Aran Sei

பிற மதங்களை எதிர்ப்பதன் வழியே இந்துக்களை ஒருங்கிணைப்பது தான் தேசியமா? தேசியத்தின் வரலாறு என்ன? – சூர்யா சேவியர்

தேசியம் என்பது காலனி ஆதிக்கத்திற்கும், அதன் அரசியலுக்கும் எதிரான போராட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட சொல் தான். ஆனால் இந்த தேசியத்திற்கு ஆதரவாக செயல்பட 1925 ல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் முன்வரவில்லை. இங்கு இஸ்லாமும், கிறிஸ்தவமும் கொண்ட பன்மை தன்மை இருந்த போதிலும், மதச்சார்பற்ற தன்மை கொண்ட காந்தியும் கூட தீவிர இந்துவாகவே தன்னைக் காட்டிக் கொண்டார்.

இந்து லட்சியங்களையும் அடையாளத்தையும் முன்னிறுத்தியே அவர் தேசியத்திற்கு ஆதரவாக இந்துக்களை ஒருங்கிணைத்தார்.
ராமராஜ்யம் என்பதையும் வலுவாக முன் வைத்தார். இதே போல் இஸ்லாமிய தேசியவாதிகளும் இஸ்லாமியர்களை திரட்ட கிலாபத் என்ற அரசியல் கோட்பாட்டை காலனி ஆதிக்கத்திற்கு எதிராக முன் வைத்தனர்.

ஹிஜாப் விவகாரம் – கர்நாடகா மாணவர்களுக்கு ஆதரவாக அலிகர் பல்கலை. மாணவர்கள் போராட்டம்

அரசியலில் ஒற்றுமையும் கூட்டுப் போராட்டமும் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் தடையாக இருந்ததில்லை. 1921 கிலாபத் இயக்கமும் ஒத்துழையாமை இயக்கமும் இணைந்தே பயணித்தன. ஒற்றுமையை வலுப்படுத்தின.
முக்கியமாக இருவரிடமும் பகையை ஏற்படுத்தவில்லை.

அப்போது இந்துமதத்தின் மேன்மையைக் கூறியவர்கள் கூட மற்ற மதங்களைச் சாடவில்லை. அமெரிக்காவிற்கு இந்துமதத்தின் மேன்மையை எடுத்துரைக்கச் சென்ற விவேகானந்தரும் கூட இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் சாடி பேசவில்லை. இதன் முக்கிய அம்சம் என்னவெனில்
பிற மத எதிர்ப்பின் மூலம் இந்துக்களை ஒன்றுபடுத்தவில்லை என்பதே.

நேதாஜி மரணம் – ஆவணங்களை அமெரிக்கா தர மறுப்பதாக ஒன்றிய அரசு தகவல்

ஆனால் இப்போது இதை ஆர் எஸ் எஸ் நடத்துவது ஏன்?
சிறுபான்மை சமூகங்களிடையேயும் வகுப்புவாதமும் அடிப்படைவாதக் கண்ணோட்டம் உண்டு. ஆனால் ஒப்பீட்டளவில் சிறுபான்மை மதத்தினரிடம் வலுவான அரசியல் நிறுவனங்களோ, தற்காக்கும் திறனோ இல்லை.

இந்தச் சூழலில் மதவெறுப்புடன் கூடிய இந்து தேசியம் கட்டமைக்கப்படும் நோக்கம் யாதெனில் அது இந்து மதத்தை கட்டமைப்பதல்ல.
நொறுங்கும் பார்ப்பனியக் கோட்பாடுகளை, இந்து என்ற போர்வைக்குள் பாதுகாக்கும் முயற்சியே அன்றி வேறில்லை.

‘மோடியின் ஆட்சியில் சீரழிந்த ஜனநாயகம்’ – கல்வியாளர் பிரதாப் பானு மேத்தாவோடு ஓர் உரையாடல்

இதற்கு எதிரான வலுமிக்க போராட்டத்தை இந்து அடையாளம் கொண்ட
மதச்சார்பற்ற சக்திகள் இன்றளவும் நடத்துவது தான் நம்பிக்கையின் அடையாளம். இந்து தேசியம் என்பது வேறொன்றுமல்ல.
பார்ப்பனிய ஆதிக்க மற்றும் முதலாளித்துவ அதிகாரப் பாதுகாப்பே.

எனவே தான் அண்ணல் அம்பேத்கர், முதலாளித்துவமும், பார்ப்பனியமும் எதிர்க்கப்பட வேண்டிய இருபெரும் பொது எதிரிகள் என்றார்.

சூர்யா சேவியர், அரசியல் செயற்பாட்டாளர். 

பிற மதங்களை எதிர்ப்பதன் வழியே இந்துக்களை ஒருங்கிணைப்பது தான் தேசியமா? தேசியத்தின் வரலாறு என்ன? – சூர்யா சேவியர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்