தன்னை பாரதிய ஜனதா கட்சிக்காரர் என்று கூறிக்கொள்ளும் ஒருவர், கடைக்காரர்களை மிரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
@Mark2Kali என்ற டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், “மதக்கலவரமாகும்” என்று ஒருவர் கூறுவதுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. தான் பாஜகவை சேர்ந்தவன் என்று கூறும் அந்த நபர், மற்றொருவரை காட்டி “நான் அவனை கன்ட்ரோல் பண்ணி வச்சிருக்கேன். அவன் இந்து முன்னணி ஆளு” என்று கூறுகிறார்.
சாப்ட சிக்கன் ரைசுக்கு காசு கேட்டா அமித்ஷாவுக்கு போன் போடுவானாம்.. யோவ் சங்கி @annamalai_k என்னய்யா இது 😂 pic.twitter.com/v9k9DyGRU5
— ɱąཞƙ2ƙąƖı (@Mark2Kali_) January 12, 2021
மது அருந்தியதாக தோன்றும் அந்த நபரை சிலர் சமாதானம் செய்ய முயல்கிறார்கள். ஆனால், சமாதானம் அடையாத அந்த நபர் “பாஜககாரன் என்றால் ஒரு மரியாதை இல்லையா” என்றும் “இந்தியாவையே ஆளும் ஒரு கட்சிக்கு மரியாதை இல்லையா” என்றும் கேட்பது பதிவாகியுள்ளது.
ஒரு கட்டத்தில், ரோந்து வாகனத்தில் வந்திறங்கும் காவல்துறையினரிடம் அந்த நபர் பேசுகின்றார். ஒரு காவலர் அவரை சமாதானம் செய்ய முயல்கிறார், அப்போது அவர் “மதக்கலவரம் ஆயிடும். இந்தியாவுல” என்று காவல்துறையின் முன்னிலையிலேயே கூறுகிறார். ஆனால், காவலர்கள் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவரை சமாதானம் செய்ய முயல்வதையே அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
“அமித் ஷா (உள்துறை அமைச்சர்) பிஏவுக்கு ஃபோன போடுவேன்… கலவரம் ஆயிடும்… ஆயிரம் பேர் ரெடியா இருக்காங்க” என்று அங்கிருக்கும் கடைக்காரர்களை மிரட்டும் தொனியில் அவர் பேசுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், அப்போதும் அங்கிருக்கும் காவல்துறையினர், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவரை சமாதானப்படுத்தவே முயற்சி செய்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
இறுதியாக, இருக்கர வாகனத்தை ஒருவர் ஓட்ட, அதன் பின்னால் அமர்ந்து அந்த நபர் அந்த இடத்தை விட்டு செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
வெறுப்பு அரசியலின் அடியாள் – யார் இந்த ‘தீபக் சர்மா’? – அலிஷான் ஜஃப்ரி
வீடியோவில் உள்ள காட்சிகள் மற்றும் பிறர் கூறுவதை வைத்து பார்க்கும் போது, இந்த நிகழ்வு, சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள முத்தையா தெருவில் நடந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. இஸ்லாமியர்களை மிரட்டும் வகையிலும், இரு பிரிவினருக்கிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசிய அந்த நபரின் பெயர், புருஷோத் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.