Aran Sei

முதல்வர் நேர்காணல்: ‘ஊழல் புகார் விவாதத்திற்கு நான் தயார், ஸ்டாலின்தான் சாக்கு சொல்லி தப்பிக்கிறார்’

மிழக முதல்வரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தி இந்து இதழுக்கு அளித்த நேர்காணல்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்டது. அதிலிருந்து நீங்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்? அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் விஷயத்தில், அந்தத் தேர்தல் முடிவுகள் எந்தெந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தின. உதாரணமாக, காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலங்களாக அறிவிப்பது, மருத்துவ படிப்பு சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது போன்றவற்றில்?

தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயற்கை. ஜனநாயகத்தில், மக்களின் தீர்ப்பே இறுதியானது. எங்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. எங்கள் கட்சியானது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா ஆகியோரால் வழிநடத்தப்பட்டது. ஒரேயொரு வெற்றியோ தோல்வியோ, அதன் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், தமிழக மக்களின் நலனுக்காக வடிவமைக்கப்பட்ட எங்கள் கொள்கைகளிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.

’தான் ‘ முதல்வர் வேட்பாளர்’ என்று பழனிசாமி மட்டும் தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்’ – ஸ்டாலின்

2021 சட்டமன்றத் தேர்தல் உங்களுக்கு முக்கியமானது. காரணம், அதிமுக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும், மக்களவைத் தேர்தலில் ஒரு பின்னடைவை எதிர்கொண்டது. அதைத்தொடர்ந்து, கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை எதிர்கட்சியான திமுக பெற்றது. இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது வெற்றியை மக்கள் உங்களுக்கு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை உங்களுக்கு எது தருகிறது?

கடந்த 10 ஆண்டுகளில், மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதுதான் எங்கள் நம்பிக்கை. நிச்சயமாக இம்முறையும் அதிமுக ஹாட்ரிக் வெற்றிபெறும் என்று நம்பிக்கை இருக்கிறது.

தர்மயுத்தம் 2.0 – களை கட்டும் அதிமுக

உங்கள் கூட்டணியில் ஏதேனும் மாற்றங்களை நடைபெறும் என்று நீங்கள் முன்கூட்டியே கனித்து வைத்திருக்கிறீர்களா? அதாவது, தொகுதி பங்கீடு போன்றவை தொடர்பாக?

கண்டிப்பாக கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுடைய வேறுபட்ட கொள்கைகளால், சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தேர்தல்கள் அறிவிக்கப்படும் போது மட்டுமே தொகுதி பங்கீடு போன்ற பிரச்சினைகள் எங்களுக்குள் விவாதத்திற்கு வரும். எங்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து ஊடகங்களில் வரும் கணக்குகள் எல்லாம் அதிகாரப்பூர்வமற்றதும் வெறும் ஊகங்களும் தான். அதற்கெல்லாம் எங்கள் கட்சி பொறுப்பேற்க முடியாது.

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – குளறுபடிக்கு முற்று வைத்த கே.பி. முனுசாமி

பாஜகவுடனான கூட்டணி என்பதே ஒரு தேர்தல் நேர கடமையாக தான் இருக்கிறது என்று அதிமுகவில் உள்ள சிலரே எண்ணுகிறார்களே? அந்தக் கருத்தை பிரதிபளிப்பது போலவே, நீங்களும் கட்சி ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் மாற்றுக்கருத்துகளை பரிசீலிக்காமல்,  ஒருதலைப்பட்சமாக பாஜகவுடனான கூட்டணியில் தொடர்வதாக அறிவித்தீர்கள். ஏன்?

முந்தைய மக்களவைத் தேர்தலின் போது, எங்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட கூட்டணியே இப்போது தொடர்கிறது. மேலும், பாஜகவுடனான கூட்டணி குறித்து எங்கள் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. இதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தான், உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் கூட்டணியை தொடர்வது குறித்து அறிவித்தோம்.

‘முதியோர் பென்சன் திட்டத்தில் அதிமுக முறைகேடு ’ – பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நீங்கள் முன்மொழியப்பட்டதை, பாஜகவில் உள்ள பல தலைவர்கள் ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்களோ என்ற எண்ணத்தை தொடர்ந்து அவர்கள் கொடுத்து வருகின்றனர். இது களப்பணியில் உள்ள அதிமுக மற்றும் பாஜக கட்சி உறுப்பினர்களிடையே  ஒரு விரிசலை உருவாக்கி, தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்துமா?

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக கட்சி மட்டுமே தேசிய ஜனநாயக் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறது. மேலும், தமிழ்நாட்டில் இந்தக் கூட்டணியானது,  அதிமுக தலைமையிலான கூட்டணி என்று மட்டுமே அறியப்படுகிறது. அதிமுகவால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் வேட்பாளரே கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார். இது குறித்து மாற்றுக் கருத்தே இல்லை.

