Aran Sei

முல்கி மற்றும் முல்க்: தக்காணத்தில் உரிமைகள் எப்படி படிமமாயின?

தராபாத்திற்கு வந்த உருது பேசும் வட இந்தியர்கள், அந்த அரசு நிர்வாகத்தில் சேர்க்கப்பட்டப்  பின்னர்,  19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்துதான் முல்கி மற்றும் முல்கி அல்லாத பிரிவுகள் என்பது அந்த அரசியல் காட்சியில் தோன்றின. (முன்னாள் ஐதராபாத் நாட்டின் பூர்விக குடிகள் முல்கிகள் )

‘தக்காணத்தின் பல உலகங்கள்’  தொடர்  தக்காண கலாச்சார வரலாறுகளையும், மாறிவரும் சமூக உறவுகளையும் ஆராய்கிறது. இது இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கான வடக்கு-மைய, ஒற்றைப்பாதை  முறையை  கேள்விக்குள்ளாக்குகிறது. வரலாறு, அரசியல் மற்றும் கலாச்சாரம் பற்றிய பொது உரையாடலைக் கட்டியெழுப்ப உறுதிபூண்டுள்ள அறிஞர்களின் குழுவான ‘தி கிட்கி குழுவினரால்  ( Kidki collective)’ இந்தத் தொடர் நிர்வகிக்கப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சி தெலுங்கானாவின் தேர்தல் நிலப்பரப்பில் கால்பதிக்க முயல்வதால், அசஃப் ஜாஹி வம்சத்தின் நிஜாம்களைப் பற்றி இழிவான குறிப்புகளை ஏராளமாக பரப்பி வருகின்றது.  ஐதராபாத்-தக்காணத்தின் கடைசி நிஜாம் உஸ்மான் அலி கானின் கொள்ளுப் பேரன், தனது மூதாதையரின் பெயரைப் பகிரங்கமாக வசை பாடுவதை நிறுத்தக் கோரி 2021 இல் பிரதமருக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதும் அளவுக்கு பாத்திரப் படுகொலை நிகழ்வுகள் உச்சகட்டத்தை எட்டின.

மராத்வாடா, ஹைதராபாத்-கர்நாடகா ஆகிய இடங்களில், முந்தைய ஐதராபாத்-தக்காணத்தின் இரண்டு பகுதிகளாக இருந்த, தக்காணத்தின் முஸ்லிம் ஆட்சியுடன் தொடர்புடைய இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அவுரங்காபாத் இப்போது சம்பாஜி நகர் என்றும், உஸ்மானாபாத் தாராஷிவ் என்றும்,  ஐதராபாத்-கர்நாடகா கல்யாண கர்நாடகா  என்றும் மாற்றப்பட்டுள்ளன.  ஒன்றாக வைத்து,  பார்க்கையில் இந்த நகர்வுகள், ஆச்சரியப்படத்தக்க வகையில், தக்காண முஸ்லிம் வரலாறுகளின் பொது நினைவுகளை அழிக்கும் வகையில் உள்ளன.

கள்ளக்குறிச்சி: தேசிய கொடியை ஏற்றுவதற்கு பாதுகாப்பு வழங்க தலித் ஊராட்சி மன்ற தலைவர் கடிதம் – நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட எஸ்.பி., உறுதி

இந்து-முஸ்லிம் இரட்டை அல்லது ஒரு ‘முஸ்லிம் படையெடுப்பு’ என்ற கட்டமைப்பின் மூலம் மட்டுமே இந்தியாவின் வரலாற்றை நாம் எவ்வளவு எளிதாகப் பார்க்க முடியும் என்பதைக் கருத்தில் கொண்டால், இது எப்போதுமே அப்படி இல்லை என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். உண்மையில், இந்தியா ஒரு ‘கலப்பு’ அமைப்பாக இருந்ததால் – அதாவது கலப்பு நிலப்பரப்புகளால் ஆனது – இந்தியாவின் வரலாற்றை பன்மையில் மறுபரிசீலனை செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ‘இந்தியாவின் வரலாறுகள்’, மத விரோதங்கள் மட்டுமல்ல, நிலப்பரப்புகளைச் சுற்றியும் செதுக்கப்பட்டவை.  இந்த சோதனைகள் பல அறியப்பட்ட வரலாறுகளை பாதிக்கும் அளவுக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஆனால் பரவலான பொது மறதி  நிலவும் நேரத்தில், கைவிடப்பட்ட முயற்சிகளின் நினைவுகள் மிக முக்கியமானவை.

