Aran Sei

மக்களவை, மாநிலங்களவை நிகழச்சிகளை ஒளிபரப்பும் யூடியூப் சேனல் முடக்கம் – விதிமுறைகளை பின்பற்றவில்லை என யூடியூப் விளக்கம்

Credit : The Indian Express

க்களவை, மாநிலங்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சன்சாத் டிவியின் யூடியூப் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதால், கணக்கு முடக்கப்பட்டதாக செவ்வாய் (பிப்.15) காலை, யூடியூப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், எந்த குறிப்பிட்ட விதிமுறையை மீறியதால் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்படவில்லை.

கணக்கு முடக்கப்பட்டதற்கான காரணம்குறித்து அறிந்து கொள்ள கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு இதுவரை பதில் இல்லை.

ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா ஹிஜாப்பை அனுமதிக்கும்போது கர்நாடக அரசு தடைவிதிப்பது ஏன்? – வழக்கறிஞர் தேவதத் காமத்

யூடியூப் தளத்தில் தேடுதல் பகுதியில் சன்சாத் டிவியை தேடும்போது, “நீங்கள் தேடும் பெயரில் கணக்கு இல்லை. தயவு செய்து மன்னிக்கவும். வேறு பக்கத்தைத் தேடவும்.” எனும் அறிவிப்பு காட்டப்படுகிறது.

”படைப்பாளர்கள் பரந்த அளவிலான அனுபவங்களை பெற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள அதே வேளையில், பார்வையாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை வழங்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்” என யூடியூப் நிறுவனம் அதன் சமூக வழிகாட்டுதல்கள் குறித்த விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் ஹிஜாப்பை அகற்றனால்தான் பள்ளிக்குள் அனுமதி – நிர்பந்திக்கப்படும் மாணவிகள், ஆசிரியர்கள்

ஸ்பேம் மற்றும் ஏமாற்றும் நடைமுறைகள், உணர்திறன் மிக்க உள்ளடக்கம், போலியான தகவல்கள், குழந்தை பாதுகாப்பு, ஆள்மாறாட்டம், பாலியல் உள்ளடக்கம், தற்கொலை மற்றும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ள தூண்டுதல் மற்றும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் குறிப்பிட்ட காணொளியையோ அல்லது அந்த கணக்கையோ முடக்கும் பணியை யூடியூப் நிர்வாகம் மேற்கொள்கிறது.

Source : The Indian Express

 

மக்களவை, மாநிலங்களவை நிகழச்சிகளை ஒளிபரப்பும் யூடியூப் சேனல் முடக்கம் – விதிமுறைகளை பின்பற்றவில்லை என யூடியூப் விளக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்