Aran Sei

அரசியலோ அரசியல் – ராஜாஜியின் குலக்கல்வித் திட்டமும் வெகுண்டெழுந்த பெரியாரும்

ந்திர மகாசபை உருவானது” இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழ்நாடும், ஆந்திராவும் “சென்னை மாகாணம்” என்ற பெயரில் ஒரே மாநிலமாக இருந்தது. ஹைதராபாத் சமஸ்தானம் சுதந்திர நாடாக இருக்கும் என ஹைதராபாத் நிஜாம் (மன்னர்) அறிவித்தார். இப்படி ஒவ்வொரு மன்னராக, ஜமீனாக அறிவித்தால் இந்தியா மீண்டும் சிதறிவிடும் எனவே காவல்துறையை அனுப்பி நிஜாம் மன்னரைப் பணிய செய்தார் வல்லபாய்படேல் .

ஐதராபாத்தில் 9 மாவட்டங்களில் தெலுங்கர்கள் பெரும்பான்மையாக வசித்து வந்தனர். சென்னை மாகாணத்தில் 12 மாவட்டங்களில் தெலுங்கர்கள் வசித்து வந்தனர். ஐதராபாத் சென்னை மாகாணத்தையும் ஒன்றாக இணைத்து ஆந்திர மாநிலம் அமைக்க வேண்டும் என்று தெலுங்கர்கள் வற்புறுத்தினார்கள். காரணம் நிறைய அதில் ஒன்று இதற்கு முன்னர் சென்னை மாகாண முதல்வராக அமைச்சர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் தெலுங்கர்களே. ராஜாஜி முதல்வர் ஆனதும் தெலுங்கர்கள் தனி மாநில கோரிக்கை தீவிரமடைந்தது. அவர்களுக்கு சென்னையை விட்டுக் கொடுக்க மனமில்லை அதனால்தான் அவர்களின் கோரிக்கை முழக்கத்தின் பிரதானமாக இடம் பெற்ற முழக்கம் “மெட்ராஸ் மனதே”.

இந்த நிலையில் தனி ஆந்திர மாநில கோரிக்கையை ஏற்று 1952 அக்டோபர் 13-ம் தேதி “பொட்டி ஸ்ரீராமுலு” உண்ணா விரதத்தை மேற்கொண்டார். 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலு 1952 டிசம்பர் 15 ஆம் தேதி உயிரிழந்தார். கலவரம் மூண்டது நேரு பயந்தார் இப்போது தனி ஆந்திரா கோருபவர்கள் முழக்கம் வேறுமாதிரியாக இருந்தது “ஆந்திர தேசம் காவால. “அரவ ராஜாஜி சாவால”

அரசியலோ அரசியல் – காங்கிரஸின் தந்திர நடவடிக்கை

ஆந்திரா மாநிலம் மட்டும் கேட்கவில்லை புதிய ஆந்திர மாநிலத்தின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும். இல்லை என்றால் கூவம் தான் எங்களின் எல்லை. வடசென்னையை ஆந்திராவுக்கு கொடுத்துவிட வேண்டும் இது தெலுங்கர்களின் கோரிக்கை. தமிழர்களின் முழக்கம் இப்படி இருந்தது.

“தணிகை பகுதி தமிழர்களுடையதே”

“வேங்கடத்தை விடமாட்டோம்'”

“திருக்காளத்தியை திரும்பப் பெறுவோம்”

இப்படி முழக்கமிட்டு தமிழர்கள் போராட்டம் தொடங்கியது. ஒருவழியாக டிசம்பர் 19 1952இல் பிரதமர் நேரு சென்னை மாகாணத்தில் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் அமைக்கப்படும் என அறிவித்தார் 1953 அக்டோபர் 1 ஆந்திர மாநிலம் அமைந்தது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற ராஜாஜி அரசு பணிகளில் ஆதிதிராவிடர்களுக்கு 8 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். அவர்கள் அரசுப் பணியில் சேர வயது வரம்பை 27 ஆக உயர்த்தினார். தஞ்சையில் விவசாயிகளுக்கு உதவ “பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை” கொண்டு வந்தார். எல்லாம் சரி பொதுக் கல்வித் திட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்தார் அதுதான் ராஜாஜியின் உண்மை முகத்தைக் காட்டியது.

