பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் வெறுப்பு மூன்று அடிப்படை உணர்வுகளால் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
• தங்கள் தாயகத்தின் இடிபாடுகளில் நிறுவப்பட்ட ஒரு குடியேற்ற-காலனித்துவ நிறவெறி அரசான இஸ்ரேலை பாலஸ்தீனியர்கள் வெறுக்க நியாமான பல காரணங்கள் உள்ளன. ஆனால் இஸ்ரேல் ஏன் பாலஸ்தீனியர்களை இவ்வளவு வெறுக்கிறது? பாலஸ்தீனியர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பிறகு, அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மறுத்து, அவர்களைத் துன்புறுத்தும் வகையில், திட்டமிட்டு அச்சுறுத்தி, முற்றுகையிட்டு, சிறையில் அடைத்துள்ள போதும் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை வெறுப்பது ஏன்?
- தெளிவான பதில் சரியான விடையாக இருக்காது. ஆம், இஸ்ரேல் பாலஸ்தீனிய வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை வெறுக்கிறது. இது ஒரு சில இஸ்ரேலியர்களை விட அதிகமாக ஈர்த்துள்ளது. ஆனால் இது கடந்த வார இறுதியில் நடத்தியது போல், பழிவாங்கும் மற்றும் முன்னெச்சரிக்கை போர்களை நடத்தி, பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய மொத்த வன்முறை மற்றும் அரச பயங்கரவாதத்துடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை.
என் கருத்துப்படி, பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் வெறுப்பு, பயம், பொறாமை, கோபம் ஆகியவை மூன்று அடிப்படை உணர்வுகளால் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
பயம் ஒரு முக்கிய காரணி – அது பகுத்தறிவற்றதாக இருக்கலாம் ஆனால் கருவியாகவும் இருக்கலாம். இஸ்ரேல் பாலஸ்தீனியர்களின் அனைத்து நிலங்களையும் ஆக்கிரமித்து, இந்தப் பகுதியின் அணுஆற்றல் வல்லரசாக மாறிய பிறகும் அவர்கள் மீது தொடர்ந்து அஞ்சுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் பாலஸ்தீனியர்கள் மீதான அதன் பயம் வெறும் உடல் அல்லது பொருள் சார்ந்தது அல்ல, அது இருத்தலியல் சார்ந்தது.
ஏன் அனைத்து இஸ்ரேலியர்களும் கோழைகளாக இருக்கிறர்கள் என்ற ஒரு பொருத்தமான தலைப்பின் கீழ் 2014 இல், ஒரு இஸ்ரேலிய கட்டுரையாளர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். நிராயுதபாணியான பாலஸ்தீனிய இளைஞர்களை நீண்ட தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லும் கோழைத்தனமான இராணுவம் உருவானது எப்படி என்று அவர் அதில் வியப்புடன் கேட்கிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2018 இல், இஸ்ரேலியப் படையினர் நூற்றுக்கணக்கான நிராயுதபாணி எதிர்ப்பாளர்களை, பல நாட்கள் சுட்டுக் கொன்றபோது பலத்த பாதுகாப்புகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பதைப் பார்ப்பது உண்மையில் அதிசயமானது.
ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?
இஸ்ரேல் அடிப்படையில் 2005 ஆம் ஆண்டு மீண்டும் எழுந்த பயத்தில் காஸாவை விட்டு வெளியேறியது. அங்கு வாழும் 20 லட்சம் அகதிகள் மீது மனிதாபிமானமற்ற முற்றுகையை விதித்தது. தான் கீழமையாக கருதும் பாலஸ்தீனிய உறுதிப்பாடு, பாலஸ்தீனிய ஒற்றுமை, பாலஸ்தீனிய ஜனநாயகம், பாலஸ்தீனிய கவிதைகள் மற்றும் மொழி உட்பட அனைத்து பாலஸ்தீன தேசிய சின்னங்கள் மற்றும் இதற்கெல்லாம் மேலாக தான் தடை செய்ய முயற்சிக்கும் பாலஸ்தீனிய கொடி ஆகிய அனைத்தையும் கண்டு இஸ்ரேல் அஞ்சுகிறது. இஸ்ரேல் குறிப்பாக, பாலஸ்தீனிய தாய்மார்கள் புதிய குழந்தைகளைப் பெற்றெடுப்பதைக் கண்டு அஞ்சுகிறது. இது “மக்கள்தொகை அச்சுறுத்தல்” என்று அழைக்கிறது. பாலஸ்தீனிய இனப்பெருக்கம் மீதான இந்த இஸ்ரேலிய தேசிய ஆவேசத்தை எதிரொலிக்கும் வகையில், ஒரு வரலாற்றாசிரியர் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஒரு அணுஆற்றல் மிக்க ஈரானைப் போலவே இந்த மக்கள்தொகை பெருக்கம் யூத அரசின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாகும். அவரது பார்வையில், பாலஸ்தீனியர்கள் 2040-2050 க்குள் பெரும்பான்மையாக மாறக்கூடும் என்பது அதில் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