ஒரு ஒருங்கிணைந்த தக்காணம்

 1940களில் ஐதராபாத் தக்காணத்தில் அப்படிப்பட்ட ஒரு சோதனை நடத்தப்பட்டது. தக்காணத்தின் வரலாறுகளை எழுதும் சிந்தனை மேலெழத் தொடங்கியது. அது ஆசஃப் ஜாஹி அரசால் ஆதரிக்கப்பட்டது. வட இந்திய ஆதிக்க வரலாறுகள் மற்றும் இந்தியாவின்  பாரவைகளுக்கு எதிராக தக்காணப் பகுதியை மையமாகக் கொண்ட அறிவை உற்பத்தி செய்வதற்கான இந்த காலகட்டத்தில் மாநிலத்தின் பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இது இருந்தது. ஆங்கிலத்திற்கு எதிராக வட்டார மொழிகளிலும் அறிவு உற்பத்தி செய்யப்பட வேண்டும். (இந்த முயற்சிகளில் சில, குறிப்பாக இந்தியாவின் முதல் வடமொழி பல்கலைக்கழகமான உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பங்கு,  மறைந்த அறிஞர் கவிதா சரஸ்வதி தட்லாவால்  அவர் எழுதிய  மதச்சார்பற்ற இஸ்லாத்தின் மொழி: உருது தேசியவாதம் மற்றும் காலனித்துவ இந்தியா என்ற நூலில் மிக நுணுக்கமாக ஆவணப்படுத்தப்பட்டு, அற்புதமாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது).இந்த காலகட்டத்தில் தக்காணம் எப்படி கற்பனை செய்யப்பட்டது? ஐதராபாத்தில் 1942 இல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய வரலாற்று காங்கிரஸில் தனது உரையில், உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நவாப் அலி யாவர் ஜங் பகதூர், தக்காணத்தின் இந்த படத்தை ஒரு ‘பகிரப்பட்ட பாரம்பரியம்’ என்று குறிப்பிட்டார்:’ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் சிறந்த காட்சிகளுடனான அதன் தொடர்புகளிலும், மகாராஷ்டிராவின் ஆரம்பகால எழுத்தாளர்கள்  கன்னட மொழியின் சிறந்த கவிஞர்களின் உறைவிடமாக இருந்ததிலும், அஜந்தா மற்றும் எல்லோரா பாறைகளில் அதன் நிறங்கள் மற்றும்  வெளிப்பாடுகளின் வடிவமாக விளங்குவதிலும்,   மேலும் பிதாரில் உள்ள மஹ்மூத் கவானின் மதரஸா மற்றும் ஔரங்காபாத்தில் உள்ள மாலிக் அம்பர் நூலகத்தின் உன்னதமான இடிபாடுகளிலும், சமீபகாலமாக விவசாயிகளுக்கான நீர் இருப்புக்களுக்காக கட்டப்பட்ட பெரிய அணைகளிலும்… இவை அனைத்திலும் நாம் பெருமைக்குரிய இன்னும் பல பொதுவான பொருட்களைக் கொண்டுள்ளோம்.  அதன் விளைவாக வந்த பாரம்பரியம் நம் அனைவருக்கும் சமமாகச் சொந்தமானது…’

சபரிமலை பிரசாதம்: பார்ப்பனர்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை திரும்பப் பெற்றது திருவிதாங்கூர் தேவசம் போர்டு

இந்து-முஸ்லிம் இரட்டைக்கு அப்பால்

1940 களின் காலகட்டத்தில், ஒருங்கிணைந்த தக்காணம் என்ற சிந்தனையை வழங்குவது,  தக்காண-ஐதராபாத் ஒரு ‘பிரபுத்துவ, இஸ்லாமிய அரசு’  என்ற வகுப்புவாத, மன்னிக்க முடியாத தன்மைக்கு  சவால் விடுவதாகும். ஆனால் அத்தகைய வரலாறு எழுதுவது, ஆசஃப் ஜாஹி அரசை சட்டப்பூர்வமாக்குவதற்கான ஒரு கருவியாக மட்டும் இருக்கவில்லை. இது தக்காணத்தின் வரலாற்றை அனைத்தையும் உள்ளடக்கியதாக காட்ட முயலும் இந்தியாவின் வரலாற்றுக்குள் அடக்க  முயற்சிப்பதுமாகும்.

