ZOOM செயலி பதுக்காப்பு குறைபாடானதாக உள்ளது. அதனால் பழைய ZOOM செயலியை நீக்கிவிட்டு மேம்படுத்தப்பட்ட ZOOM செயலியை பயன்படுத்துமாறு ZOOM பயணர்களை(ZOOM USERS) ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா பொது முடக்க காலத்தில் இலக்கிய நிகழ்வுகள், அரசியல் கட்சிகளின் முக்கிய கூட்டங்கள், அரசியல் பயிலரங்குகள், சினிமா பாடல்கள், (பொன்னியின் செல்வன் படத்திற்காக பாடல் எழுத ZOOM செயலியின் வழியாகத்தான் இயக்குநரும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும் தன்னைத் தொடர்பு கொண்டதாக கவிஞம் பாடலாசிரியருமான இளங்கோ கிருஷ்ணன் தெரிவித்திருந்தார்) பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் யாவும் ZOOM செயலி வழியே நடைபெற்றன. இந்த செயலியில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் ZOOM செயலியை உடனடியாக புதுப்பிக்குமாறு பயனர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாளும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின் (CERT-In) கருத்துப்படி, ஜூம் பாதிப்புகள், zoom செயலியில் பங்கேற்கும் பிற பங்கேற்பாளர்களுக்குத் தெரியாமல் ஒட்டு கேட்க ZOOM செயலி அனுமதிக்கிறது.
புதுக்கோட்டை: பொதுப்பாதையில் பிணத்தைத் தூக்கிச் செல்ல போராடிய தலித் மக்கள்
ZOOM வழியாக நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் நிகழ்ச்சியின் ஒலி, ஒளி பதிவுகளை ஹேக்கர்களால் ஹேஜ் செய்ய முடியும். மேலும் மீட்டிங்கில் இடையூறுகளை ஏற்படுத்தலாம். ZOOM செயலியில் பகிரப்படும் முக்கியமான தகவல்களை ஹேக்கர்களால் ஹேக் செய்ய முடியும். மேலும், MeitY (மினிஸ்ட்ரி ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) அமைப்பு அச்சுறுத்தல் அளவை ‘நடுத்தரம்’ என வகைப்படுத்தியுள்ளது.
CVE-2022-28758, CVE-2022-28759, மற்றும் CVE-2022-28760 என அழைக்கப்படும் மூன்று பாதிப்புகள் ஜூமின் ஆன்-பிரைமிஸ் மீட்டிங் கனெக்டர் MMRஐ பாதிக்கிறது என்று அரசாங்கம் மற்றும் ZOOM கூறியுள்ளன.
பாதுகாப்பை உறுதிப்படுத்த, பயனர்கள் தங்கள் கணினியில் ZOOM செயலியின் அண்மை பதிப்பைப்(Updated version) புதுப்பிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்துகிறது. பயனர்கள் தங்கள் மொபைல் பயன்பாடுகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
Seeman ஏன் தேவையில்லாமல் கொதிக்கிறார்? | Sangathamizhan Interview | Seeman | Thirumavalavan | VCK
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.