அரசியலோ அரசியல் – உதயமானது திராவிட முன்னேற்றக் கழகம்

ராஜாஜி இதற்கு வைத்த பெயர் “புதுக் கல்வித்திட்டம்” இந்த திட்டத்தை கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் நம் மனதில் நாற்பது ஐம்பது ஆண்டுகள் உருவான திட்டம் என அறிவித்தார். என்ன திட்டம் அது கிராமப்புற பள்ளிக்கூடங்களில் துவக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிநாள் பள்ளியிலும் மீறினால் தங்களின் தந்தையின் பாரம்பரிய தொழிலையும் கற்க செலவழிக்க வேண்டும். இதுதான் அந்த பொதுக் கல்வித் திட்டம் ராஜாஜி பொதுக் கல்வித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திட்டம் என்ன சொல்கிறது என்றால் உழவன் மகன் உழவுத் தொழில்தான் செய்ய வேண்டும், வண்டி இழுப்பவன் மகன் வண்டி இழுக்கத்தான் வேண்டும், முடிவெட்டுகிறவன் மகன் முடிவெட்டும் தொழில் தான் செய்யவேண்டும். துணி துவைக்கிறவன் மகன் துணி துவைக்கதான் வேண்டும். அப்போது யார் படிக்க வேண்டும்? என்கிற கேள்வி எழுகிறது இல்லையா ஆம் கோயிலில் புரோகிதம் செய்கிற பார்ப்பனர்கள் பிள்ளைகள் தான் படிக்க வேண்டும். இதுதான் பொதுக் கல்வித் திட்டம். ஆனால் இந்த திட்டத்திற்கு திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். நண்பராக ராஜாஜி இருந்தாலும் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் பெரியார்.

இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டில் ராஜாஜி பேசிய பேச்சு “அவரவர் சாதி தொழிலை அவரவர் செய்து வரவேண்டும் எல்லா மக்களுமே படிப்பது என்றால் அத்தனை பேருக்கும் வேலை எங்கே இருக்கிறது ஆதலால் சாதிமுறை நல்லதுதான்” என பேசினார் ராஜாஜி.

அரசியலோ அரசியல் – ராஜாஜியும் இந்தி திணிப்பும்

ராஜாஜியின் இந்த பேச்சு எதிர்கட்சிகளை இன்னும் கோபம் அடைய செய்தது.ஆந்திரா உடன் இணைக்கப்பட்ட சித்தூர் மாவட்டத்தை தமிழ்நாட்டு பகுதியுடன் மீண்டும் இணைப்பதற்காக எல்லா கட்சிகளின் ஆதரவையும் திரட்டினார் மா.பொ.சி அந்த வகையில் போராட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி கொடுத்தார். முட்டாள்தனமாக தமிழர்கள் போராடுகிறார்கள் என்கிற அளவில் நேரு நொந்துகொண்டார். அதற்கு முன்னர் “வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்ற முழக்கத்தோடு இயங்கி வந்தது திமுக. காரணம் “கல்லகுடி” பெயர் மாற்ற விவகாரம் திருச்சி அருகே உள்ள கல்லக்குடியில் டால்மியா என்கிற வட நாட்டுக் காரர் சிமெண்ட் தொழிற்சாலை அமைத்தால் அங்கு உள்ள ரயில் நிலையத்திற்கு “டால்மியாபுரம்” என்ற பெயர் வைத்திருந்தனர்.அந்தப் பெயரை மீண்டும் கல்லக்குடி என்று மாற்ற வேண்டும் அண்ணா உத்தரவிட்டார் கருணாநிதி தலைமையில் போராட்டம் நடத்த. இதுபோன்ற திமுகவின் போராட்டத்திற்கு “நான்சென்ஸ்” என்று நேரு கூறியதற்கு ஒரு ரயில் மறியல் போராட்டம் நடத்த வேண்டும் எனவும் திமுக முடிவு செய்தது. அத்தோடு ராஜாஜி கொண்டுவந்த “குலக்கல்வித் திட்டத்தை” எதிர்த்து ராஜாஜி வீட்டு முன் ஈவிகே சம்பத் தலைமையில் மறியல் செய்யவும் உத்தரவிட்டார் அண்ணா.

இந்தப் போராட்டங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றி கொண்டிருக்கும்போதே போலீஸ் கமிஷனர் அருள் பெரும் போலீஸ் படையுடன் வந்து அண்ணா, நெடுஞ்செழியன், ஈவிகே சம்பத், மதியழகன், என்.வி. நடராஜன் ஆகியோரை கைது செய்தது.