எடுத்துக்காட்டாக, 1945 இல் நடந்த முதல் தக்காண வரலாற்று மாநாட்டில், தக்காணம் “இந்தியாவின் மையப்பகுதி” என்று விவரிக்கப்பட்டது. இப்பகுதியின் ஒரு ஆய்வு, ” பல்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவின் வரலாற்றின்  ஒரு சிறு உருவம் குறித்த ஒரு ஆய்வு தான்” என வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தக்காணத்தின் வரலாற்றை இந்தியாவின் வரலாற்றுடன் “மிகவும் சரியாக, ஆழமாக ஒருங்கிணைப்பதை நோக்கி நகர்வதாகும். இது ஒரு வகையில் தக்காணத்திற்குள் இந்தியாவைக் கண்டறிவதுதான்.ஆனால், முக்கியமாக, தக்காண  வரலாற்றைப் படிப்பது,  இந்திய தேசியவாதத்திற்கு எதிராக ஒரு பகுதி தேசியவாதத்தை உருவாக்குவதற்காக அல்ல. மற்றும் இது “குறுகிய மனப் பாங்கைப்புகுத்துவது” மற்றும் ” பிரிவினையை ஏற்படுத்தும் மண் சுவர்களை எழுப்புவது” அல்ல என்பதே உண்மை.

தக்காண வரலாறுகளின் இந்த புதிய கட்டமைப்புகளில் சில  அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளன என்பதைக் காணலாம். இத்தகைய கதைகள் வம்ச வரலாறுகளின் கட்டமைப்பைப் பின்பற்றினாலும், பூர்வீகத்தை வலியுறுத்தும் முயற்சிகள் ஒளி வீசின.  எடுத்துக்காட்டாக,  நவீன தக்காண-ஐதராபாத்  வரலாற்றின் நீண்ட கண்ணோட்டம் பூர்வகுடி ஆந்திர இனத்தவருடன் கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியது. இது தக்காணத்தில் சாலங்காயான வம்சத்துடன்  புத்த மதத்தை நிறுவுதல், போர்க்குணமிக்க பிராமணியத்தின் எழுச்சியுடன் புத்த மதத்தின் பின்னடைவு, ராஷ்டிரகூடர்களை “முதல் தக்காண ஏகாதிபத்திய சக்தி” என்று வகைப்படுத்துதல், பாமனி அரசின் எழுச்சி பற்றிய விளக்கம் மற்றும் அவர்கள் எவ்வாறு இந்த நிலப்பகுதிகளுக்குள்ளும் அதன் மரபுகளுக்குள்ளும் தங்களை இணைத்துக் கொண்டனர், அதாவது அவர்களின் தேசபக்தி தக்காண தேசியவாதத்தின் முதல் உச்சரிப்பு  என அந்த கண்ணோட்டம் இருந்தது.

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

இந்த சுருக்கமான வம்ச வரலாறுகள் இந்து அல்லது முஸ்லீம் மத அல்லது அரசியல் அடையாளங்களை ஆட்சி செய்த வம்சங்களுக்கு கற்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, அவை தக்காணத்திற்கும், தில்லிக்கும் இடையிலான போட்டியை வலியுறுத்தின. ஆனால் இந்த போட்டிகள் கூட மீண்டும் மீண்டும் சலிப்பூட்டும் வகையில் கூறப்படும் பூர்வீக மக்களுக்கும்  வெளிநாட்டவர்களுக்கும் இடையிலான போட்டியாக காட்டப்படவில்லை. அதற்கு பதிலாக, காலப்போக்கில், “வடக்கிலிருந்து வந்த படையெடுப்பாளர்கள்” கூட தங்களை தக்காணத்தைச் சேர்ந்தவர்களாக வலுவாக கருதுமளவு தக்காணம் மிகவும் கவர்ச்சிகரமான இடமாகக் காட்டப்படுகிறது,

