Aran Sei

“விவசாயிகளை ஏமாற்ற வழி சொல்லுங்கள்” – பாஜக தலைவர்களிடம் ஆலோசனை கேட்ட தொண்டர்கள்

ரியானாவை சேர்ந்த பாஜக தொண்டர்கள், “விவசாயிகளை ஏமாற்ற வழி சொல்லுங்கள்” என்று. பாஜக தலைவர்களிடம் கேட்கும் காணொளி, சமூக வலைதங்களில் பகிரப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, அந்த காணொளியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், பாஜக தொண்டர் ஒருவர், “நாம் சொல்வதை கேட்க விவசாயிகள் தயாராக இல்லை… அவர்களை ஏமாற்ற வேண்டும். தயவு செய்து அதற்கு ஒரு வழியை சொல்லுங்கள்” என்று கூறுவது பதிவாகியுள்ளது.

இந்த காணொளியை பகிர்ந்துள்ள ரந்தீப் சிங் ஜர்ஜேவாலா “இதுதான் பாஜகவின் உண்மை முகம், ஆனால் இதை அவர்கள் விவசாயிகளிடம் காட்டுவதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் குர்கானில் இந்த கூட்டம் நடைபெற்றதாகவும், இதில் அந்த மாநிலத்தின் பாஜக தலைவர் ஓ.பி.தன்கர், விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங், ஹிசார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிஜேந்திர சிங் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி, டெல்லி எல்லைகளில் சுமார் 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசுக்கும் விசாயிகளுக்கும் நடைபெற்ற 11 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

“விவசாயிகளை ஏமாற்ற வழி சொல்லுங்கள்” – பாஜக தலைவர்களிடம் ஆலோசனை கேட்ட தொண்டர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்