Aran Sei

‘தணிக்கை அறிக்கையை மேற்கோள் காட்டியது தவறா?’ – கேரள நிதி அமைச்சர்

டந்த வாரம் செய்தியாளர்களுக்கு அளித்த ஒரு பேட்டியில்  கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்,  மாநிலத்தின் உள்கட்டுமானத்துறை நிதி அமைப்பான, கேரள உள்கட்டுமான முதலீட்டு நிதி வாரியம் (KIIFB) கடன் வாங்கிய முறை “அரசியலமைப்பிற்கு  எதிரானது” என தவறாக குற்றம் கூறுவதாக கோபமாக வாதிட்டார்.

தணிக்கை அறிக்கையிலிருந்து ஒரு வரியையோ அல்லது ஒரு பத்தியையோ அங்கு படிக்காமல், நாட்டின் தணிக்கையாளர் நேர்மையற்ற முறையில் தனது “வரைவு தணிக்கை அறிக்கையில்” கேரள உள்கட்டுமான முதலீட்டு நிதி வாரியத்தைக் (KIIFB) குறிவைத்துத் தாக்கியதன் மூலம் மாநிலத்திற்கு எதிராக ‘ஒரு நிழல் போரை தொடுத்திருக்கிறார்’ என்பதே எனக்கு எழும் கவலை எனக் கூறுகிறார் ஐசக்.

மார்ச்சு 2019 ல் அந்த கேரள நிதி நிறுவனம் வெளிப்புற வணிகக் கடன் பெறும் வழியில் ஒரு பொது மக்களுக்கான ‘மசாலா பத்திரங்கள் ‘ என்ற பத்திரங்களை லண்டன் பங்குவர்த்தக சந்தையில் வெளியிட்டது. இத்தகைய வெளிக்கடன்கள் வாங்குவது பொதுவாக அரசுகளின் தனியாற்றலுடைய(sovereign) உத்தரவாதத்துடன் வரும்.

கேரள நிதி நிறுவனத்தின் கடன்கள்

இதற்கு முன்னர் பல மாநிலங்கள் இது போல் உள்கட்டுமானத் திட்டங்களுக்காக நிதி திரட்டும் திட்டங்களை வெளிப்படுத்தி உள்ளன. ஆனால் அதன் பரந்த தன்மையால் கவரப்பட்டு அயல்நாட்டுச் சந்தையில் கடன் வாங்கிய முதல் மாநிலம் கேரளாதான்.

எடுத்துக்காட்டாக, 1990 களில், சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிடெட் நிறுவனம், சர்ச்சைக்குரிய நர்மதா அணைக்கட்டு திட்டத்திற்கு உலகவங்கி கடன் வழங்கும் திட்டத்தை கைவிட்டு விட்டதற்குப் பின், குஜராத் வட்டாரத்தில் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்ட திட்டமிட்டது. அதைத் தொடர்ந்து, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் இது போன்றவற்றில்  நம்பிக்கையின்றியே தனது கடன் பத்திரங்களை (Deep Discount Bonds) உள்நாட்டுச் சந்தையில் வெளியிட்டது.

தணிக்கை அறிக்கையை தருவதில் தாமதம்

ஆனால் ஒரு நிதி அமைச்சர் ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும் போது கடந்த 2019, மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டின் வரைவு தணிக்கை அறிக்கையை மேற்கோள் காட்டி பேசுவதாக வியப்புக்குரிய வகையில் கூறினார். இதைக் கேட்ட யாருக்கும், 2019 ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை இன்னும் ஏன் வரைவு அறிக்கையாகவே உள்ளது எனக் கேட்கத் தோன்றவில்லை. அவர் கூறியதை நம்பினால், ஒரு தணிக்கை அறிக்கை நிதியாண்டு கடந்து 19 மாதங்கள் ஆகியும் வரைவு அறிக்கையாகவே உள்ளது எனப் பொருளாகும்.

தி வயரின் ஆழமான செய்தி கட்டுரையைப் படித்தவர்கள், தேசிய தணிக்கையாளரின் வருந்தத்தக்க நிலையில், மேற்கூறியதை கண்டிப்பாக நம்புவார்கள்.

குறிப்பாக முன்னாள் தலைமைத் தணிக்கையாளரின் (இந்த ஆண்டின் துவக்கத்தில் ஓய்வு பெற்றார்) தணிக்கை அறிக்கையை இறுதி செய்வதில் இருந்த பொதுவான தாமதம் என்பது, 2018-19 ம் ஆண்டிற்கான எந்த ஒரு மாநிலத்தின் தணிக்கை அறிக்கையும் இதுவரை வலைதளத்தில் காணப்படவே இல்லை என்பதில் முடிந்திருக்கிறது. ஆகஸ்ட் 24 ம் நாள் ஒரு சட்டமன்ற கூட்டத்தில் ஒரே சமயத்தில் இரண்டு தணிக்கை அறிக்கைகள் வைக்கப்பட்டன. அந்த இரண்டுமே 2017-18 ஆண்டிற்கானது என்பது நகைப்பிற்குரியது.

