இலங்கையில் உள்ள சிறையில் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தக் கோரி போராடிய கைதிகள் மீது சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையின் தலைநகரமான கொழும்பு அருகே உள்ள மகாரா சிறைச்சாலையில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கைதிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதைக் கட்டுப்படுத்தச் சிறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார் என்றும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளார் என்றும் தி இந்து கூறியுள்ளது. கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு நடந்ததையொட்டி சிறையில் உயரடுக்கு போலீஸ் கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
யார் இவர்கள்? எதற்கு சிறையில் உள்ளார்கள்? என்ன குற்றம் செய்தார்கள்?
இந்தச் சம்பவம் குறித்து செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹனா, “மகாரா சிறைச்சாலையில், கைதிகள் நெரிசலான நிலைமைகளுக்கு எதிராகக் கலவரம் செய்து அவர்களை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனப் போராட்டம நடத்தினார்கள். இதனால் மகாரா சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரணச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதில் ஒரு கைதி மரணமடைந்தது உட்பட மூன்று கைதிகள் படுகாயமடைந்துள்ளனர்” என அஜித் ரோஹனா கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ”சிறைச்சாலையில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகச் சிறப்புப் பணிக் குழுக்கள் (special task force) அனுப்பப்பட்டுள்ளன” என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை சிறைச்சாலைகளில் கொரோனா நோய்தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இரண்டு கைதிகள் கொரோனா நோய்த்தொற்றினால் பலியடைந்துள்ளதாகவும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சிறையில் உள்ள கூட்ட நெரிசல், கொரோனா நோய்த்தொற்று பரவல் எனப் பல வாரங்களாக சிறையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை ஆகியவையே கலவரமாகக் காரணம் என்று தி இந்து கூறியுள்ளது.
இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் – மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
கடந்த வாரம், மத்திய போகாம்பரா பகுதியில், சிறைக்குள் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறைச்சாலையின் சுவர்கள் மீது ஏற முயன்ற ஒரு கைதி கீழே கூட்ட நெரிசலுக்குள் விழுந்து பலியாகியுள்ளார். இலங்கையில் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் இடையே கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்குள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை இந்த மாதத்தில் ஆறு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் (109) மொத்த நோய்த்தொற்றுக்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் (23,311) தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
2.1 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடான இலங்கையில் ஜனவரி 27-ம் தேதியன்று ஒரு சீனப் பெண் சுற்றுலாப் பயணியின் மூலம் கொரோனா நோய்தொற்றின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முதலில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்ற இலங்கை ஜூன் 28 முதல் மூன்று மாத ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தியுள்ளது.
`தேவை சிறையடைப்பு அல்ல; சிந்தனாவாதிகள்’ – சட்டப் பல்கலை இயக்குநர்
இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தாக்கியுள்ளது. இந்த இரண்டாவது அலையில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்றின் திரிபு (strain) புதியதாக இருப்பதாகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் மாதத்தின் இறுதிவரை இலங்கையில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 10,424 பேரில் 19 நபர்தான் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.