Aran Sei

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் அட்டூழியம் – விசாரணை அறிக்கையில் தகவல்

Credits BBC

ப்கானிஸ்தான் நாட்டில் ஆஸ்திரேலிய சிறப்புப் படையினர் அப்பாவி பொது மக்களைக் கொன்றிருப்பதாக விசாரணை அறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.

2005 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான ஆஸ்திரேலிய சிறப்புப் படையினரின் நடத்தைக் குறித்த ஆய்வறிக்கையில், ஆஸ்திரேலிய படையின் மூத்த கமாண்டோக்கள் இராணுவ வீரர்களை கட்டாயப்படுத்தி, பிடிபட்ட கைதிகளைக் கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன்,  39 கைதிகள் மற்றும் அப்பாவிப் பொது மக்களைக் சிறப்புப் படையினர் கொன்றிருப்பது மிகவும் கவலை அளிப்பதாகவும் கலக்கம் அடையச் செய்வதாகவும் கூறியுள்ளார்.

நான்காண்டு விசாரணைக்கு பிறகு நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம் நவம்பர் 19-ம் தேதி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், முன்னாள் மற்றும் தற்போது பணியில் உள்ள 19 படை வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி பரிந்துரை செய்துள்ளது.

அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு இதுகுறித்து பிரதமர் ஸ்காட் மாரிசன் அளித்துள்ள முதல் பேட்டியில் , “இந்த அறிக்கை முடிவுகள் மிகவும் வேதனை அளிக்கின்றன” என்று கூறியுள்ளார்.

“ஆனால், ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரை, நாங்கள் இதைக் கையாள்வோம். எங்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, எங்கள் நீதி அமைப்பின் கீழ் நாங்கள் இதனைக் கையாள்வோம்.” என்று அவர் திட்டவட்டமாத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இராணுவ வீர்கள் மீதான போர் குற்றங்களுக்கு ஆஸ்திரேலியா மிகவும் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு ஸ்காட் மாரிசன் உறுதியளித்துள்ளார்.

எப்போதும் இராணுவத்தின் வரலாற்றை மிகுந்த உற்சாகத்துடன் உயர்த்திப் பிடிக்கும் ஆஸ்திரேலியா, அறிக்கையின் முடிவுகளுக்கு மிகுந்த கோபம் மற்றும் அவமானம் தொனிக்கும் வகையில் பதிலளித்திருப்பதாக தி இந்து செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் அட்டூழியம் – விசாரணை அறிக்கையில் தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்