Aran Sei

பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு – கன்னட படத்திலிருந்து 14 காட்சிகள் நீக்கம்

பிராமண சமூகத்தின் எதிர்ப்பை தொடர்ந்து, ‘போகரு’ என்ற கன்னடப் படத்திலிருந்து, 14 காட்சிகளை நீக்குவதற்கு படக்குழு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.

த்ருவா சர்ஜா கதாநாயகனாக நடித்துள்ள அந்தப் படத்தின் ஒரு காட்சியில், பிராமணர் ஒருவரின் தோள் மீது, படத்தின் நாயகன் காலை வைப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்து கடவுள்களை அவமதித்த குற்றச்சாட்டு : தாண்டவ் படக்குழுவினர் மீது வழக்கு

இந்த கட்சி உட்பட, படத்தில் இடம் பெற்றுள்ள மேலும் பல காட்சிகளும் வசனங்களும், பிராமணர்களை இழிவுபடுத்துவதாக அந்த சமூகத்தினர் குற்றம்சாட்டியுள்ளதாக தி வயர் கூறுகிறது.

செவ்வாய்கிழமையன்று (பிப்ரவரி 23), கன்னட திரைப்பட வர்த்தக சபை மற்றும் கர்நாடகா பிராமணர்கள் வளர்ச்சி வாரியத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய 14 காட்சிகளை நீக்குவதற்கு திரைப்படக் குழு ஒப்புக்கொண்டதாக தி நியூஸ் மினிட் கூறியுள்ளது.

‘தாண்டவ்’ வெப் சீரிசை தொடர்ந்து ‘மிர்சாப்பூர்’ தொடருக்கு எதிர்ப்பு – தடை செய்ய கோரும் மனுவில் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

முன்னதாக, சர்ச்சைக்குரியதாக கூறப்படும் காட்சிகளை நீக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என்று பிராமண சமூகத்தினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தவறுதலாக அந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், உள்நோக்கத்துடன் அவை சேர்க்கப்படவில்லை என்றும் கூறியுள்ள இயக்குனர் நந்த கிஷோர் அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளதாக தி நியூஸ் மினிட் தெரிவித்துள்ளது.

பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு – கன்னட படத்திலிருந்து 14 காட்சிகள் நீக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்