Aran Sei

முகபாவனையை வைத்து, காவலர்களை எச்சரிக்கும் கேமரா – பெண்கள் பாதுகாப்பிற்கு உ.பி., அரசு திட்டம்

த்திரபிரதேசத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சியில் முக்கிய நடவடிக்கையாக, பொது இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களை நிறுவுவது, நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள், பெண்கள் வெளிப்படுத்தும் முகபாவனைகளை வைத்து, அவர்கள் ஏதும் பிரச்சனையில் இருக்கிறார்களா என்பதை கணித்துவிடும். ஒருவேளை பிரச்சனையில் இருந்தால், அதை காவல்துறைக்கு அறிவுறுத்தியும்விடும். இதன்மூலம் காவல்துறையினர், அப்பெண்களை பாதுகாப்பர்.

`புதிய உ.பி பூத்தாச்சு, பெண்களுக்குப் பாதுகாப்பு வந்தாச்சு’- யோகி ஆதித்யநாத்

இதுகுறித்து காவல்துறை கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) பிராஷாந்த் குமார் “பின்தொடர்ந்து தொல்லை கொடுக்கப்படும் நேரம், அச்சுறுத்தப்படும் அல்லது கட்டாயப்படுத்தப்படும் நேரங்களிலெல்லாம், பெண்கள் வெளிப்படுத்தும் முகபாவனைகளை, இந்த செயற்கை நுண்ணறிவு பொருந்திய கேமராக்கள் புரிந்துக்கொள்ளும். உடனடிகாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்படும். நாங்கள் விரைந்து நடவடிக்கை எடுப்போம்” எனக் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம், இதை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாலியல்வன்கொடுமை : “உடனடி நடவடிக்கை வேண்டும்” – உள்துறை அமைச்சகம்

`Ashish: Abhay aur Abhyudaya’ என்ற பெயரில், லக்னோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பயிற்சி பட்டறையின்போது, இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பயிற்சிபட்டறையில், அப்பல்கலைக்கழகத்தின் விடுதி மாணவிகள் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பிற்குப் பின், லக்னோ கவால்துறை ஆணையர் தாகுர் “லக்னோவில், பெண்கள் அதிகம் நடமாடும் மற்றும் பெண்கள் மீதான அதிக குற்றங்கள் பதிவாகும் 200 க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கெல்லாம் இந்த கேமிராக்களை பொறுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் அப்பகுதிகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு விரைந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு, அவர்கள் காக்கப்படுவர். இதன்மூலம் 100க்கு (காவல்து அவசர உதவி எண்) அழைப்பதற்கு முன்பே, பெண்களின் பாதுகப்பு உறுதிசெய்யப்படும்” எனக்கூறியுள்ளார்.

பழங்குடி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவருக்கு காவல் நீட்டிப்பு

இருப்பினும், முகபாவனைகளை வைத்து, சூழலறிந்து பாதுகாப்பது நடைமுறையில் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது இப்போதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நடைமுறை குறித்து சில வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து கூறும்போது, இது தனிமனத சுதந்திரத்தை பாதிக்கக்கூடும் என்றாலும், பாதிக்கப்படும் நபர்களை கண்டறிய இது உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.

மற்றொரு சாரார், இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறனர். காரணம், எந்தவொரு சம்பவம் அசௌகரியத்தை கொடுத்தாலும், அதுகுறித்து வழக்கு தொடரவேண்டுமா இல்லையா என்ற முடிவு, தனிநபரை சார்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு கேமிராக்கள், யார்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற முடிவை காவல்துறையினரின் அனுமானத்துக்கு கொடுத்துவிடக்கூடும் என்ற ஐயத்தை முன்வைக்கின்றனர்.

ஹத்ராஸ் வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

2015 முதல் 2019 ஆம் ஆண்டுவரை, உத்தர பிரதேசத்தில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் 66 % அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவு கூறுகிறது. இந்தியா முழுவதும் என்ற அடிப்படையில், இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல்களைப் பார்த்தால், பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் 37 % அதிகரித்துள்ளன; அவர்கள் மீதான தாக்குதல்கள் 20% அதிகரித்துள்ளன.

பாலியல் வன்கொடுமையைத் தடுக்க, வேலைக்குச் செல்லும் பெண்களைக் கண்காணிக்க வேண்டும் – மத்திய பிரதேச முதல்வர்

உத்தர பிரதேசத்தில், சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த, தலித் பெண் மீதான ஆதிக்க சாதியினரின் கொடூரமான பாலியல் வன்கொடுமையை இங்கே நாம் மறக்க முடியாது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, பெண்களுக்கான வலுவான பாதுகாப்பை அரசு வழங்க வேண்டுமென்றே சொல்ல வேண்டியுள்ளது. இந்த பாதுகாப்பை கருத்தில்கொண்டு, உத்தர பிரதேசம் போல, ஒவ்வொரு மாநில அரசும் ஏதாவதொரு முயற்சியை முன்னெடுக்கிறது.

கோயிலுக்குச் சென்ற பெண் : பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பூசாரி : உத்தர பிரதேசத்தில் கொடூரம்

உதாரணமாக சில தினங்களுக்கு முன்பு, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங், வேலைக்காக வீட்டைவிட்டு வெளியே செல்லும் முன்பு, அருகிலுள்ள காவல்நிலையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்துக்கொண்டு செல்லும்படியும், இதன்மூலம் பிரச்னை ஏற்படும்போது காவல்துறையினர் அப்பெண்களை விரைந்து கண்டறிந்து பாதுகாப்பு தர உதவும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் இந்த வழிமுறைகள் சரியாக இருக்குமா என்பது கேள்வியே. சொல்லப்போனால் இந்த விஷயத்தில், `அதிகரிக்கும் குற்றங்களைத் தடுக்க, செயற்கை நுண்னறிவு கேமராக்கள் பொறுத்தப்படுவதைவிடவும், சட்டங்கள் கடுமையாக்கப்படுவதுதானே சரியான வழியாக இருக்க முடியும்’ என சிலர் சமூக வலைதளத்தில் கூறிவருகின்றனர்.

இந்த அடிப்படையில், பெண்கள் – தொழில்நுட்பம் மற்றும் கண்காணிப்பு சார்ந்து செயல்படும் நிறுவனமான, இன்டெர்நெட் டெமாக்ரசியின் நிறுவனம் மற்றும் இயக்குநர் அஞ்சா கோவாக்ஸ் தன் ட்விட்டர் பதிவொன்றில், “பெண்களுக்கும், பிற மக்களுக்கும் இங்கு சுதந்திரம்தான் தேவையே தவிர, சமூகக் கட்டுப்பாடில்லை. இங்கு பாதுகாப்புவாதி வேண்டாம், பாதுகாப்பான சமூக உரிமையும், கட்டமைப்பும்தான் தேவை. பொது இடத்தில் இப்படியான கேமிராக்கள் பொறுத்தப்பட்டு, அதில் குறிப்பிட்ட ஒரு பாலினத்தவரின் அசைவுகள் பதிவுசெய்யப்பட்டு, அனுமானங்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பது, நடைமுறையில் சிக்கலைத் தரும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதை அவர், #genderingsurveillance (பாலின ரீதியாக ஒருவரை கண்காணிப்பது) என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கமான மொழியாக்கம்)

முகபாவனையை வைத்து, காவலர்களை எச்சரிக்கும் கேமரா – பெண்கள் பாதுகாப்பிற்கு உ.பி., அரசு திட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்