உறவினர் ஒருவர் சமீபத்தில் இரண்டு நாட்களாக தலைச்சுற்றல் இருப்பதாக புகார் கூறினார். மூன்றாவது நாளில் மீண்டும் எனக்கு அழைப்பு வந்தது. கண், காது மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தினேன். அன்று மாலையே, அந்த உறவினர் பேச்சு குழறுவதாகக் கூறினர். ஆனால் எனக்கு அவ்வாறு தெரியவில்லை எனினும், அவரை மருத்துவமனைக்குச் செல்லும்படி கேட்டுக் கொண்டேன். அவர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு மருத்துவ அதிகாரி கவலைப்பட ஒன்றுமில்லை என்று கூறிவிட்டார். நான் அவரை அழைத்து, இவை பக்கவாதத்தின் அடிப்படையான அறிகுறிகள் என்று அவரிடம் சொல்லி, எம்ஆர்ஐ (MRI) செய்துகொள்ளும்படி வற்புறுத்தினேன். வழக்கமாக, மருத்துவர்கள் இது போன்றவற்றில் தங்கள் மூத்த மருத்துவர்களின் கருத்துக்களைக் கேட்பார்கள். மேலும் எம்ஆர்ஐ செய்யப்பட்டது. அதில் எனது உறவினருக்கு நடு பெருமூளை தமனி பக்கவாத நோய் இருப்பதைக் காட்டியது.
ஒரு அடிப்படை தொடக்க மருத்துவ (எம்பிபிஎஸ்) பயிற்சி பெற்ற பட்டதாரிக்கு இதுபோன்ற கோளாறுகளைப் பற்றி எளிதாக அறிய முடியும். ஆனால் என் உறவினர் விவகாரத்தில் இதை தவறவிட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதற்கு நீட் தேர்வைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.
எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க அமலாக்கத்துறையைப் பயன்படுத்தும் மோடி அரசு – நடப்பது என்ன?
பிரெஞ்சு எழுத்தாளர் ஜீன்-பாப்டிஸ்ட் அல்போன்ஸ் கார் 1849 இல் எழுதியது போல், “எந்த அளவு நிலைமைகள் மாறுகிறதோ, அதே அளவு அவை அதே நிலையிலும் இருக்கின்றன.”
நீட் பயிற்சி மையங்கள் மற்றும் விடைத்தாள்கள்
இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் உலக சுகாதார நிறுவனத்தின் ‘தாரக மந்திரமான ‘ மருத்துவர்கள் நோயாளிகள் விகிதத்தை உயர்த்திப் பிடித்து அதிகமான மருத்துவர்களை உருவாக்கி வெளித்தள்ள முயற்சிக்கும் அதே வேளையில், தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஒரு விரிவான கற்பித்தல் திட்டத்தை உருவாக்கி உள்ளது. அதன்படி மாணவர்கள் கட்டாயம் நோயாளிகளின் இடத்திற்குச் சென்று அவர்களைப் பார்க்க வேண்டும். இதில் இரண்டு காரணிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
முதலாவதாக, அனைவருக்கும் தெரிந்த உண்மை என்னவென்றால், பற்றாக்குறை உள்ள கிராமங்களுக்குச் சென்று மருத்துவ பட்டதாரிகள் பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. அதேசமயம் அவர்கள் பயிற்சி பெறும் நகர்ப்புறங்களில் மருத்துவர்களுக்கு அதிக தட்டுப்பாடு இல்லை. இரண்டாவது மிகவும் அச்சுறுத்தும் உண்மை என்னவென்றால், சிறந்த சூழ்நிலையில் கூட, நம் மருத்துவ பட்டதாரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விரிவான திறன் பயிற்சியைப் பற்றி உண்மையில் கவலைப்படுவதில்லை. ஏனெனில் முதுகலை இடங்களுக்கான நுழைவாயிலான நீட் தேர்வில் வெற்றி பெறுவதே அவர்களின் இறுதி இலக்காக உள்ளது. நாங்கள் படிக்கும் போது, ஐந்து ஆண்டுகள் படிக்கவும், வெளிப்புற பணி பயிற்சியின் போது வார்டுகளில் வேலை செய்யவும், பின்னர் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகவும் சொல்லப்பட்டது.
