மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், நந்திகிராம் பகுதியில் மட்டும் போட்டியிட முடியுமா என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, சவால் விடுத்திருக்கிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் அரசில், அமைச்சர் பதவி வகித்த சுவேந்து அதிகாரி, சமீபத்தில் பாஜக.வில் இணைந்தார்.
மேற்குவங்க வன்முறை – “துரோகிகளை சுட்டு வீழ்த்துவோம்” முழக்கத்தை கண்டிக்கும் பாஜக
முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.
மேலும்,“என்னால் முடிந்தால், நந்திகிராம் மட்டுமின்றி, என்னுடைய தொகுதியான பவானிபூரிலும் போட்டியிடுவேன். நந்திகிராம் என் மூத்த சகோதரி என்றால், பவானிபூர் என் இளைய சகோதரி. ஒருவேளை நான் பவானிபூரில் போட்டியிடவில்லை என்றாலும், அங்கு போட்டியிட திறமையான ஒரு நபரை பரிந்துரைப்பேன்” எனக்கூறி இருந்தார்.
இதற்குப் பதிலடியாக “மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் மட்டும் போட்டியிட முடியுமா?” என்று சுவேந்து அதிகாரி அவருக்கு சவால் விடுத்துள்ளார்.
நந்திகிராமில் மம்தாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என்று கூறியுள்ள சுவேந்து அதிகாரி, “திரிணாமுல் காங்கிரஸில் இருந்துக்கொண்டு, மம்தா பானர்ஜி ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் போட்டியிடுவது சரியாக இருக்காது.. ஆகவே நந்திகிராம் தொகுதியில் மட்டும் போட்டியிடுங்கள் மம்தா” என்றும் கூறியுள்ளார்.
மேற்கு வங்க அமைச்சரவை கூட்டம் : கலந்து கொள்ளாத 4 அமைச்சர்கள்
நந்திகிராம் பகுதி, நில அபகரிப்புக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸால் நடத்தப்பட்ட மாபெரும் மக்கள் போராட்டத்துக்கு பெயர் போனது என்பது குறிப்பிடத்தக்கது. 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சியில் இருந்த நிலையில், நந்திகிராமில் டாடா நிறுவனம் கார் தொழிற்சாலை அமைக்க மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.
நந்திகிராமில் களமிறங்கும் மம்தா பானர்ஜி – உச்சகட்ட பரபரப்பில் மேற்கு வங்க அரசியல்
இதை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்தான், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையில் ஆட்சி அமரக் காரணமாக அமைந்தது. நந்திகிராம் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர் சுவேந்து அதிகாரி.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.