குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த மைதானத்தை இன்று (பிப்ரவரி24), குடியரசு தலைவர் திறந்து வைத்தார். விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா (அமித் ஷாவின் மகன்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
63 ஏக்கர் பரப்பளவில், 1,32,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை காணும் வகையில் இந்த மைதானம்கட்டப்பட்டுள்ளது.
இதே இடத்தில், 1983 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சர்தார் வல்பாய் பட்டேல் மைதானம், 2015 ஆம் ஆண்டில் முழுவதுமாக இடிக்கப்பட்டது. கட்டுமான பணிகள் முழுமையான நிறைவடைந்ததை அடுத்து, சர்தார் பட்டேல் பெயரில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் முறையாக திறந்து வைப்பார் என்று, இன்று காலைவரை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.