ஐதராபாதியர் அல்லது தக்காணியர் என்று குறிக்கப்படும் சொற்களின்   வேரூன்றிய தன்மையைப் பற்றி அலி யாவர் ஜங் பஹுதர், “இது ஒரு நிறுவனத்தின் நீண்ட கால நனவுக்கு வழிவகுத்தது. சந்த் பீபி மற்றும் மாலிக் அம்பரில் அதன் ஆளுமையைக் கண்டறிந்த வெளிப்புற குறுக்கீட்டிற்கு எதிராக அதை பாதுகாக்கும் உள்ளுணர்வுக்கு வழிவகுத்தது. … நமது கடந்த காலத்தின் பெருமை மற்றும் நமது சொந்த முயற்சிகளால் நம்மைப் பாதுகாத்து வலுப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாடு, இப்போது முல்கி அல்லது  தக்காணிய உணர்வு என்று அறியப்படுவதன் சாராம்சம் ஆகும்,” என்று கூறினார்.1948 இல் தக்காண ஐதராபாத் வீழ்ச்சியுடன் தக்காணத்தை இந்தியாவின் வரலாறுகளில் நுழைக்கும் இந்த சோதனை மறைந்திருக்கலாம். ஆனால், மராத்தி, கன்னடம், தெலுங்கு என்று  இந்தப் நிலப்பகுதியைப் ஆதிக்கம் செலுத்தி பிரித்து வைத்திருக்கும் மொழியியல் அடையாளங்களிலிருந்து வேறுபட்ட தக்காண அடையாளம் இன்னும் இருக்கிறதா? அல்லது ஐதராபாத் புலம்பெயர்ந்த மக்களிடையே ஏக்கமான அழைப்புகளாக மட்டுமே இப்போது தக்காணியம் உள்ளது என்பதற்கு அந்த மாநிலத்தின் அழிவு என்பதுதான்  பொருளா?

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

வளர்ச்சி  காலகட்டத்தில் தக்காண அடையாளம்

1950 களின் பிற்பகுதியில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மொழிவாரி மாநிலங்களின் வருகையானது, கன்னடம், மராத்தி மற்றும் தெலுங்கு தேசங்களின் பெருமைகளை விவரிக்கும் கதைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்திய வரலாற்றை எழுதுவதற்கான அரச ஆதரவைக் கொண்டிருந்தது. அரசிதழ்கள் மற்றும் அரசு வழங்கும் புத்தகங்கள் இந்த மொழிவழி  மாநிலங்களின்  அன்றாட வரலாறுகளைப் பற்றி பேசத் தொடங்கின.  அவை ‘இந்து’ பேரரசுகள் மற்றும் ‘முஸ்லிம் படையெடுப்புகள்’ மீது கணிசமான கவனம் செலுத்துகின்றன. தக்காணம், தக்காணத்தவர் என்பனவும்  அதிகாரபூர்வ மற்றும் வரலாற்றுப் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டன.

ஆனால் இந்தக் கட்டுரை காட்டுவது போல, தக்காணியத்தின் வடிவங்கள் இப்பகுதி மக்களின் வாழ்வில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. நிச்சயமாக, அவை இடம்பெயர்வு மற்றும் மக்களின் மொழியியல் வாழ்வில் உள்ளன.. ஒரு காலத்தில் தக்காண-ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த பகுதிகளின்  வளர்ச்சி அரசியலில், பிறழ்ந்த வடிவங்களாக இருந்தாலும் அவை உள்ளன.

1990களில் ஐதராபாத்-கர்நாடகா பகுதியில் ‘சிறப்பு நிலை’  கோரிய இயக்கம் அத்தகைய போக்கிற்கு ஒரு எடுத்துக்காட்டு. கர்நாடக மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஐதராபாத்-கர்நாடகா, பெங்களூரில் இருந்து ஆளும் அடுத்தடுத்த அரசாங்கங்களால் கடுமையாக புறக்கணிக்கப்பட்டது. ‘சிறப்பு நிலை’ க்கான இயக்கம் உண்மையில் இந்திய அரசியலமைப்பில் 371(ஜே) பிரிவை அமலாக்கக்  கோரியது.  இது  இப்பகுதியின் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு மற்றும்  இப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மாநில அரசாங்கத்தில் இடஒதுக்கீடு வழங்குவதை கட்டாயப்படுத்தும். சிறப்பு நிலைக்கான அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக, ஆர்வலர்கள் இப்பகுதியின் ‘வளர்ச்சியின்மை’ மட்டுமல்ல, தக்காண-ஐதராபாத்  மாநிலத்தில் நடைமுறையில் இருந்த முல்கி விதிகளையும் மேற்கோள் காட்டினர்.

