்தில் ஒரு பட்டியல் சாதியினரை இந்து சமய அறநிலையத் துறைக்கு அமைச்சர் ஆக்கினார். அது காமராஜரின் சமூக நீதியின் வெளிப்பாடு.
சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர் வழக்குரைஞர், தலித் மக்களுக்காக குரல் கொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன். 1923 முதல் 1939 வரை சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர். 1900களில் தென்னாப்பிரிக்காவில் நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்ப்பவராக வேலை பார்த்தவர் பறையர் பள்ளர் என குறிப்பிட்ட சாதியினரை 1922ல் சட்டமன்றத் தீர்மானத்தின்படி “ஆதிதிராவிடர்” என அழைக்கும் அரசாணையை வெளியிட செய்தவர் இரட்டைமலை சீனிவாசன்.
1933 ஆம் ஆண்டு தலித்துகள் ஆலய நுழைவு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தவர் இரட்டைமலை சீனிவாசன். வாக்கெடுப்பில் வெற்றியும் பெற்றது. ஆனால் இந்துக்களின் சமய நம்பிக்கையை பாதிப்பதாக கூறி கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. 1930 ….32 இல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கருடன் பங்கேற்றவர் இரட்டை மலை சீனிவாசன். இவருடைய பேரன் தான் காமராஜர் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பரமேஸ்வரன்.
காமராஜர் முதலமைச்சர் ஆனதும் முதலில் செய்த வேலை ராஜாஜி கொண்டு வந்த புதுக்கல்வித் திட்டத்தை ரத்து செய்தது தான் எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொண்டு சிறந்த ஆட்சியை தொடங்கினார் காமராஜர்.
1955 மார்ச் 27 சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபம் சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பேசிய காமராஜர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அது கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. ஆம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இனி மதிய உணவை அரசே வழங்கும் அறிவிப்பு. இதனால் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானது அடுத்த அறிவிப்பு.
வரலாற்றை சார்வர்க்கருக்கு சாதகமாக எழுதாதீர்கள் – அருஞ்சொல் கட்டுரையும் ராஜன் குறை எதிர்வினையும்
1960 எஸ்எஸ்எல்சி வரை இலவசக்கல்வி இது போன்ற அறிவிப்புகள் மக்களிடையே காமராஜரை உயர்த்திக் காட்டியது. முதல்வர் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் விருதுநகரில் வசித்து வந்தார் அவருக்கு மாதாமாதம் காமராஜர் 120 ரூபாய் பணம் கொடுத்து வந்தார் காமராஜர். காமராஜர் வீடு இப்போது முதல்வர் வீடு. நிறைய பேர் வருகிறார்கள் வருகிறவர்களுக்கு காப்பி, டீ போட்டு கொடுக்க வேண்டும் ஒரு முப்பது ரூபாய் அதிகமாக கொடுத்தால் போதும் காமராஜர் அம்மா சிவகாமி எதிர்பார்த்தார். ஆனால் காமராஜர் கொடுக்கவே இல்லை. முதலமைச்சரின் அம்மா காமராஜரின் நண்பர் தனுஷ்கோடியை சந்தித்து தனக்கு ஒரு கழிப்பறை வேண்டும் கட்டித்தர சொல் காமராஜரை என்றார். தனுஷ்கோடியும் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தை விலைக்கு வாங்கி கட்டித் தரலாம் என காமராஜரிடம் கேட்டார். காமராஜர் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார். ஊரில் நான் ஏதோ சொத்து வாங்கிவிட்டதாக பேசுவார்கள் வேண்டாம் என மறுத்துவிட்டார். கோபமான தனுஷ்கோடி நீங்கள் பணத்தை எல்லாம் ஒன்றும் தர வேண்டாம் அனுமதி மட்டும் கொடுங்கள் என அனுமதி மட்டும் பெற்று கழிப்பிடத்தைக் கட்டித் தந்தார்.
எளிமையின் அடையாளமாக வாழ்ந்தவர் காமராஜர். சென்னை தியாகராயநகர் திருமலைப்பிள்ளை ரோட்டில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். முதலமைச்சர் பதவி ஏற்ற பின்னரும் வாடகை வீட்டிலேயே வசித்தார். உதவியாளர் வைரவன் உடன் இருந்தார். பொதுவாக காலை 6 மணிக்கு எழுந்திருப்பது செய்தித்தாள்கள் படிப்பது விருந்தினர்களை சந்திப்பது என இயல்பாக வாழ்ந்தார் காமராஜர்.
நிர்வாக வசதிக்காக சிறிய மாநிலங்களை ஒருங்கிணைப்பது என காங்கிரஸ் கட்சியும் நேருவும் முடிவெடுத்தனர். அப்படி எடுக்கப்பட்ட முடிவில் தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை உள்ளடக்கி “தட்சிணப்பிரதேசம்” அமைக்கலாம் என்ற முடிவு. இது ஏதோ நிர்வாக வசதிக்காக என்று சொன்னாலும் காங்கிரஸ் கட்சி வசதிக்காக என்றே சொல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியின் மீது கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் நம்பிக்கை இழக்க தொடங்கினர் காரணம் மக்களோடு கட்சி நெருக்கமாக இல்லாமல் போனது தான். கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவும் மக்களோடு நெருங்கி பழக ஆரம்பித்து அதனால் மக்களை நெருங்கவே காங்கிரஸ் மறைமுகத் திட்டம் போட்டது.
1956 “சென்னை மாகாணம்” என்று இருக்கும் பெயரை “தமிழ்நாடு” என மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது………………………
தொடரும்…………..
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.