இன்னும் சொல்லப்போனால், திங்கள்கிழமை கூட பாஜகவின் தமிழ்நாடு பொறுப்பாளரான சி.டி. ரவி, ’கூட்டணியில் முக்கிய கட்சியாக இருக்கும் அதிமுக தான் முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்யும்’ என்று கூறியிருந்தாரே.

’அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்றுக்கொள்ளும்’ – பாஜக மேலிடப் பொறுப்பாளர்

2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 165 தொகுதிகளில் போட்டியிட்டதை போல இந்தத் தேர்தலிலும் பெரும்பான்மை தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்று எதிர்பார்க்கலாமா? இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளை வெல்லும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

அதிமுக போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கையைப் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. இதுகுறித்து, எங்கள் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே, தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். நாங்கள் வெல்லப்போகும் இடங்களின் எண்ணிக்கை இதுதான் என்று ஒரு எண்ணிக்கையை இப்போது கூற முடியாது. இருந்தாலும், நிச்சயமாக அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்.

‘கருவூலத்தைக் காலி செய்த அரசு; கடன் வாங்கி பொங்கல் பரிசு’- பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் குற்றச்சாட்டு

நீங்களும் திமுக தலைவர் ஸ்டாலினும் தனியார் தேர்தல் பிரச்சார நிறுவனத்தை, உங்கள் பரப்புரைக்கு பணியமர்த்தியுள்ளீர்கள். நீங்கள் அடிமட்டத்திலிருந்து வேலை செய்து வந்திருக்கிறீர்கள்.  பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கும் பெரிய அரசியல் கட்சிகள் கூட, அதன்  தொண்டர்களை விட இதுபோல தனியார் பிரச்சார நிறுவனங்களை நம்புவது அவசியமானதாக இருக்கிறதா?

மக்களை தவறாமல் சந்திக்கும் கட்சிக்காரர்கள், களத்தில் உள்ள உண்மைகளை நன்கு அறிவார்கள். அவர்கள்தான் தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளுக்காக போராடுகிறார்கள். ஆகவே, களநிலவரம் பற்றி எங்கள் கட்சி தொண்டர்கள் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்தல்களை எதிர்கொள்ளும் உத்திகளை உருவாக்கி வருகிறோம். அதே நேரத்தில், சமகால தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போலவும், இந்த உத்திகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

’நான் ஏ டீம்; ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு சொல்கிறேன் – கமல்ஹாசன் ஆவேசம்

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உங்கள் மீதும் உங்கள் அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒரு பட்டியலை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த விவாதம் செய்வதற்கு நீங்கள் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்ள, சில நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார்…..

எங்களுக்கு எதிராக பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்லி, ஆளுநரிடம் புகார் அளித்தவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இந்தக் குற்றச்சாட்டுகள்  குறித்து மட்டுமே விவாதத்திற்கு அவரை அழைக்கிறேன். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகளைப் பற்றி நாம் எவ்வாறு விவாதிக்க முடியும்?

எடப்பாடி பழனிசாமி vs மு.க.ஸ்டாலின் – ஒரே மேடையில் விவாதம்? சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்

அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அவர் சாக்குகளை சொல்லி, விவாதத்திற்கு வர மறுத்து வருகிறார். அந்தப் பட்டியலில் உள்ள குற்றச்சாட்டுகளில், திருநெல்வேலியில் சாலை அமைப்பது தொடர்பான புகாரும் ஒன்று.  அதற்கான டெண்டர்  ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்பதற்கு இது ஒன்று போதும்.

கடந்த திமுக ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பாக்ஸ் டெண்டர் முறையை பின்பற்றாமல், இப்போது வெளிப்படையான இணைய வழி டெண்டர் முறையை பின்பற்றுகிறோம். அதில் யார் வேண்டுமானாலும் ஏலம் எடுப்பதற்கான டெண்டரை சமர்ப்பிக்க முடியும். அதில் தகுதியானவர்கள் டெண்டர் பெறுகிறார்கள். இவை அனைத்தும் அதிகாரிகளின் மட்டத்தில்தான் நடைபெறுகின்றன.  இது முதல்வரின் கைக்கு கூட வராது.

முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் – நடவடிக்கை எடுக்க திமுக மனு

உண்மையைச் சொல்வதானால், திமுக ஆட்சியின் போது தான் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டுவதற்கான மதிப்பீடு இரண்டு மடங்காக உயர்ந்தது. திமுக மீது உள்ள இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கும், தேர்தல் நேர அரசியலில் ஒரு மைலேஜ்ஜை பெறுவதற்கும்தான், எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மக்கள் முன் வைத்து அவர்களை குழப்பப் பார்க்கிறார்.

முதல்வர் நேர்காணல்: ‘ஊழல் புகார் விவாதத்திற்கு நான் தயார், ஸ்டாலின்தான் சாக்கு சொல்லி தப்பிக்கிறார்’

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்