Aran Sei

விவசாயிகள் போராட்டம்: மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையம்

விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையம், இரண்டு தரப்பும் அதிகபட்ச பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

குடியர தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், ஓரு தரப்பு விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லியை ஒட்டி, போராட்டம் நடைபெற்று வரும் மாவட்டங்களில், ஹரியானா மாநில அரசு இணைய சேவையை நிறுத்தியது.

பீமா கோரேகான் செயல்பாட்டாளர்களை விடுதலை செய்யுங்கள் – இந்தியாவிடம் ஐ.நா வலியுறுத்தல்

இணைய சேவை துண்டிக்கப்பட்டது தொடர்பாக, சிஎன்என் தொலைகாட்சியின் இணையதளத்தில் வெளியான செய்தியை குறிப்பிட்டு, பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் “இதுகுறித்து நாம் ஏன் பேசுவதில்லை?” என்று அவர் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது. இதைத்தொடர்ந்து, சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா துன்பர்க், நடிகை மியா கலிஃபா உட்பட சர்வதேச பிரபலங்கள் பலர் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.

இந்திய வெளியுறுத்துறை இந்த கருத்துகள், இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிடும்படி இருப்பதாக கூறிய நிலையில், சில இந்திய விளையாட்டு வீரர்களும், நடிகர்களும், உள்துறை அமைச்சகத்தின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில், தங்கள் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தனர்.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையம் அதிரடி

இந்நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையம், விவசாயிகள் போராட்டம் குறித்து டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது. அதில், “நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில், அதிகாரிகளும் போராடுபவர்களும், அதிகபட்ச பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “அமைதியான முறையில் கூடுவது மற்றும் கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமை, அனைத்து வகையிலும் பாகாக்கப்பட வேண்டும்” என்றும் அதில் கூறப்படுள்ளது.

அனைத்து வகையிலும் மனித உரிமைகளை மதித்து, ஒத்த முடிவை எட்ட வேண்டியது மிகவும் அவசியம் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, கவிஞர் வரவர ராவ் மற்றும் செயல்பாட்டாளர் ஸ்டேன் சாமியை, இந்திய அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று, சமீபத்தில் ஐ.நா மனித உரிமை அலுவலகம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் போராட்டம்: மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்