இப்போது நீட் பயிற்சி நிறுவனங்கள் வந்துள்ளன. அவை பெரும்பாலும் மருத்துவர்களால் தொடங்கப்பட்டுள்ளன. தேர்விற்கான கேள்விகள் பல ஆண்டுகளாக அனைத்திந்திய மருத்துவக் கல்வி நிறுவனத்தால் (AIIMS) உருவாக்கப்பட்ட அடிப்படை புறவய வினாக்களாக இருப்பதால், கிட்டத்தட்ட எல்லா கல்வி நிறுவனங்களிலும் அவற்றுக்கான பதில் வழிகாட்டி இருந்தது. அண்மைக்கால மருத்துவ கேள்விகள் அடிப்படையிலான நீட் தேர்வுகளும் நிகழ்நிலை முறை கேள்விகளாகும்.
‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்
மேலும் மருத்துவ கல்வி மாணவர்களுக்கு பதிலளிக்க பயிற்சி நிறுவனங்கள் விரிவான வகுப்புகளை நடத்துகின்றன. இதில் மோசமானது என்னவென்றால், மாணவர்கள் தங்கள் மருத்துவ கல்வி பயிற்சி ஆண்டுகளில் இந்த பயிற்சி நிறுவனங்களின் குறிப்புகளையும், அவர்களின் நிகழ்நிலை வகுப்புகளில் நடத்தும் பாடங்களையே படிக்கிறார்கள். அவர்கள் நூலகத்தில் அமர்ந்து கைக்கணினிகளில் (டேப்லெட்டுகளில்) அவர்களின் விரிவுரைகளைப் படித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்! இந்த ‘பயிற்சி நிறுவன ஆசிரியர்களில்’ பெரும்பாலானோர், அரசு மருத்துவக் கல்லூரி ஆசிரியர்களின் மருத்துவ அறிவாற்றலில் பத்தில் ஒரு பங்கு பெற்றிருப்பார்கள். ஆனால் நீட் தேர்வில் என்ன கேட்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். நோயாளி அடிப்படையிலான கற்றல் குறித்த முழு பயிற்சித் திட்டமும் மருத்துவக்கல்வி பெறும் மாணவர்களால் புறக்கணிக்கப்படுகிறது. எனவே, உண்மையான நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது மற்றும் கையாள்வது என்பது பற்றி பூஜ்ஜிய அறிவைக் கொண்ட பட்டதாரிகளை இந்தியா உருவாக்குகிறது. வார்டுகளில் பணியாறுவதும், வெளிப்புற நோயாளிகள் துறை (OPD) பயிற்சியும், தகவல்தொடர்பு கலை, நுட்பமான அறிகுறிகளைக் கவனிப்பது, நோயாளியை நம்பிக்கைக்கு உட்படுத்துதல் மற்றும் அந்த அறிவை சரியான முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. நாம் உருவாக்குவது ‘பயிற்சி பெற்ற’ அறிவாற்றல் இல்லாத மாணவர்களைத்தான். உண்மை வாழ்க்கைக் காட்சிகளில் அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை நினைத்து நான் நடுங்குகிறேன். உண்மையில், இதுபோன்ற மருத்துவர்கள் யாருக்கும் சிகிச்சை அளிக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
‘இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய இயலாது’ – அருந்ததி ராய்
நோயாளிகளைப் பற்றிய உண்மையான அறிவு இல்லை
அண்மையில் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் நிறுவன நாள் விழாவின் போது, இரக்கம், தொடர்பு, தொட்டுணர்தல் ஆகியவை மருத்துவர்களிடம் இருக்க வேண்டிய மூன்று பண்புகள் என்று சுகாதார செயலாளர் கூறினார். இது மருத்துவக் கல்வியின் போது பெறும் அறிவிற்கு மேலும் கூடுதல் அறிவாகும். நிகழ்நிலை ஆலோசனையும், செயற்கை நுண்ணறிவும் மருத்துவர்களை மாற்றும் என்று கூறுபவர்கள் உண்மையை விவாகரத்து