Aran Sei

அரசியலோ அரசியல் – ராஜாஜியும் இந்தி திணிப்பும்

பிராமணர் அல்லாதோர்கான இயக்கமாக தொடங்கப்பட்ட  நீதிக்கட்சி இப்போது தலித்துகள், முஸ்லிம்கள், தொழிலாளர்கள் என பல சமூகத்தினரின் ஆதரவை இழந்து. பணக்காரர்கள், ஜமீன்தார்களை மட்டுமே பாதுகாக்கும் கட்சியாக மாறி இருந்தது. இதனால் நீதிக்கட்சி மக்கள் செல்வாக்கை இழந்தது தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெறாது என அறிந்த தலைவர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

காங்கிரஸ் கட்சி பலம் பொருந்தியதாக இருந்தாலும் கோஷ்டி பூசல் நிறைந்திருந்தது தேர்தலுக்கு முன்னர் சத்தியமூர்த்தியே கட்சியின் தலைவராக இருந்தார். அவரே முதல்வர் பதவிக்குத் தேர்வு ஆவார் என கருதப்பட்டது. ஆனால் நிலைமை வேறு மாதிரியாக ஆனது காங்கிரஸின் தேசிய தலைவர்கள் “ராஜாஜி”தான் முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என விரும்பினர் அவர்களின் விருப்பப்படியே சத்தியமூர்த்தியும் பதவியை விட்டுக் கொடுத்து விலகினார்.

நவராத்திரி திருவிழாவின் கடைசி நாளில் மோடி, அமித் ஷா கொடும்பாவி எரிக்கப்படும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

இதன்படி 1937 ஜூலை 15ஆம் தேதி ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் மந்திரி சபை அமைத்து ராஜாஜி முதல்வரானார். எம். பக்தவச்சலம் உள்பட 10 பேர் மந்திரிசபையில் இடம் பெற்றனர். சத்தியமூர்த்தி இடம்பெறவில்லை இந்தத் தேர்தலில் தான் பெருந்தலைவர் காமராஜர் விருதுநகர் உள்ளடக்கிய சாத்தூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதான் காமராஜரின் முதல் தேர்தல் வெற்றி.

ராஜாஜியை சேர்த்து 11 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றனர் ராஜாஜி பதவி ஏற்றதும் முதல் வேலையாக தான் பிறந்த சேலம் மாவட்டத்தில் மது விலக்கை அமல்படுத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக இது பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே மதுவிலக்கை அமல்படுத்திய முதல் மாகாணம் சென்னை மாகாணம் தான் இதற்கான கல்வெட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டிய வழக்கில் பாஜகவினரை விடுவித்தது ஏன்? – மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கேள்வி

இந்த நேரத்தில் தான் தமிழர்கள், தமிழ் மொழிக்கு எதிராக செயல்பட தொடங்கினார் ராஜாஜி. ஆம் பள்ளிகளில் “கட்டாய இந்தி”யை கொண்டுவந்தார் இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது தமிழக பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்புவரை கட்டாய பாடம் இந்தி என 21-4-1938 உத்தரவு பிறப்பித்தார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட தயாராகின.

மே மாதம் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் திருச்சியில் “தமிழ்ப்பாசறை” கூட்டம் நடந்தது இதில் பெரியார், கி.ஆ.பெ. விஸ்வநாதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 1938 ஜூன் மாதம் மூன்றாம் தேதி ராஜாஜி வீட்டுக்கு முன் மறியல் செய்தனர் போராட்டம் தொடங்கியது பலர் கைதானார்கள். பெரியார், அண்ணா போன்றோர் கைது நடராசன், தாளமுத்து ஆகியோர் சிறையில் மரணம் என இந்தி எதிர்ப்பு ராஜாஜி எதிர்ப்பாக தமிழகத்தில் மாறிப்போனது.

‘ஆக்கிரமிப்பாளர்கள் மனிதர்களை வீழ்த்துகிறார்கள் ஆட்சியாளர்களோ விமானங்களையே வீழ்த்துகிறார்கள்’ – ஏர் இந்தியா விற்பனை குறித்து சு.வெங்கடேசன் விமர்சனம்

இந்த நேரத்தில்தான் இரண்டாம் உலகப் போரில் இந்தியா பங்கேற்கும் விதம் காங்கிரஸ் கட்சிக்குத் திருப்தி அளிக்கவில்லை. 30 அக்டோபர் 1939 இல் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி அமைச்சரவை பொறுப்பில் இருந்து விலகியது அப்போது ராஜாஜியும் விலகினார். 1939 லிருந்து 1946 வரை ஆளுநர் ஆட்சி நடைபெற்றது 1940 ல் கட்டாய இந்தி உத்தரவும் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் அரசியல் சீர்திருத்தம் ஏற்பட இதற்கு முன்னர் இருந்த இரட்டை ஆட்சி முறையை நீக்கியது பிரிட்டிஷ் அரசு. நாட்டின் பாதுகாப்பு, நிதி போன்ற முக்கிய துறைகள் தவிர மற்ற துறைகள் நாட்டை ஆள்பவர்களுக்கே வழங்கப்பட்டது புதிய ஆட்சி மாநில சுயாட்சி என்றழைக்கப்பட்டது.

