சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசின் பல்வேறு உதவிகளை பெற்று 1972ஆம் ஆண்டு அரசு உதவி பெறும் கல்லூரியாக தொடங்கபட்டது. இந்த பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் உயர் கல்விக்கு முக்கிய பங்காற்றி வந்த இக்கல்லூரி 90களுக்கு பிறகு சென்னையின் வளர்ச்சி காரணமாக மையப்பகுதிகளில் இருந்து வெளியேற்றபட்டு கண்ணகி நகர், செம்மஞ்சேரி, எழில் நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்பையும் இக்கல்லூரி தொடர்ந்து வழங்கிவந்தது.
இக்கல்லூரியின் அரசு உதவி பெறும் பிரிவில் ஆண்டுக்கு 1500 மாணவர்கள் அனுமதிக்கபடுவர். இவர்களிடம் அரசு நிர்ணயித்த ரூபாய் 2000 மட்டுமே ஒரு ஆண்டிற்கான கட்டணமாக வசுலிக்கபடும். இதன்முலம் கடந்த 50 ஆண்டுகளில் சென்னை நகரத்தில் ஏழை எளிய மற்றும் ஒடுக்கபட்ட மக்களுக்கு உயர் கல்வி வழங்குவதில் இக்கல்லூரியின் பங்கு முக்கியத்துவும் வாய்ந்த ஒன்றாகும்.
‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்
இப்படி வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கல்லூரி கடந்த 2020-21 ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பிரிவில் மாணவர் சேர்கையை முழுவதுமாக நிறுத்திவிட்டு சுயநிதி பிரிவில் மட்டுமே மாணவர்களை அனுமதிக்கிறது. இதன்மூலம் இக்கல்லூரியை முழுமையாக சுயநிதி கல்லூரியாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது கல்லூரி நிர்வாகம். இதன் விளைவாக இக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்கள், இடதுசாரி கட்சிகள் அதன் மாணவர் அமைப்புகள் என பலரும் இதை எதிர்த்து அறிக்கைகள் போரட்டங்கள் என பல வகையுளும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
தொடர்ச்சியான போரட்டங்கள் மற்றும் பல்வேறு அழுத்துங்களின் காரணமாகவும் தமிழக அரசு “தமிழ்நாடு தனியார் தமிழ்நாடு ஒழுங்காற்று சட்டம் 1976யின்” விதிகளின் படி சிறப்பு அலுவலரை நியமித்துக் கல்லூரியை அரசின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன்.
தனியார் கல்வி நிறுவனங்களின் தோற்றமும் வளச்சியும்
ஆங்கிலேயே அரசு காலம் தொட்டே அரசு கல்லூரிகளுடன் அரசின் உதவியுடன் தனியார் கல்லூரிகளும் தொடங்க அனுமதி வழங்கபட்டது. இதன் காரணமாக அரசு கல்லூரிகளுக்கு இணையாக அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. 1871 ஆம் ஆண்டின் கணக்குப்படி சென்னை மாகாணத்தில் 4 அரசு கல்லூரிகளும் 7 அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளும் செயல்ப்பட்டன. இதில் பெரும்பானயானவை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளே. இது அடுத்து நூறு ஆண்டுகளில் பெரிதும் வளர்ச்சி அடைந்து 1981 ஆம் ஆண்டின் கனக்குப்படி தமிழகத்தில் செயல்ப்பட்ட மொத்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 195 (51 அரசு கல்லூரிகள் & 144 அரசு உதவிபெறும் கல்லூரிகள்) ஆக உயர்ந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?