செய்தவர்களாகவே இருப்பர். அத்தகைய செயற்கை மற்றும் நிரல்நெறிமுறை இடைமுகங்களை அடிப்படையாகக் கொண்ட எந்த ஆலோசனையையும் நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். ‘குவாக்ஸ்’ அல்லது ‘பதிவுபெற்ற மருத்துவ ஆலோசகர் ‘ என்று அழைக்கப்படுபவர்களின் தனித்துவமான பண்புகளில் ஒன்று நோயாளியுடனான அவர்களின் தொடர்பு ஆகும். இதை தற்போதைய தலைமுறை மாணவர்கள் முற்றிலும் இழந்துவிட்டனர். அண்மையில் ஒரு கட்டுரையில், ஒரு பிரபலமான பயிற்சி நிறுவனத்தை வைத்திருக்கும் மருத்துவர், நிகழ்நிலை கற்பித்தலின் நற்பண்புகளைப் புகழ்ந்து, நாம் கடைப்பிடிக்கும் தொழிலையும் கலையையும் கேலி செய்கிறார். கெடுவாய்ப்பாக, நிச்சயமாக, வணிகமானது இதுபோன்ற பல பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை உணர்வை மழுங்கடித்துவிட்டது.
நெக்ஸ்ட் அல்லது நேஷனல் எக்சிட் டெஸ்ட், உண்மையான நோயாளி மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வுகள் மூலம் நிலைமைகளை மாற்றுவதாக உறுதியளிக்கிறது. அது வெற்றி பெறும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். அது பயிற்சி நிறுவனப் பயிற்சியின் தீங்கான பிடியிலிருந்து மாணவர்களை விடுவிக்கும். தற்போதைய நீட் முறையானது பூஜ்ஜிய மருத்துவ அறிவுடன் பட்டதாரிகளை வெளியேற்றுகிறது. போதிய ஆசிரியர்கள் இல்லாததால், பட்டதாரிகளின் தற்காலிக ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதன் தர்க்கத்தை மக்கள் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?
ஏனெனில் அது ஆசிரியர்களின் தேர்வில் தேக்கநிலைக்கு வழிவகுக்கிறது. அத்துடன் கல்லூரி நிர்வாகங்களின் பண ஆதாயத்தில் கவனம் செலுத்துகிறது. ஆனால் இதில் பயிற்சி நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையை மறந்து விடுகிறோம். இப்போது நம்மிடம் இருப்பது ‘நீட் பயிற்சி பெற்ற மருத்துவ மாணவர்கள்’, மருத்துவர்கள் அல்ல. எனவே, மருத்துவ மாணவர்கள் சீனா அல்லது உக்ரைன் அல்லது இந்தியாவில் படித்தவர்கள் என்றால் அது பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தாது, ஏனெனில் இறுதியில், அவர்கள் பட்டத்தை நீட் தேர்வுக்கான ஒரு படிக்கட்டாகப் பார்க்கிறார்கள். அதற்காக விரிவான தேசிய மருத்துவ ஆணைய பாடத்திட்டம், பயிற்சி நிறுவன “நிபுணர்களின்” “குறிப்புகளாக” குறைக்கப்பட்டுவிட்டது. பான் ஜோவி பாடியது போல்:”புதிய மேம்படுத்தப்பட்ட நாளை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை நேற்று தொடர்ந்து வருகிறது, அது உண்மைதான்.இது ஒரு வித்தியாசமான இன்னிசையுடன் கூடிய அதே மோசமான பாடல்.”
www.theprint.in இணையதளத்தில் புது தில்லி ஆர்எம்எல் மருத்துவமனை தோல் மருத்துவப் பேராசிரியர் கபீர் சர்தானா எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.
Supreme court comment on PTR Palanivel thiyagarajan on freebies | Venkatachalam reacts | Adani NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.