Aran Sei

இஸ்லாமியர் மீதான வெறுப்புப் பேச்சுக்கும் கைது செய்யப்படுவார் யதி நரசிங்கானந்த் – காவல்துறை உறுதி

ஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் உரையாற்றப்பட்டதாக கூறப்படும் ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கில்  குற்றஞ்சாட்டப்பட்ட இந்து மத சாமியார் யதி நரசிங்கானந்த் மீது வழக்கில் கைது செய்வோம் என்று உத்தரகண்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் யதி நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கைதுக்கான காரணமாக இஸ்லாமியர்களுக்கு எதிராக வமுறையையைத் தூண்டும்படி பேசியதையும் சேர்ப்போம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் ஹரித்வார் “தர்ம சன்சத்” மதக் கூட்டத்தில் சிறுபானமையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்கள் பேசியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பெயரிடப்பட்டவர்களில் யதி நரசிங்கானந்தாவும் ஒருவர்.

வசீம் ரிஸ்வியாக இருந்து பின்னர் இந்து மதத்திற்கு மாறிய ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி மட்டுமே இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகுதான் அவர் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் உள்ள தஸ்னா கோவிலின் பூசாரியான நரசிம்மானந்த், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை  ‘தர்ம சன்சத்’ என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிக்ழச்சியில், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய விவகாரத்தில், யதி நரசிங்கானந்த், ஜிதேந்திர தியாகி, சத்வி அன்னப்பூர்னா உள்ளிட்ட பத்து பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களான யதி நரசிங்கானந்த் மற்றும் சத்வி அன்னப்பூர்னா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று(ஜனவரி 15), ஜிதேந்திர தியாகி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யதி நரசிங்கானந்த் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தர்ணாவில் அமர்ந்திருந்த அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

Source: NDTV 

இஸ்லாமியர் மீதான வெறுப்புப் பேச்சுக்கும் கைது செய்யப்படுவார் யதி நரசிங்கானந்த் – காவல்துறை உறுதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்