1926 இல் நடைபெற்ற மூன்றாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 132 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எந்தக் கட்சியையும் சாராதவர் 22 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நீதிக் கட்சி சேர்ந்த ஒருவர். அரசு அதிகாரிகள் 11 பேர் என 34 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமிக்கப்பட்டனர். நியமன உறுப்பினர்கள் உட்பட நீதிக்கட்சிக்கு 21 இடங்களே கிடைத்தன.
சீனிவாச ஐயங்கார் தலைமையிலான சுயராஜ்ய கட்சி 41 இடங்களைக் கைப்பற்றியது. இந்த முறை பி .சுப்புராயன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஏ.அரங்கநாத முதலியார் வளர்ச்சித் துறை அமைச்சராகவும், ஆர். என். ஆரோக்கியசாமி பொது சுகாதாரத்துறை அமைச்சராகவும், முத்தையா முதலியார் பொது சுகாதாரத்துறை அமைச்சராகவும்,எம். ஆர். சேதுரத்தினம் அய்யர் வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். பிராமணரல்லாதோர் என்கிற ஒரு அமைப்பை நிறுவி நீதிக் கட்சியாக உருப்பெற்று பிராமணரல்லாதோர் அமைச்சரவை அமைத்தப்பின்னும் பின்னாளில் தோல்வியைச் சந்தித்தது நீதிக்கட்சி.
1930 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் போட்டியிடவில்லை. நீதிக்கட்சியின் அரசரும் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் தான் நான்காவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் சாராத வேட்பாளர்களே அதிகம் வெற்றி பெற்றார்கள். 35 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 45 இடங்களில் போட்டியிட்டு நீதிக் கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றது. சுப்புராமன் தலைமையிலான இன்டிபென்டன்ட் நேஷனல்ஸ் கட்சி பத்துக்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றது. ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால் சுயராஜ்ஜிய கட்சி போட்டியிடவில்லை. இந்த முறை “திவான்பகதூர் முனுசாமி நாயுடு” நீதிக்கட்சியின் சார்பில் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த அமைச்சரவை இரண்டு ஆண்டு காலமே நீடித்தது. இந்தத் நேரத்தில் பார்ப்பனர்களையும் நீதிக் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஒரு விவாதம் ஏற்பட்டது அப்போது முனுசாமி நாயுடு கட்சியின் தலைவராக இருந்தார். 1930 ஜூன் மாதம் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில் பார்ப்பனர்களை இணைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாகவே 1932 நவம்பரில் முதலமைச்சராக பொறுப்பேற்றார் ராமகிருஷ்ண ரங்காராவ்.
கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்
1933 ஆம் ஆண்டு இரட்டை ஆட்சி முறையை நீக்குவது என இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. அதனால் நான்காவது சட்டமன்றத்தின் காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது இந்த நிலையில் சைமன் கமிஷன் அறிக்கை வெளிவரத் தாமதமானதால் 1933இல் தேர்தல் நடைபெறவில்லை. பொப்பிலி அரசர் மந்திரி சபை நீடித்தது 1936 வரை பொப்பிலி அரசர் முதல்வராக நீடித்தார் அதன்பிறகு பொப்பிலி அரசர் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அப்போது பி டி ராஜன் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
1936 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியில் இருந்து “கஞ்சம்” மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கியது தொடர்பாக 1919ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு ஒரு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தைக் காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை. அதனால் தேர்தலில் பங்கேற்கவில்லை. அந்தச் சட்டத்தை எதிர்த்துக் காங்கிரஸ் பல போராட்டங்களை நடத்தியது எனவே இந்த இரட்டை ஆட்சிமுறையை முடிவுக்குக் கொண்டுவர நினைத்தது இங்கிலாந்து அரசு. அதன்படி “சர் ஜான் சைமன்” தலைமையில் ஒரு குழு அமைத்தது இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து பலதரப்பினரிடம் ஆலோசித்து இங்கிலாந்து சென்ற சைமன் குழு வட்டமேசை மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தி 1937இல் இந்தியாவிற்கு மாநில சுயாட்சி அதிகாரத்தை வழங்கியது. அதுவரை காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. அதன்பிறகுதான் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பிய பொப்பிலி அரசர் மீண்டும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
கேரளாவில் கிருஷ்ணர் படங்களை வரையும் இஸ்லாமியப் பெண் – கோயிலுக்குள் அழைத்து மரியாதை செய்த இந்துக்கள்
1937ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய இந்திய அரசுச் சட்டம் இயற்றப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்தியாவின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக முதன்முதலில் இந்தத் தேர்தலில்தான் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில்தான் நீதிக் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பலத்த போட்டி. ஒவ்ஒருவரின் சொத்து மதிப்பு அவரவர் கட்டியுள்ள வரியைப் பொறுத்தே வாக்குரிமை வழங்கப்பட்டது.
தேசியவாதியான காங்கிரஸ் இரட்டை ஆட்சி முறை இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் உரிமைகள் திருப்தி அடையாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி ஆகியோர் சுயராஜ்ய கட்சியைத் தொடங்கி போட்டியிட்டனர். 1935 ல் சுயராஜ்ய கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் அதிகாரபூர்வமாக இணைத்தனர். காங்கிரஸ் முதல் தேர்தலிலேயே பலமாக போட்டியிட்டது. 215 இடங்களில் காங்கிரஸ் 156 இடங்களில் வெற்றி பெற்றது. நீதிக்கட்சி இரண்டாவது இடம் பெற்றது.
ஆனாலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவில்லை காரணம் மாநில அரசின் செயல்பாட்டில் கவர்னர் தலையீடு இருப்பதை காங்கிரஸ் அப்போது விரும்பவில்லை. கவர்னர் தலையீடு இல்லை என பிரிட்டிஷ் அரசு அறிவித்தால் தான் ஆட்சி அமைப்போம் என்று காங்கிரஸ்.
ஆட்சி அமைக்க வேண்டும் என்ன செய்வது இடைக்கால ஆட்சியாக நீதிக்கட்சி மற்றும் சுயேட்சைகள் அடைத்தார். கவர்னர் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது
இந்த ஆட்சி நான்கு மாதங்கள் தான் நீடித்தது. அதற்குள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அமைச்சரவையின் பணிகளில் கவர்னர்கள் அனாவசியமாக தலையிடமாட்டார்கள் என உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கத் தீர்மானித்தது
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.