Aran Sei

அரசியலோ அரசியல் – காங்கிரஸின் தந்திர நடவடிக்கை

காங்கிரஸ் கட்சி வன்னியர்களுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை அதனால் புதுக்கட்சி தொடங்குகிறோம் என்று தொடங்கப்பட்ட “தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி” வெற்றி பெற்றவுடன் அமைச்சர் பதவி தருவதாக காங்கிரஸ் சொன்னவுடன் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்டார் ராமசாமி படையாட்சியார்.ஆனால் ஏ கோவிந்தசாமி அப்படி செய்யவில்லை கோவிந்தசாமி க்கும் அமைச்சர் பதவி ஆசை காட்டியது காங்கிரஸ் அதை அவர் ஏற்கவில்லை. சட்டமன்றத்தில் திமுக உறுப்பினராகவே செயல்பட்டார் உதயசூரியன் சின்னத்தில் முதன்முதலில் போட்டியிட்ட வரும் இவரே இவர் மூலமாகத்தான் திமுகவிற்கு உதயசூரியன் சின்னம் கிடைத்தது. கோயிந்தசாமி பரிந்துரையின் பேரில்தான் 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவினருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்போதுகூட உதயசூரியன் சுயேட்சை சின்னம் தான் அதன் பின்னர் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தான் உதயசூரியன் அங்கீகரிக்கப்பட்ட திமுகவின் நிரந்தர சின்னமானது.

’தமிழ்நாட்டு மீணவர்கள் மீது இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல்’ – கண்டித்து மே17 இயக்கம் போராட்டம்

1952 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்தது. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் 167 இடங்களை பிடித்து இருந்தது எனவே மந்திரிசபை அமைக்க எதிர்க்கட்சிகள் தயாராகிக்கொண்டிருந்தது யாரை முதல்வராக முன்னிறுத்துவது ஒரு வழியாக முடிவானது காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய டி பிரகாசம் தான் என முடிவானது அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்தவர் ஸ்ரீ பிரகாசா இவர் நேருவின் பள்ளித் தோழர் கவர்னரை சந்தித்து ஆந்திர கேசரி பிரகாசம் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு மெஜாரிட்டி இருக்கிறது தன்னை முதலமைச்சராக பொறுப்பேற்க அழைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நடந்தது வேறு பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார் கவர்னர். அதிகாரத்திற்கு வந்ததும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது காங்கிரஸ். சுதந்திரமடைந்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது மெஜாரிட்டி இல்லை என மெஜாரிட்டி யை பெறுவதற்கு முயற்சிகளை எடுக்க ஆரம்பித்துவிட்டது காங்கிரஸ். அதற்காக சுயேட்சைகளுக்கு அமைச்சர் பதவி கூட கொடுக்க தயாரானது காங்கிரஸ். அப்படித்தான் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி கலைத்து ராமசாமி படையாட்சி காங்கிரஸில் இணைந்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு பெரிய மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத மந்திரி சபையை அமைந்தால் கௌரவம் பாதிக்கப்படும் காங்கிரஸ்க்கு என நினைத்த காங்கிரஸ் பல சூழ்ச்சிகளை செய்தது முதல்வரை நிர்னையிக்கும் பொறுப்பு காமராஜர், சஞ்சீவி ரெட்டி, குமாரசாமி ராஜா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான நீண்ட பயணம் – பாகம் 2 – மீனா கந்தசாமி

ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர். 1952 ல் நாடு குடியரசானது கவர்னர் ஜெனரல் பதவி ஒழிக்கப்பட்டது ராஜாஜி அரசியலை விட்டு ஒதுங்கி போவதாக அறிவித்திருந்தார். அப்போது ராஜாஜி குற்றாலத்தில் தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்தார் அரசியலில் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ராஜாஜியின் ஆதரவு தேவை என நினைத்தார் காமராஜர் தூதுக்குழுவுடன் குற்றாலத்தில் தங்கியிருந்த ராஜாஜியை சந்தித்தார். முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் யோசித்து சொல்வதாக தெரிவித்தார் ராஜாஜி. கடந்த முறை முதல்வராக இருந்த பி எஸ் குமாரசாமி ராஜா இந்த தேர்தலில் தோல்வி அடைந்து இருந்தார்.

