Aran Sei

இந்தியாவில் நான்கு ஆண்டுகளில் 400 முறை இணைய சேவை முடக்கம் – ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் இரண்டு கோடி வரை நஷ்டம்.

ந்தியாவில் இணைய சேவை முடக்கம், கவலைத்தரும் வகையில் அதிகரித்து வருகிறது. 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம், 370வது பிரிவை நீக்கம், நவம்பரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம், 2020 ஆண்டு நவம்பர் மாதம் முதல் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற கோரி நடைபெறும்  போராட்டம், ஆகிய  போராட்டங்களில் போது,  சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி இணைய சேவை முடக்கம் செய்யப்பட்ட நிகழ்வுகள் எளிதில் நம் நினைவுக்கு வருகிறது.

போராட்டங்களை ஒடுக்கும் தந்திரமாக இணைய சேவையை முடக்குவது, சர்வாதிகார நாடுகளுடன் தொடர்புடயை ஒன்று  ஜனநாயக பண்பல்ல. மாநில மற்றும் மத்திய அரசுகளால் முடக்கப்பட்ட இணைய சேவைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகளவில் முதலிடம் வகிப்பதாகவும், 2021 ஆம் ஆண்டின் துவக்கமே இந்தியாவில் இணைய சேவை முடக்கத்துடன் தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள் மட்டத்திலும் தனியார்மயம் – செயலாளர்களாக தனியார் நிபுணர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு

இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில், ஹரியானாவில் விவசாயிகள் போராடி வரும் இடத்தில் 5 முறை, தேசிய தலைநகர் பகுதியில் ஒரு முறையென மொத்தம் 7 முறை இணைய சேவை முடக்கப்பட்டது.  இவ்வாறான இணைய சேவை முடக்கப்பட்ட நிகழ்வு சர்வதேச அளவில் கவனம் பெற்ற பிறகும், அரசாங்க இணைய சேவை வழங்கவில்லை என்பது கவலையளிக்கும் செய்தியாகும்.

மென்பொருள் சுதந்திர சட்ட மையம், தகவலின்படி இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு 93 முறையும், 2018 ஆம் ஆண்டு 134 முறையும் இணைய சேவை முடக்கப்பட்டதாகவும், அண்மைகாலங்களில் அதிக முறை முடக்கப்பட்ட பகுதிகளாக ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜர், சோனிபட் மற்றும் பல்வால் மாவட்டங்கள் இருப்பதாகத் தெரியவருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் 400 முறைக்கும் மேல் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. உலகின் மிக நீண்ட இணைய முடக்கமாக நாடாளுமன்றத்தில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர்,  2019 ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 2020 ஆண்டு மார்ச் 4 ஆம் தேதிவரை மொத்தம் 223 நாட்கள், ஜம்மூ-காஷ்மீர் பகுதியில் முடக்கப்பட்டுள்ளது.

உலகின் எந்த ஜனநாயக நாட்டிலும் இல்லாத அளவாக இந்தியாவில் தான் அதிக முறை இணைய சேவை முடக்கப்பட்டிருக்கிறது என ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை

ஜம்மு – காஷ்மீரில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்துத் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்,  அளித்த தீர்ப்பில், இணைய சேவை ஒரு நபரின் அடிப்படை உரிமை என்றும், ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் விதமாக இணைய சேவையை முடக்கும் செயலை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது.

இணையசேவை முடக்கம் என்பது, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். டாப்10விபிஎன் இணையதளத்தின் அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் 8,927 மணிநேரங்கள் இணைய சேவைகள் முடக்கப்பட்டத்தில், இந்தியாவிற்கு 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் அடைந்திருப்பதாகவும், இதை ஒரு டாலருக்கு ரூ. 73.3 என்ற மதிப்பில் கணக்கிட்டால், ஒரு மணி நேரத்திற்கு 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் விருப்பத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் – பிரதமருக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம்

இணைய சேவை முடக்கம் இந்தியாவை போல மற்ற நாடுகளில் அத்தகைய சாதாரண நிகழ்வாக இல்லை. இந்தியாவிற்கு அடுத்தபடியாகப் பாகிஸ்தான் கடந்த ஆண்டில்  12 முறை இணைய சேவையை முடக்கி இருந்தது. மிகவும் ஜனநாயகப் பண்புகள் குறைவாக இருக்கும் நாடுகளான கருதப்படும் சிரியா, துருக்கி நாடுகள் 2018 ஆம் ஆண்டில் தலா ஒரு முறை மட்டுமே சேவையை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

– குர்ஷரன் பல்லா (இந்தியா டைம்ஸ்ஸில் வெளியான கட்டுரையின் சுருக்கம்)

தமிழில் : நந்தகுமார்  ஜகன்நாதன்

இந்தியாவில் நான்கு ஆண்டுகளில் 400 முறை இணைய சேவை முடக்கம் – ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் இரண்டு கோடி வரை நஷ்டம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்