மீண்டும் சர்ச்சைக்கு வருவோம்

ஐசக்கிற்கு பதில் தரும் காங்கிரஸ் தலைவர் V.D. சத்தீசன், சட்டமன்றத்தில் வைக்கப்படாத ஒரு தணிக்கை அறிக்கையில் உள்ளவற்றை வெளியிட்டதற்காக ஒரு உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பினார். சபாநாயகர் அமைச்சருக்கு கொடுத்த தாக்கீதிற்கு ஐசக், தான் ஏதாவது நடைமுறை தவறு செய்திருந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்கத் தயார் என முழு நம்பிக்கையுடன் பதில் கொடுத்துள்ளார்.

எந்த சட்ட அடிப்படையில் அவர் இவ்வளவு வலுவாக நிற்கிறார்? இதற்கு முன் இவ்வாறு சட்டமன்றத்தில் வைப்பதற்கு முன்பே தணிக்கை அறிக்கைகள் ஊடகங்களில் வெளிவருவது பலமுறை நடந்துள்ளது. தணிக்கை முடிந்த அறிக்கையில் உள்ள சில பகுதிகள் குறித்து,  தவறான அறிக்கை தரப்பட உள்ளதாகக் கூறி, தணிக்கை நடவடிக்கையையே நிறுத்தக் கோரும்  வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் மறைமுகமாக அறிக்கையின் பகுதிகள் வெளியாகி உள்ளதற்கும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அண்மையில், டெல்லி உயர்நீதி மன்றம் தனியார் மின் விநியோக நிறுவனங்களின் மீதான விசாரணையின் போது அவர்கள் தணிக்கை அறிக்கையில் உள்ள சில பகுதிகளை எடுத்துக்காட்டினர். அவற்றை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என  உயர்நீதி மன்றம் தடை விதித்தது.

எனினும் இதே நீதிமன்றம், டெல்லி கட்டிடத் தொழிலாளர்கள் நல வாரியம் மீதான விசாரணையின் போது, சட்டமன்றத்தில் வைக்கப்படாத ஒரு தணிக்கை அறிக்கையில் உள்ள சில பகுதிகளை ‘சாட்சியங்களாக’ பதிவு செய்வதைப் பற்றிக் கவலைப்படாமல் அதை அனுமதித்தது.

இப்போது சட்டமன்றத்தில் வைக்கப்படாத ஒரு தணிக்கை அறிக்கையை நிதி அமைச்சர் வெளியிட்டு  உரிமை மீறிவிட்டதாக கூப்பாடு போடும் கேரள எதிர் கட்சித் தலைவர் ரமேஸ் சென்னிதாலாவும், பொது கணக்குக் குழுத் தலைவர் வி.டி.சத்தீசனும், முன்னாள் தலைமைத் தணிக்கையாளர், தணிக்கை முறை சுற்றையே சரி செய்ய முடியாத அளவு நாசம் செய்து விட்டதைப் பற்றி வாய் திறக்கவே இல்லை. இதற்கு நிதி அமைச்சரும் விதி விலக்கல்ல.

திருப்பு முனை

சிஏஜி சர்ச்சையின் இரண்டு நாட்களுக்குப் பிறகு மேலும் வியப்பூட்டும் நிகழ்வு ஒன்று நடந்தது. சிஏஜியின் திருவனந்தபுரம் அலுவலகம் நவம்பர் 11 ம் தேதி வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கை பொது வெளியில் வந்து விட்டது.

இந்த செய்தி அறிக்கை,- இது வரைவு அறிக்கை அல்ல என்றும் இறுதி அறிக்கை என்றும் தெளிவாக கூறியது- முதன்மை தலைமைக் கணக்காளர் (PAG) அலுவலகத்தால் நவம்பர் 11ஆம் தேதியே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். மறுநாளே பத்திரிகைகளில் வந்திருக்க வேண்டும்.

தணிக்கைச் சுற்று நடைமுறையின் போதே, தலைமைத் தணிக்கையாளருடன் இது குறித்து பேச வாய்ப்பிருந்தும், நிதி அமைச்சர் அறிக்கையில் இருக்கும் அரசு குறித்த கருத்துக்களை சிரமேற்கொண்டு பொதுவில் விளக்கும் வரை பிஏஜி ஏன் காத்திருந்தது என்பது தெளிவாகவில்லை.

இந்தியாவில், தேசிய தணிக்கை என்பது தனிப்பட்ட நபரை சார்ந்ததல்ல. ஒவ்வொரு நிலையிலும், தணிக்கைக் குழுவின் ஆய்வு அறிக்கை தொடர்புடைய நிறுவனத்திற்கு ஐயப்பாட்டுக் கேள்விகளுடன் அனுப்பப்பட்டு, கருத்துருக்களும், மறுப்புகளும், முடிவுகளும் பெறப்படும். அவ்வாறு ஒரு நிறுவனம் பதில் தருவதற்கான உரிமைப் பெற்றதுமே,  பெறப்பட்ட பதில் ஏற்கத் தக்கதா இல்லையா என்பதை இந்திய குடிமக்களுக்கு அறிவிக்க வேண்டியது சிஏஜியின் கடமை ஆகும்.

