Aran Sei

உணவுப் பழக்கத்தில் பிரிவினையை உருவாக்கும் முயற்சி – தெற்கு டெல்லி நகராட்சியின் வினோத உத்தரவு

ணவகங்கள், தங்கள் கடைகளில் விற்கப்படும் இறைச்சி, “ஹலால்” செய்யப்பட்டதா அல்லது “ஜத்கா” செய்யப்பட்டதா என்பதை, வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று, தெற்கு டெல்லி நகராட்சி உத்தரவிட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நகராட்சி மன்றத் தலைவர் நரேந்திர சௌலா “மக்களுக்கு, தாங்கள் எதை உண்கிறோம் என்பதை தெரிந்துகொள்வதற்கு உரிமை உள்ளது. இறைச்சி உணவை வழங்கும் அனைத்து உணவகங்களும் “ஹலால்” அல்லது “ஜத்கா” என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளோம். இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட அனைத்து உணவகங்களுக்கும் தெரிவிக்கவுள்ளோம்” என்று கூறியுள்ளார் என தி வயர் தெரிவித்துள்ளது.

‘ஹலால் முறையில் விலங்குகளை கொல்ல தடை விதிக்க முடியாது’ – உச்சநீதி மன்றம்

நகராட்சியின் இந்த உத்தரவு, உணவகங்கள் மற்றும் இறைச்சி தொழில் நடத்துபவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இவ்வாறு அடையாளப்படுத்துவதன் நோக்கம் என்ன என்று அவர்கள் கேள்வி எழுப்புவதாகவும் தி வயர் கூறுகின்றது.

விலங்குகளை இறைச்சிக்காக வெட்டும் போது கடைபிடிக்கப்படும் முறையின் அடிப்படையில், அது “ஹலால்” அல்லது “ஜத்கா” என்று வகைப்படுத்தப்படுகிறது. பொதுவாக, இஸ்லாமியர்கள் “ஹலால்” முறையில் வெட்டப்பட்ட இறைச்சியையே உண்பார்கள்.

தற்போது, பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு டெல்லி நகராட்சியின் இந்த உத்தரவால், உணவகங்கள், இரண்டு வகையிலும் வெட்டப்பட்ட இறைச்சியைத், தனித்தனியாக வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உணவு உரிமையில் தலையிடும் வலதுசாரிகள் : பின்வாங்கிய ‘பேக்கிரி’ நிர்வாகம்

குறிப்பாக இஸ்லாமியர்கள் மட்டும் “ஹலால்” முறையில் வெட்டப்பட்ட இறைச்சியை கேட்பார்கள் என்றும், இந்துக்களை பொருத்தவரை, “ஹலால்” முறையில் வெட்டப்பட்ட இறைச்சியை உண்பதில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை என்றும் உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக தி வயர் கூறுகின்றது.

ஆகவே, தற்போதைய உத்தரவால், இரண்டு வகையில் வெட்டப்பட்ட இறைச்சியை வைத்திருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதால், தேவையற்ற குழப்பமும், அதிகப்படியான செலவும், இறைச்சி வீணாவதும் நடக்கும் என்று உணவக உரிமையாளர்கள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு, வாரங்களுக்கு முன்னர், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, ‘விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனம்’, ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சியில் “ஹலால்” என்ற வார்த்தை இடம்பெறத் தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவுப் பழக்கத்தில் பிரிவினையை உருவாக்கும் முயற்சி – தெற்கு டெல்லி நகராட்சியின் வினோத உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்