1980 களுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்
தமிழகத்தில் 1980களின் தொடக்கம் வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இருந்தநிலையில் .1981ஆம் ஆண்டு பாலிடெக்னிக் பிரிவிலும 1984ஆம் ஆண்டு கலை மற்றும் அறிவியில் பிரிவு என தொடர்ந்த உயர் கல்வியின் அனைத்து பிரிவுகளிலும் அரசு உதவி இல்லாமல் சுயநிதி கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. மேலும் 1990களில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் சுயநிதிப் படிப்புகளை வழங்க அனுமதிக்க தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக புதிதாக அரசு உதவி பெறும் கல்லூரி தொடங்க அனுமதிப்பதையும் தமிழக அரசு நிறுத்தியது. அடுத்த கட்டமாக அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசு உதவி பெறும் பிரிவில் புதிதாக பாடப் பிரிவிகளுக்கு அனுமதி வழங்குவதும் நிருத்தப்பட்டன. இதனால் வேலை வாய்ப்புகளை உடனடியாக வழங்க கூடிய கணினி அறிவியில் போன்ற பல பாடப்பிரிவுகள் சுயநிதி பிரிவில்/ கல்லூரிகளில் மட்டுமே தொடங்கபட்டன. இதன் காரணமாக அதிக கட்டணத்தை செலுத்தி மாணவர்கள் படிக்க வேண்டியநிலை உருவானது.
இதன் விளைவாக கடந்த 30 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுபடுத்தப்பட்டு சுயநிதி கல்லூரிகள்/ படிப்புகளின் எண்ணிக்கையே அதிகரித்தன. இன்றைய கணக்குப்படி தமிழகத்தில் மொத்தம் 908 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன இதில் 163 அரசு கல்லூரிகளகாவும் 140 அரசு உதவி பெறும் கல்லூரிகளகாவும் 600க்கும் மேற்பட்வை சுயநிதி கல்லூரிகளாகவும் செயல்படுகின்றன.
சுயநிதி கல்லூரி தொடங்க அனுமதிக்க தொடங்கியவுடன் சேவையாக பார்க்கபட்டு வந்த கல்வி வணிகமாக மாறியது. ஆரம்பத்தில் பெரிதும் லாப நோக்கமற்று சேவை செய்யும் நோக்குடன் செயல்பட்ட அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள்கூட 1990களில் சுயநிதிப் பிரிவை தொடங்க அனுமதிக்கபட்ட பிறகு லாப நோக்கத்துடன் செயல்பட தொடங்கின என்பதை மறுக்கமுடியாது.
பூர்வ குடிகள், புலம் பெயர்ந்தவர்கள் – இஸ்லாமியர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் நிகழ்ச்சி நிரல்
இத்தனை மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும் கூட அரசு கல்லூரிகளும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசு உதவி பெறும் பிரிவுகளும் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் முக்கிய பங்காற்றி வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாம் கட்டுபாடற்ற தனியார்மையத்தை ஊக்கிவித்ததின் விளைவாக தமிழ்நாட்டின் சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படும் கல்வியில் ஏற்பட்டுள்ள முனேற்றதையே பின்னோக்கி இழுக்கும் அபாயம் உருவாகியுள்ளதை பலரும் தொடர்ந்து எடுத்து கூறி வருகின்றனர். தமிழக அரசின் 2017 ஆம் ஆண்டின் “மனிதவள மேம்பாட்டு அறிக்கை” கூட நம்முடைய கல்வியின் தரம் பெரிதும் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்க்கு மிகமுக்கியமான காரணங்களில் ஒன்று கட்டுப்பாடற்ற தனியார்மயம் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.
எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை பாதுகாத்து வலுப்படுத்த வேண்டும் என்றும் சுயநிதி கல்லூரிகளை/ பிரிவுகளை கட்டுப்படுத்தி நம்முடைய கல்வியின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்றும் கல்வியாளர்கள், ஆசரியர் இயக்கங்கள், மாணவர் இயக்கங்கள், இடதுசாரி கட்சிகளை சேர்ந்துவர்கள் எனப் பலரும் தமிழ் நாட்டில் தொடர்ச்சியாக குரல் எழுப்புவதுடன் பல்வேறு போரட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
டி.பி.ஜெயின் கல்லூரி
இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் 90 களுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக லாப நோக்கமற்று அரசு உதவி பெறும் பிரிவை நடத்திவந்த டி.பி.ஜெயின் நிர்வாகாம் சுயநிதி பிரிவுகளையும் தொடங்கியது. சுயநிதி பிரிவில வரும் லாபத்துடன அரசின் கட்டுப்பாடுகள் இதில் குறைவை என்பதாலும் மேலும் ஆசரியர்/ மாணவர் சங்கங்கள் இந்த பிரிவுகளில் செயல்பட முடியாத நிலை இருந்ததாலும் அரசு உதவி பெறும் பிரிவை முடிவிட்டு முழுமையாக இதை சுயநிதி கல்லூரியாக மாற்றும் முயற்சிகளில் இறங்கியது கல்லூரி நிர்வாகம்.
முதல் கட்டமாக அரசு உதவி பெறும் பிரிவில் பணி ஒய்வு பெறும் ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவதை நிறுத்திவிட்டு சுயநிதி பிரிவில் நியமிப்பதை போன்று நிர்வாகமே ஆசிரியர்களை பணியில் அமர்த்த தொடங்கியிது. ஒரு துறையில் முழுமையாக உதவி பெறும் ஆசிரியைகள் பணி ஒய்வு பெற்ற பிறகு மாணவர்களிடம் சுயநிதி பிரிவில் வசூலிக்கபடும் கட்டணத்தை வசூலிக்க தொடங்கியது நிர்வாகம். 2019 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு துறையில் கூட அரசு உதவி பெறும் ஆசரியர் இல்லாதநிலை உருவானது. இப்படி தொடர்ச்சியாக நிர்வாகம் திட்டமிட்டு முழுமையாக சுயநிதி கல்லூரியாக மாற்றும் முயற்சியை சுயநிதி பிரிவில் பணிபுரிந்த பேராசிரியர்கள் மறைமுகமாக எதிர்க்கத் தொடங்கி இருகின்றனர். இவர்களும் கண்டறியப்பட்டு நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்ப்பட்டுள்ளனர்.
இதற்க்கு இடையில் கொரோனா பொதுமுடக்க சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு முழுமையாக அரசு உதவி பெறும் பாடப் பிரிவில் மாணவர் சேர்க்கையை நிறுத்தியது இக்கல்லூரி நிர்வாகம். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் இரண்டு இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் முதலவருக்கு கடிதம் ஒன்றை எழுதுகின்றனர். இருப்பினும் இதில் பெரிய முன்னேற்றம் ஏற்படாததால் இடதுசாரி கட்சிகளும் அதனுடைய மாணவர் அமைப்புகளும் இணைந்து முதல் கட்டமாக அரசு உதவி பெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை நடத்த கோரி கல்லூரி வாசல் முன்பாக முற்றுகை போராட்டத்தை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக கையெழுத்து இயக்கம் நடத்தி கோரிக்கை மனு ஒன்றை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களாக எதாவது ஒரு வடிவில் இக்கல்லூரியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல தரப்பினரும் தொடர்ந்து குரல் எழுப்பினர்.
இந்த தொடர் அழுத்தத்தின் காரணமாகவும் தமிழக முதல்வரின் உரிய தலையிட்டின் காரணமாகவும் தமிழக அரசு இக்கல்லூரிக்கு சிறப்பு அலுவலரை நியமிக்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
‘இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய இயலாது’ – அருந்ததி ராய்
மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை முழுமையாக தனியார்மையத்தை ஊக்குவிப்பதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளே இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சம் உருவாகி உள்ள நிலையில் காலம் தாழ்த்தி எடுக்கபட்ட முடிவுதான் என்றாலும் கூட தமிழக அரசின் இந்த முடிவு மிகுந்த பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
பெரியார் பிம்பத்தை யாராலும் தகர்க்க முடியாது I Sathya Prabhu Interview I Kallakurichi Sakthi School
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.