வரைவுஅறிக்கை அனுப்பிய பிறகு, சம்மந்தப்பட்ட கேரள நிதி நிறுவனத்திற்குத் தெரிவிக்காமலே “நான்கு பத்திகளை பின்னர் சிஏஜி இணைத்துள்ளதாக” ஐசக் கூறுகிறார். இதன் மூலம் அவர்களுக்கு பதில் தருவதற்கான உரிமையை மறுத்துள்ளதாகவும் கூறுகிறார்.

ஆக, தற்போது சர்ச்சையாக வெடிப்பதற்கு காரணமான அறிக்கைப் பகுதி,  ஏற்கனவே அனுப்பப்பட்ட வரைவு அறிக்கையில் இல்லை என்பது சிஏஜியின் புதிய செய்தி அறிக்கையின் மூலம் தெளிவாகிறது.

தற்போது நடந்து வரும் செயல்பாடு தணிக்கை குறித்த அமைச்சரின் அறிவிப்பில், KIIFB யிடம் சிஏஜி 76 கேள்விகள் கேட்டிருந்ததாகவும், அவை ஒவ்வொன்றிற்கும் அது பதில் கொடுத்துள்ளதாகவும் கூறி உள்ளார். மேலும் தணிக்கை அறிக்கைகளைப் பற்றிய பல தகவல்களை அமைச்சர் கூறினாலும் நாம் தற்போது நிதி ஆண்டு முடிந்து 20 மாதங்களுக்குப்பின் அது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால் பொதுவாக செயல்பாடு தணிக்கை அறிக்கை மீது, தொடர்புடைய நிறுவனத்தின் தணிக்கையாளர்களும் அரசு அதிகாரிகளும், சிஏஜியின்  தணிக்கையாளர்களும் நேரடியாக சந்தித்து விளக்கங்களையும், பதில்களையும்  நேரடி சந்திப்பு நிகழ்ச்சியின் (Exit conference) மூலம் பெறுவது வழக்கம் .அத்தகைய ஒன்று நடந்ததா எனத் தெரியவில்லை.

சிஏஜி க்கும் கேரள அரசின் இந்த நிதி நிறுவனத்திற்கும் இடையிலான  பிரச்சனை நீண்ட காலமாக நடந்து வருகிறது. மாநில அரசு சிஏஜி சட்டம்,1971ன் பிரிவு 14(1) ன் கீழ்தான் தணிக்கையை நடத்த வேண்டும் எனவும், பிரிவு 20(2) ன் கீழ்நடத்தக் கூடாது எனவும் கோருகிறது. முந்தைய ஆண்டுகளில் கூட சிஏஜி இந்த நிதி நிறுவனத்தின் மீது  குறிப்புரைகளைக் கொடுத்துள்ளது.

மாநிலத்தின் மார்ச் 2016 ம் ஆண்டிற்கான சிஏஜியின் தணிக்கை அறிக்கை இந்த நிதி நிறுவனம் உட்பட 6 தன்னாட்சி நிறுவனங்கள் தங்களது 2014-15 ம் ஆண்டு வரையிலான கணக்குகளை இன்னும் தரவில்லை என்றும், இந்த நிதி நிறுவனம் 2008-09 முதல் 2014-15 வரையிலான கணக்குகளை (தொடர்ந்து வரும் ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதிக்குள் தரப்பட வேண்டும்) இன்னும் தரவில்லை எனக் கூறுகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் – க்கு அளித்துள்ள ஒரு பேட்டியில், ஐசக் ” சிஏஜியின் தணிக்கை அறிக்கையை சட்டமன்றம் நிராகரித்து விடும்.  இது போன்ற அறிக்கையை சட்டமன்றமோ, பொது கணக்குக் குழுவோ ஏற்றுக் கொள்ளாது” எனக் கூறி உள்ளார்.

தற்போதுள்ள நிலையில், அதிகாரிகள் அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்தாக வேண்டும். அரசு தனது நிலையை காப்பாற்றிக் கொள்ள அறிக்கை மீது முழு வீச்சில் தாக்குதல் தொடுக்கும். ஆனால் அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவது பொது கணக்குக் குழுவிடமே உள்ளது.

இந்த பிரச்சனை சீக்கிரத்தில் முடியும் என்று தோன்றவில்லை. KIIFB சமூக வலை தளங்கள் மூலம் போரை நடத்திக் கொண்டுள்ளது. அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் முழு அறிக்கையை வைத்தால் எவ்வளவு தீவிர வாக்கு வாதங்களை சந்திக்கப் போகிறது எனத் தெரியவில்லை.

(www.thewire.in இணையதளத்தில் ஹிமான்சு உபாத்தியாயா எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

‘தணிக்கை அறிக்கையை மேற்கோள் காட்டியது தவறா?’ – கேரள நிதி அமைச்சர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்