Aran Sei

‘நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்’ – ட்ரம்ப் அறிவிப்பு

திபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு மக்கள் வாக்காளர் குழு வாக்களித்தால், தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 3-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன், வெற்றி பெற 270 இடங்கள் தேவையான நிலையில், 306 இடங்களில் வெற்றி பெற்றார். குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 232 இடங்களை பெற்றார்.

மேலும், ஜோ பைடன் ட்ரம்பை விட, 60 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் – அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

ஆனால், தற்போது வரை அதிபர் தேர்தல் தோல்வியை, ட்ரம்ப் ஒப்புக் கொள்ள மறுத்து வருகிறார்.  மேலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வழக்குகளை தொடர்ந்துள்ளது அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி.தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பிரச்சாரத்தையும் நடத்தி வருகிறார், டிரம்ப்.

ஆனால், தேர்தல் முறைகேடு தொடர்பான தகுந்த ஆதாரங்களை இதுவரை அவர் சமர்ப்பிக்கவில்லை என்று ‘தி இந்து’ செய்தி கூறுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் – முடிவை மாற்றும் முயற்சிகளில் பின்னடைவு, டிரம்ப் தலைமறைவு

இந்நிலையில், நேற்று (நவம்பர் 26), டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான பாரம்பரிய நன்றி  தெரிவிப்பு தினத்தை முன்னிட்டு, நடை பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

டொனால்ட் டிரம்ப் – உள்நாட்டு கலகத்தை மூட்டும் அதிபர்

அப்போது, “ஜோ பைடனுக்கு மக்கள் வாக்காளர் குழு (எலக்ட்ரோல் காலேஜ்) உறுப்பினர்கள் வாக்களித்து, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அளித்தால், நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறேன்.” என்று கூறியுள்ளதாக ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் டிசம்பர் 14-ம் தேதி மக்கள் வாக்காளர் குழு கூடவுள்ளது.

மக்கள் வாக்காளர் குழு

அமெரிக்க மக்கள், அவர்களது அதிபரை நேரடியாகத் தேர்ந்தெடுக்க முடியாது. அந்நாட்டின் மக்கள் வாக்காளர் குழுவுக்கு (எலக்ட்ரோல் காலேஜ்) வாக்களிப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அமெரிக்க காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை) எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்களை, அந்த மாநிலத்துக்கான வாக்காளர் குழுவும் கொண்டிருக்கும்.

குறிப்பிட்ட மாநிலத்தில் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் அம்மாநிலத்தின் வாக்காளர் குழு வாக்குகள் வழங்கப்படும். பெரும்பாலான மாநிலங்களில் மாநில வாக்குப் பதிவில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற வாக்காளர்களுக்கு அனைத்து வாக்காளர் குழு வாக்குகளும் வழங்கப்படுகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இஸ்லாமிய வெறுப்புணர்வு

பிரதிநிதிகள் சபை

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது பிரதிநிதிகள் சபையில் 435 வாக்குரிமையுள்ள, 6 வாக்குரிமையற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

பிரதிநிதிகள் சபையின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளின் பிரச்சனைகளை முன்வைப்பர்.

ஈராக், ஆப்கானிஸ்தான் – அமெரிக்க படைகளை திரும்பப் பெறுகிறார் ட்ரம்ப்

செனட் சபை

அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒரு மாநிலத்துக்கு 2 பிரதிநிதிகள் வீதம் மொத்தம் 100 செனட் சபை உறுப்பினர்கள் உள்ளனர். செனட் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.

அதிபர் தேர்தல்

அதிபர் தேர்தலில் அதிக வாக்காளர் குழு வாக்குகளைப் பெறும் வேட்பாளர், வாக்காளர் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிபராக பதவி ஏற்பார்.

கொரோனா தடுப்பூசி

மேலும், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி விநியோகம் குறித்து ட்ரம்ப் பேசிய போது, தடுப்பூசி விநியோகம் அடுத்த வாரம் தொடங்கும் என்றும் முதற்கட்டமாக, தொற்று தடுப்பு போராட்டத்தில் முன் களத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

‘நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்’ – ட்ரம்ப் அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்