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?

முல்கி விதிகள் என்ன? முல்கி மற்றும் முல்கி அல்லாத பிரிவுகள்  அரசியல் காட்சியில் உருது பேசும் வட இந்தியர்களின் வருகையின்  எதிரொலியாக, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து மாநில நிர்வாகத்தில் சேர்க்கப்பட்டது. இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் கொண்ட பழங்குடி உயரடுக்கை முல்கிகள் பிரதிநிதித்துவப்படுத்தினர்.  அவர்கள் தங்களின் தக்காண பூர்வீகத்தின் அடிப்படையில் (தங்கள் மதத்தின் அடிப்படையில் அல்ல) மாநிலத்திலும் பொருளாதாரத்திலும் அதிக பிரதிநிதித்துவத்தை கோரினர். மாநில கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஐதராபாத்வாசிகள் போதுமான பிரதிநிதித்துவம் பெறுவதை உறுதி செய்வதற்காக அசஃப் ஜாஹி அரசு முல்கி விதிகளை கொண்டு வந்தது.

மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில், முல்கி விதிகளின் காரணமாக மராத்வாடா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் சிறப்புப் பரிசீலனைக்கு உத்தரவாதம் அளித்தனர். ஆனால், ஐதராபாத்-கர்நாடகாவில் இது நடக்கவில்லை.

2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐதராபாத்-கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல ஆர்வலர் ரசாக் உஸ்தாத்துடன் நான் கண்ட ஒரு நேர்காணலில், “1997 இல் தான் தெலுங்கானா மற்றும் மராத்வாடாவில் முல்கி விதிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாங்கள் உணர ஆரம்பித்தோம். அந்த விதிகள் எங்களுக்கும் பொருந்தும். உண்மையில், முல்கி விதிகளை நாடாளுமன்றம் ரத்து செய்யும் வரை தொடர வேண்டும் என்பது விதி. இன்று வரை, அது இன்னும் அகற்றப்படவில்லை. 1956-ல் மைசூர் மாநிலத்தில் நாங்கள் இணைந்தபோது, ​​அதைப் பின்பற்றியிருக்க வேண்டும்… மாநில அரசு அதை எங்களிடம் இருந்து அரசியல் சட்டத்திற்கு விரோதமாகப் பறித்துவிட்டது.

பூர்வ குடிகள், புலம் பெயர்ந்தவர்கள் – இஸ்லாமியர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் நிகழ்ச்சி நிரல்

இறுதியில்,  ஐதராபாத்-கர்நாடகாவிற்கு 2013 இல் சிறப்பு நிலை  வழங்கப்பட்டது. \ இது கர்நாடகத்திற்குள் புறக்கணிக்கப்பட்ட நிலையை மட்டுமல்ல, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இப்பகுதியில் பிறந்தவர்களின் சட்டப் பாரம்பரியத்தையும் அங்கீகரிக்கிறது.1940 களில் அசஃப் ஜாஹி மாநிலத்தில் தக்காணப் பகுதியைச் சுற்றி வரலாறு எழுதும் முயற்சிகளின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகள்  இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சியை நோக்கிய இடைவிடாத பயணத்தில் வீழ்ந்திருக்கலாம். ஆனால், முல்கி விதிகளின் மூலம் மாநில அங்கீகாரம் பெற்ற தக்காண பூர்வீகம், அடையாளம் காண முடியாத வடிவங்களில் இருந்தாலும், வளர்ச்சி, மொழியியல் நிலையில் தொடர்ந்து நீடிக்கிறது என்பதை நினைவில் கொள்வது நல்லது.

www. the wire.in இணையதளத்தில் கிட்கி கலெக்டிவ் உறுப்பினர் சுவாதி சிவானந்த்  எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.

500 கோடி கருப்பு பணம் | அலறி ஓடிய ரஜினிகாந்த் | Sangathamizhan | Rajinikanth | BJP | RN Ravi | Modi

முல்கி மற்றும் முல்க்: தக்காணத்தில் உரிமைகள் எப்படி படிமமாயின?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்