1953 ஜூலை 14 ராஜாஜி வீட்டு முன் மறியல் செய்யத் திட்டமிட்டு அதற்கு தலைமையாக இருக்கக்கூடிய ஈவிகே சம்பத் கைது செய்யப்பட்டதால் சத்தியவாணிமுத்து மறியல் நடத்த சென்றார் நிறைமாத கர்ப்பிணியாக அவரும் கைது செய்யப்பட்டார். அடுத்தது டால்மியாபுரம் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் கல்லக்குடி என்று எழுதப்பட்ட தாளை கருணாநிதி ஒட்டினார் காவல்துறை கண்டுகொள்ளவில்லை அடுத்தது கருணாநிதி, முல்லை சக்தி, கஸ்தூரி, குமாரவேல், குழந்தைவேல் ஐந்து பேரும் தண்டவாளத்தின் குறுக்கே தலை வைத்து படுத்தனர் நீதிபதி, கலெக்டர் என உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் கருணாநிதி போராட்டத்தை கைவிடவில்லை பின்னர் கைது செய்யப்பட்டார். அடுத்து கண்ணதாசன் தலைமையில் அதே இடத்தில் ரயில் மறியல் இப்போது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது ரத்தம் சொட்ட சொட்ட கண்ணதாசனின் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அடுத்து தூத்துக்குடி, சென்னை, கோவை, திருவண்ணாமலை, சிதம்பரம் போன்ற இடங்களில் ரயில் மறியல் போராட்டம் சுமார் 5 ஆயிரம் பேர் கைது. டால்மியாபுரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை. அண்ணாவுடன் கைதானவருக்கு 3 மாதம் சிறை தண்டனை. பல இடங்களில் ராஜாஜிக்கு கருப்புக் கொடி கண்டன முடிவை மாற்றிக்கொள்ளவில்லை ராஜாஜி.

அரசியலோ அரசியல் – நீதிக்கட்சி வரலாறு

குலக்கல்வித் திட்டத்திற்கு சட்டமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்பு. கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், திமுக போன்ற கட்சிகள் ஒன்றிணைந்தது. எதிர்ப்பு அணி பிரம்மாண்டமாய் அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டது 29 ஜூலை 1953 ராஜாஜி கல்வித் திட்டத்தை கைவிட கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு முடிவு சமமாக இருந்தது காரணம் திமுக போன்ற கட்சிகள் சட்டமன்றத்திற்கு உள்ளே இல்லை. அடுத்த தீர்மானம் குழு ஒன்றை நியமித்து ஆய்வு செய்தது தீர்மானம் வெற்றியடைந்தது. மகாராஷ்டிராவை சேர்ந்த கல்வி நிபுணர் “பருலேக்கர்” தலைமையில் குழு அமைத்து ராஜாஜி குழு ஆய்வு செய்யும், திட்டம் செயல்படும் என அறிவித்தார் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ராஜாஜிக்கு எதிர்ப்பு கிளம்பியது.

ஆந்திர மாநிலம் உருவானது ஆனால் எல்லைப் போராட்டம் நீடித்தது மாபொசி அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தார் காங்கிரஸ் கட்சியின் உள் அமைப்பாக “தமிழரசு”க் கழகத்தை நிறுவி தமிழர் உரிமைகளுக்காகப் போராடினார். எல்லை பிரிவினையில் திருப்பதி யாருக்கு என போராட்டம் தொடங்கியது. ஆந்திரர்கள் திருப்பதி ஆந்திராவில் தான் இருக்க வேண்டும் என்றனர் இல்லை இதற்கு முன்னர் திருப்பதி வட ஆற்காடு மாவட்டத்தில்தான் இருந்தது அதனால் திருப்பதி தமிழ்நாட்டில் தான் இருக்கும் என்றனர் தமிழர்கள். இப்போது சென்னை ஆந்திராவுக்கு என போராட்டம் ஆரம்பித்தது “தலை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்” மாபொசி முழக்கம். அடுத்து திருத்தணி, திருத்தணி ஆந்திராவுக்கு அல்ல  1953 ல் திருத்தணியில் மறியல் போராட்டத்தை நடத்தினார் மா பொ சி போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர் எல்லையை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தார் மாபொசி. பின்னர் ராஜாஜி வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் ஒருவழியாய் சென்னை தமிழ்நாட்டிற்கும் திருப்பதி ஆந்திராவுக்கும் திருத்தணி இரண்டு மாநிலத்துக்கும் சென்றடைந்தது

அரசியலோ அரசியல் – ராஜாஜியின் குலக்கல்வித் திட்டமும் வெகுண்டெழுந்த பெரியாரும்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்