Aran Sei

தமிழில் பேசி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது – மோடியை சாடிய ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென திமுக முனைப்பு காட்டி வரும் நிலையில், இருக்கும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

பெட்ரோல் டீசல் விலை விலையேற்றம்: உள்நாட்டு வளர்ச்சி என்பது இதுதானா? – ராகுல் காந்தி கேள்வி

இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினரான ராகுல்காந்தி, திமுக – காங்கிரஸ் கூட்டணிக்காகத் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுளார். ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் கோவை, திருப்பூர், ஈரோடு ,கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

ஈரோட்டில் பரப்புரையை மேற்கொண்டுள்ள அவர், ”டெல்லியில் இருக்கும் ஆட்சியாளர்கள் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் எதிரானவர்கள். தமிழில் பேசி தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். கடந்தகால நிகழ்வுகளிலும் வரலாறுகளில் இருந்து தெரிய வருவது தமிழ்நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்றிவிட முடியாது என்பதுதான்” என்று தெரிவித்துள்ளார்.

’கேரள, தமிழக தேர்தலில் தோற்றால் பாஜக-வின் கொட்டம் அடங்கும்’ – ப.சிதம்பரம்

மேலும், “என்னுடைய பாட்டி இந்திரா காந்திக்கும் என்னுடைய தந்தை ராஜீவ்காந்திக்கும் தமிழக மக்களாகிய நீங்கள் காட்டிய அன்பும் மரியாதையும் நான் அறிவேன். உங்களின் குடும்பத்துப் பையன் நானென்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் இங்கே வந்தது உங்களுக்கு அறிவுரை சொல்வதற்காக அல்ல. உங்களை சந்தித்து உங்கள் குறைபாடுகள் எல்லாம் தெரிந்துகொண்டு அதை நிவர்த்தி செய்வதற்கான வழியை ஏற்படுத்துவதற்காகவே வந்துள்ளேன். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தில் இருக்கிறவர்கள் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.”  என்று கூறியுள்ளார்.

’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம்; பேச்சை தவிர்த்த மம்தா: பிரதமர் முன்பாக நடந்த சம்பவத்திற்கு எழும் கண்டனம்

“நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன், நான் தமிழன் இல்லை ஆனால் தமிழை மதிக்கிறேன்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

 

 

தமிழில் பேசி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது – மோடியை சாடிய ராகுல் காந்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்