போதைப் பொருள் குற்றங்களைக் குறிப்பிட்ட மதத்துடன் இணைப்பது தவறானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
”கேரளாவில் காதல் மற்றும் போதைப் பொருள் ஜிஹாத்திற்கு கிறிஸ்துவ பெண்கள் பலியாகி வருகின்றனர். ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாத இடங்களில் இளைஞர்களைச் சீரழிக்க தீவிரவாதிகள் இந்த வழிகளைப் பின்பற்றுகின்றனர்” என பாதிரியார் ஜோசப் கல்லரங்கத் கூறியிருந்தார்.
பாதிரியாரின் கருத்துக்களை ஏற்க மறுத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “பாதிரியாரின் கருத்துக்களை கேரள மக்கள் ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் பொது மக்களின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப அவர் பதிலளிப்பார் என்று நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.
கொரோனா தடுப்பில் சாதித்துவிட்டோமா ? – பிரதமர் மோடியின் உரைக்கு ரவிக்குமார் எம்.பி. எதிர்வினை
இந்தப் பிரச்சினைக்கு அனைத்து கட்சி கூட்டம் கூட்டி தீர்வு காண வேண்டும் என்று எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த பினராயி விஜயன், இந்தப் பிரச்னை எந்த அரசியல் கட்சியையும் சாராத ஒரு நபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
”பாதிரியாரின் கருத்து தவறானது. இது தொடர்பாக அனைத்து கட்சிகளும் அவர்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இதில் கருத்து தெரிவித்தவரிடம் இருந்தான் பதில் வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், பாதிரியாரின் கருத்து துரதிருஷ்டவசமானது. அதனால் சமூகத்தில் தேவையற்ற சர்ச்சை எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
‘இடஒதுக்கீடு நெறி மீறும் ஸ்டேட் வங்கி; கண் மூடிக் கொள்ளும் சமூக நீதி அமைச்சகம்’ – சு.வெங்கடேசன்
”மத மாற்றம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகள்பற்றிய தரவுகளை ஆராய்ந்தால் அதில் சிறுபான்மை மதங்களுக்கு ஈடுபாடு இல்லை. இதில் எந்த மதத்திற்கும் சம்பந்தம் இல்லை அல்லது எந்த மதத்துடனும் சேர்க்க முடியாது” என பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு போதைப் பொருள் தொடர்பாக பதியப்பட்ட 4,941 வழக்குகளில் 5,422 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதில், 2,700 (49.8%) பேர் இந்துக்கள், 1,869 (34.47%) பேர் இஸ்லாமியர்கள் மற்றும் 853 (15.73%) பேர் கிறிஸ்துவர்கள். இந்த விழுக்காடுகளில் வழக்கத்திற்கு மாறான எதுவும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கிறிஸ்துவர்கள் இஸ்லாமியத்திற்கு மாற்றப்படுவதாக கூறுவது ஆதாரமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துவ பெண்கள் காதலின் பெயரால் ஏமாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டு, இஸ்லாத்திற்கு மாற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் கேரளாவைச் சேர்ந்த 100 பேரில், 72 பேர் உயர்படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று, அங்கு அந்த அமைப்பின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
”இவ்வாறு இணைந்தவர்களில் கோழிக்கோட்டை சேர்ந்த தாமோதரன் என்பவரது மகன் பிரஜு தவிர மற்றவர்கள் இஸ்லாமிய மத்தை சேர்ந்தவர்கள். எஞ்சிய 28 பேர் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு பின் கேரளாவை விட்டு வெளியேறியவர்கள்.” என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
300 நாட்களை கடந்த விவசாயிகள் போராட்டம் – செவி சாய்க்குமா ஒன்றிய அரசு?
”இந்த 28 பேரில், பாலக்காட்டைச் சேர்ந்த கிறுஸ்துவ ஆணை மணந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த இந்துப் பெண், எர்னாகுளத்தை சேர்ந்த கிறிஸ்துவ தம்பதி என்று இரண்டு தம்பதிகளும் திருமணத்திற்கு பிறகு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து இஸ்லாத்திற்கு மாறியுள்ளனர்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
”இந்தத் தரவுகள் எதுவும், கிறிஸ்துவ பெண்கள் காதலின் பெயரால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டு தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுகின்றனர் என்பதை நிருபிக்கவில்லை” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.