“இராணுவத்தால் இணைக்கப்பட்ட நாடு” என்று அழைக்கப்படும் இராணுவ ஆட்சி நடத்தும் இஸ்ரேல் போன்ற நாட்டிற்கும் அச்சம் இயற்கையாக உள்ளது. ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் இஸ்ரேலில் தனது பல ஆண்டு கால அனுபவத்தைப் பற்றி சுருக்கமாக தனது புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “இன்றைய அரசாங்கம் அச்சத்தைத் தூண்டுகிறது. அவற்றில் பெரும்பாலானவை கற்பனையானவை அல்லது குறைந்தபட்சம் மிகைப்படுத்தப்பட்டவை. இஸ்ரேலை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட, தனிமையான, அச்சுறுத்தலுக்கு உள்ளான, சிறிய நாடாக சித்தரிக்கிறார்கள். தற்காப்பு, எப்பொழுதும் வெறுப்பின் அடுத்த அறிகுறியை எங்காவது தேடும். அது மிகையாக எதிர்வினையாற்ற ஆர்வமாக இருக்கும்.மொத்தத்தில், அச்சம் வெறுப்பை உருவாக்குகிறது. ஏனென்றால் மற்றொரு இஸ்ரேலிய பார்வையாளரின் வார்த்தைகளில் கூறுவதானால், “எப்போதும் அச்சப்படும் ஒரு அரசு சுதந்திரமாக இருக்க முடியாது; போர்க்குணமிக்க மீட்பரியம் (மெசியானிசம்) மற்றும் அசிங்கமான இனவெறியால், நிலத்தின் பழங்குடி மக்களுக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட ஒரு அரசு, உண்மையிலேயே சுதந்திரமாக இருக்க முடியாது.
பூர்வ குடிகள், புலம் பெயர்ந்தவர்கள் – இஸ்லாமியர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் நிகழ்ச்சி நிரல்
”இஸ்ரேல் கோபமாக இருக்கிறது. பாலஸ்தீனியர்கள் கொடுக்கவோ, விட்டுக்கொடுக்கவோ மறுத்ததற்காக, விலகிச் செல்லாததற்காக, வெகு தொலைவில் செல்லாததற்காக எப்போதும் கோபமாக இருக்கிறது. 1948 முதல் இஸ்ரேல் தனது அனைத்து எண்ணங்களுக்காகவும், நோக்கங்களுக்காகவும் நடத்திய அதன் அனைத்துப் போர்களிலும் வெற்றி பெற்று, வல்லரசாக மாறியுள்ளது. அரபு அரசுகள் அவமானத்தில் தலைகுனிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மேலும் இன்று வரை இஸ்ரேலிய வெற்றியை பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து மறுக்கிறார்கள். அவர்கள் அடிபணிய மாட்டார்கள். அவர்கள் சரணடைய மாட்டார்கள். மாறாக என்ன வந்தாலும் தொடர்ந்து எதிர்ப்பார்கள்.
இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசுகளை அதன் சட்டைப்பையில் வைத்துள்ளது. அதன் பின்னால் ஐரோப்பா மற்றும் அரபு ஆட்சிகள் அதை உறிஞ்சுகின்றன. ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட – மற்றும் மறக்கப்பட்ட – பாலஸ்தீனியர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவது ஒருபுறம் இருக்கட்டும், அதற்கும் மேலாக தங்கள் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள். இஸ்ரேலின் கைகளில் இவ்வளவு அப்பாவிகள் இரத்தம் உறைந்து இருப்பது, அதுவும் எந்தப் பயனும் இல்லாமல் இருப்பது அதற்கு எரிச்சலூட்டுவதாக இருக்க வேண்டும். அது பாலஸ்தீனியர்களின் அன்பான அனைத்தையும் கொன்று, சித்திரவதை செய்கிறது, சுரண்டுகிறது, கொள்ளையடிக்கிறது. ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பல ஆண்டுகளாக அவர்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்களை சிறையில் அடைத்துள்ளது. ஆனால் பாலஸ்தீனியர்கள் சரணடைய மறுக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து ஏங்குகிறார்கள். சுதந்திரம் மற்றும் விடுதலைக்காக போராடுகிறார்கள். இஸ்ரேல் ஒரு காலனிய நாடாக அதன் சொந்த அழிவை தேடிக்கொள்ளும் என பலரும் அழுத்தமாக கூறுகின்றனர். இஸ்ரேல் பாலஸ்தீனியர்களின் உள்ளாற்றலையும், வெளிப்புற பெருமையையும் பற்றி பொறாமை கொள்கிறது. அவர்களின் வலுவான நம்பிக்கைகள் மற்றும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதைக் கண்டு பொறாமை கொள்கிறது. இது இன்றைய இஸ்ரேலியர்களுக்கு ஆரம்பகால இஸ்ரேலிய தேசியவாதிகளை (சியோனிஸ்டுகளை) நினைவூட்டுகிறது. இன்றைய இஸ்ரேலிய கட்டாய இராணுவத்தினராக மாறிய இயந்திரமயமான படைவீரர்கள் (ரோபோகாப்கள்) தங்கள் கவச வாகனங்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு வீரத்துடன் வெற்று நெஞ்சை நிமிர்த்தி வரும் ஆயுதங்களற்ற பாலஸ்தீனியர்களை எதிர்கொள்கிறார்கள். கோழைத்தனமாக பழிவாங்கும் எண்ணத்துடன் சுடுகிறார்கள்.