1937- 40 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது நீதிக்கட்சியின் முக்கிய பொறுப்புகளைப் பெரியார் வகித்தார். 13 நவம்பர் 1938 சென்னையில் “தமிழ்நாடு பெண்கள் மாநாடு” நடந்தது அந்த மாநாட்டில் மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை, டாக்டர் தர்மாம்பாள், ராமாமிர்தம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர் அந்த மாநாட்டில்தான் ஈ.வெ.ராவுக்கு “பெரியார்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

ஏர் இந்தியா – வரலாறும் செயல்பாடுகளும்

நீதிக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெரியாரைப் பதவியிலிருந்து இறக்க ஒரு குழு திட்டமிட்டது. 1940 ல் இருந்து அவர் கட்சி மாநாட்டை நடத்துவதில்லை என குற்றச்சாட்டு முன்வைத்தனர். உடனே பெரியார் சேலத்தில் மாநாடு நடத்த முடிவெடுத்தார். ஆகஸ்ட் 27  1944 சேலத்தில் மாநாடு நடைபெற்றது. இதற்கு முன்னர் நீதிக்கட்சியில் ஒரு குழு கூடி சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செல்லாது என அறிவித்தனர் மீறி சேலம் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான் நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

* கட்சி உறுப்பினர்கள் பிரிட்டிஷ் அரசு அளித்த விருதுகளையும் பதவிகளையும் “ராவ் பகதூர்” “திவான் பகதூர்” போன்ற அனைத்து பட்டங்களையும் துறக்க வேண்டும்.

*அவர்கள் வகிக்கும் அரசு பதவிகளில் இருந்து விலக வேண்டும்.

*பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும்.

*”நீதிக்கட்சி” இனி “திராவிடர் கழகம்” என்று அழைக்கப்படும்.

இந்த நான்கு தீர்மானங்களும் முக்கியமானவை நீதிக்கட்சியில் பெரும்பாலும் வசதி படைத்தவர்களே அங்கம் வகித்தனர் அதனால் அது பணக்கார கட்சி என்ற பார்வை இருந்தது. ஆனால் திராவிடர் கழகம் என்று மாறியபோது பாட்டாளி மக்களும், இளைஞர்களும் பெருவாரியாக சேர்ந்தனர். திராவிடர் கழகத்தில் பெரியாருக்கு அடுத்தபடியாக பெரிய தலைவராக “அண்ணா” உருவாகி இருந்தார் அவரது பேச்சாற்றல் லட்சக்கணக்கான இளைஞர்களையும், பொதுமக்களையும் இயக்கத்திற்கு இழுத்து வந்தது.

‘இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே இதயமே’ – பிறைசூடனுக்கு அஞ்சலி

மாணவர்களாக இருந்த இரா. நெடுஞ்செழியன் அன்பழகன், கே ஏ மதியழகன், மற்றும் மு கருணாநிதி அரங்கண்ணல் ,தில்லை வில்லாளன் போன்றோர் தலைவர்களாக உருவானார்கள் கடவுள் மறுப்பு கொள்கை பகுத்தறிவு, சுயமரியாதை, என பயணித்தது திராவிடர் கழகம்.

இந்தநிலையில் 1946ஆம் ஆண்டு இரண்டாவது பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டது பிரிட்டிஷ் அரசு 215 இடங்களுக்குத் தேர்தல் நீதிக்கட்சி இப்போது திராவிட கழகம் ஆகி இருந்தது ஆனால் நீதிக்கட்சி கலைக்கப்படவில்லை இந்த நிலையில் பி.டி ராஜன் பி ராமச்சந்திர ரெட்டி ஆகியோர் தலைமையில் நாங்கள் தான் உண்மையான நீதிக்கட்சி என கட்சியை வழி நடத்தினர். 1952 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்டது நீதிக்கட்சி. பி.டி ராஜன் மட்டும் வெற்றி பெற்றார். பின்னர் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. நீதிக்கட்சி 1968 இல் சென்னையில் தன் பொன்விழா ஆண்டைக் கொண்டாடிய இந்தக் கட்சி பி.டி ராஜன் மறைவுக்குப் பிறகு செயலற்றுப் போனது. 1946 தேர்தல்………..

அரசியலோ அரசியல் – ராஜாஜியும் இந்தி திணிப்பும்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்