முதல்வராக வேண்டும் என்றால் சட்டமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும் ராஜாஜி சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்ன செய்வது நேருவுக்கு தொலை பேசினார் ராஜாஜி சட்டமன்றத்தில் உறுப்பினரானால் தான் முதல்வர் பதவி ஏற்க முடியும். வேறு வழி மேல்சபை உறுப்பினர் ஆவது அதற்காக வழி செய்யுங்கள் என்றார் காபந்து முதல்வராக பி.எஸ் குமாரசாமி ராஜா பொறுப்பேற்றார் ராஜாஜியை மேல்சபை உறுப்பினராக்க குமாரசாமி ராஜா கவர்னருக்கு பரிந்துரை செய்தார் நேரம் பார்த்திருந்த கவர்னர் கட்டளையிட்டார் ராஜாஜி மேல்சபை உறுப்பினர் ஆனார் குமாரசாமி ராஜா ஒரு காபந்து முதல்வர் அவரின் பரிந்துரை செல்லாது கூச்சலிட்டார்கள் கம்யூனிஸ்டுகள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை கவர்னர் ராஜாஜி ஆட்சி அமைக்க அழைத்தார் காமன்வீல் கட்சி தலைவர் மாணிக்கவேலுவுக்கு நில வரித்துறை அமைச்சர் பதவி என முடிவு செய்து அமைச்சர் பட்டியல் வெளியானது பதவி ஏற்றுக் கொண்டனர். சி. ராஜகோபாலாச்சாரியார் முதலமைச்சர் ஆனார்.

தொடரும் சாதியப் பாகுபாடு – சேலத்தில் ஒடுக்கப்பட்டவருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சலூன் உரிமையாளர்

திருமதி. ஜோதி வெங்கடாசலம். மதுவிலக்கு மற்றும் மகளிர் நலத் துறை.உள்ளிட்ட அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டது நாடு குடியரசு ஆகி முதல் தேர்தல் முதல் அமைச்சரவை இந்த அமைச்சரவையில் தான் முதன் முதலாக ஒரு பெண் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் அவர் வேறுயாருமல்ல “ஜோதி வெங்கடாசலம்” மகளிர் நலத் துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர். ஜோதி வெங்கடாசலம் தமிழக அமைச்சரவையில் இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்தவர் நாடு விடுதலை பெற்ற பிறகு முதல் பெண் அமைச்சர் பின்னர் கேரளத்தின் முதல் பெண் ஆளுநர். 1930களிலே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர். அன்றைய பர்மாவின் ரங்கூனில் பிறந்தவர் ஜோதி. ஊறுகாய் சுவை பொருட்கள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் குடும்ப பின்னணி கொண்டவர்.

அரசியலோ அரசியல் – ராஜாஜியும் இந்தி திணிப்பும்

பெண்கள் நலத்துறை பொது சுகாதாரம் போன்ற துறைகளில் அமைச்சராக பொறுப்பேற்ற ஜோதி வெங்கடாசலம் ராஜாஜி ஆட்சி காலத்தில் “முதல்வர் வைட்டமின் உணவுத் திட்டம்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்த திட்டத்தின்படி நான்கு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு வைட்டமின் உணவு வழங்கப்பட்டது. 1989இல் அதன் பிறகு திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் சத்துணவுத் திட்டத்தின் கீழ் முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது இந்த திட்டத்தின் தொடர்ச்சியே. குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை கொண்டு முத்தடுப்பு ஊசி போட உத்தரவிட்ட வரும் ஜோதி வெங்கடாசலம் தான்.

தமிழகம் முழுவதும் தொழில் நோய் பரவியிருந்த நேரம் தமிழகம் முழுவதும் தொழுநோய் கட்டுபாட்டு மையங்களை நிறுவி புதிய மருத்துவ முறையை நடைமுறைப்படுத்தியவர் ஜோதி வெங்கடாசலம். தமிழக காவல்துறையில் பெண்களுக்கான தனிப்பிரிவு வேண்டும் என்று முதலில் பரிந்துரைத்த வரும் இவரே. பல பெண்கள் சங்கங்களை நிறுவி ஏழை, எளிய, படிப்பறிவு இல்லாத பெண்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கினார் ஜோதி வெங்கடாசலம். இவரது குடும்பம் சென்னை “அட்கின்ஸ்” சாலையிலிருந்தது. அவரது இறப்பிற்குப் பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள அட்கின்ஸ் சாலைக்கு ஜோதி வெங்கடாசலம் சாலை என பெயர் சூட்டப்பட்டு இன்றும் இந்த சாலை உள்ளது. அமைச்சராக அதுவும் முதல் பெண் அமைச்சராக பொறுப்பேற்று ராஜாஜி அமைச்சரவையில் சிறந்து விளங்கியவர் ஜோதி வெங்கடாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைந்து விட்டது அடுத்து பிரச்சினை ஆரம்பமானது இப்போது ஆந்திர மாநிலம் வேண்டி ஆந்திரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அரசியலோ அரசியல் – காங்கிரஸின் தந்திர நடவடிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்