‘இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய இயலாது’ – அருந்ததி ராய்
பாலஸ்தீனியர்களின் வரலாற்று, கலாச்சார உடைமைக் கண்டு இஸ்ரேல் மிகவும் பொறாமை கொள்கிறது. பாலஸ்தீனியர்களின் நிலத்தின் மீதான அவர்களின் பற்றுதலை போலவே, யூதர்களை காலனித்துவ குடியேற்றக்காரர்களாக ஆக்குவதற்கு இஸ்ரேலிய தேசிய வாதம் மூலம் ஒரு இணைப்பை உருவாக்க வேண்டியிருந்தது. இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை வெறுக்கிறது. ஏனெனில் அவர்கள் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறும் நிலப்பரப்பின் வரலாறு, புவியியல், நிலப்பரப்பின் இயற்கை ஆகியவற்றுடன் மிகவும் ஒருங்கிணைந்தவர்களாக இருக்கிறார்கள். இஸ்ரேல் தனது இருப்பை நியாயப்படுத்த நீண்ட காலமாக இறையியல் மற்றும் புராணங்களை நாடி வருகிறது. பாலஸ்தீனியர்களுக்கு அவ்வாறு நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மிகவும் சிரமமின்றி, மிகவும் வசதியாக, மிகவும் இயல்பாக தங்களுக்கு சொந்தமானவை மீது உரிமை கொண்டாடுகிறார்கள்.
தெருக்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் நகரங்களின் பெயர்களை கூட மாற்றியமைத்து, பாலஸ்தீனிய இருப்பின் அனைத்து தடயங்களையும் அழிக்க அல்லது புதைக்க இஸ்ரேல் முயன்றது. “ஒரு வெற்றியாளரால் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் மறுகட்டமைப்பு செய்வதற்கு, அதன் துல்லியமான இணைகளைக் கண்டறிய, ஒருவர் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த ஸ்பெயினுக்கு அல்லது பைசண்டைன் பேரரசுக்குத் திரும்ப வேண்டும்,” என்கிறார் ஒரு இஸ்ரேலிய வரலாற்றாசிரியர்.
மக்கள் இல்லாத நிலத்தில் குடியேறும் நிலம் இல்லாத மக்கள் என்ற இஸ்ரேலிய தேசியவாதத்தின் அடித்தளமான, சிறந்த புராணக்கதை மற்றும் உண்மையில் வன்முறை மற்றும் காலனித்துவவாதிகள் என்பனவற்றை வாழ்க்கை ஆதாரமாகக் கொண்ட இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை வெறுக்கிறது. முழுமையான வரலாற்றுப் பின்னணிக் கொண்ட பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய தேசியவாதக் கனவை நனவாக்குவதற்கு இடையூறாக பாலஸ்தீனம் இருப்பதாலேயே இஸ்ரேல் அவர்களை வெறுக்கிறது. குறிப்பாக தங்கள் ஆசையை நிராசையாக்கிய காசாவில் வசிப்பவர்களை அது வெறுக்கிறது.
இஸ்லாமியர் போராட வேண்டுமா ஒதுங்கிச் செல்ல வேண்டுமா? – ஆர். அபிலாஷ்
ஆனாலும், இதையெல்லாம் பெருமைப்படுத்துவது தவறு. வெறுப்பை விட அன்பு எப்போதும் சிறந்தது. வெறுப்பு அழிவுகரமானது. மேலும் அது வெறுப்பை அதிகமாக்குகிறது.. வெறுப்பு, வெறுப்பவர்களுக்கும் வெறுக்கப்பட்டவர்களுக்கும் அழிவுகரமானது. கடந்த கால வன்முறைக்கு பரிகாரம் செய்யவும், குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்கவும், பாலஸ்தீனியர்களின் துன்பங்களுக்கு ஈடு செய்து, அவர்கள் தங்கள் தாய்நாட்டில் சமமானவர்களாகவும், ஏன் முன்னுரிமைப் பெற்ற சமமானவர்களாகவும் கூட அவர்களை மரியாதையுடன் நடத்தத் தொடங்கும் தைரியம் இருந்தால் மட்டுமே இஸ்ரேல் அந்த வெறுப்பை சகிப்புத்தன்மையாகவும், பொறாமையைப் பாராட்டாகவும், கோபத்தை இரக்கமாகவும் மாற்ற முடியும்.. இஸ்ரேலின் வெறுப்பு பாலஸ்தீனியர்களை வெளியேற்றாது, ஆனால் அது யூதர்களை விரட்டி விடும். அதுவும் வெகு தூரத்திற்கு.
www.aljazeera.com இணையதளத்தில் ஊடகவியலாளர் மர்வான் பிஷாரா எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்
மாணவியின் பெற்றோருடன் Stalin பேச்சு | Kallakurichi Sakthi School | Adv Milton interview | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.