Aran Sei

பதவி நீக்கத் தீர்மான தோல்வி – அரசியல் பயணம் தொடரும் என்று டிரம்ப் அறிவிப்பு

மெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

2017 முதல் கடந்த ஜனவரி 20-ம் தேதி வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனல்ட் டிரம்ப் மீதான இரண்டாவது பதவிநீக்க தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையில் தோற்கடிக்கப்பட்டது.

செனெட் சபையில் தோல்வியடைந்த அமெரிக்க கலவரம் தொடர்பான தீர்மானம் – குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார் டொனால்ட் ட்ரம்ப்

சென்ற ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதை உறுதி செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் கூடிய போது, தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு, நாடாளுமன்ற கட்டிடத்தில் வன்முறை கலவரத்துக்கு காரணமாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு டிரம்ப் மீதான பதவிநீக்க தீர்மானத்தை பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியிருந்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் – கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம் சாட்டி பதவி நீக்க தீர்மானம்

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காமல் அது மேலவையில் தோற்கடிக்கப்பட்ட செய்தியை டொனால்ட் டிரம்ப் நண்பர்களும், குடும்பத்தினரும் சூழ பார்த்துக் கொண்டிருந்தார் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

தமது இயக்கம் “இப்போதுதான் தொடங்குகிறது” என்று இந்த வாக்கெடுப்புக்குப் பிந்தைய ஒரு அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.

“நமது மக்கள் அனைவருக்கும் அமெரிக்காவின் மகத்துவத்தை சாதிப்பதற்கான வியக்கத்தக்க பயணத்தை தொடர்வதை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் வன்முறையால் கலைப்பு – அதிபர் டிரம்ப் ஆதரவு கும்பல் நடவடிக்கை

சமூக வலைத்தள ஊடகமான ட்விட்டரை தனது பிரச்சார மையமாக பயன்படுத்தி வந்த டொனால்ட் டிரம்ப், அதிலிருந்து ஜனவரி 6 நாடாளுமன்ற வன்முறைக்குப் பிறகு தடை செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது குடியரசுக் கட்சியினுள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக பிளவுகள் ஏற்பட்டுள்ளன. மேலவையில் பதவி நீக்கத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 7 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் கணக்குகள் முடக்கம் – டிவிட்டர், பேஸ்புக் நடவடிக்கை

ஆனால், டிரம்ப் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். பல வாரங்கள் அமைதியாக இருக்கும் டிரம்ப், நட்புரீதியான ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பிப்பார் என்று அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் எதிர்பார்க்கின்றனர்.

‘டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தை வெடித்து தகர்க்கிறார்’ – உலக தலைவர்கள் கண்டனம்

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான 2022 இடைத் தேர்தல்களில், நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும், மேலவையிலும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை எண்ணிக்கையை பெறுவது தொடர்பாக அவர் தனது அரசியல் உதவியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவரது பதவிநீக்க தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பழி வாங்குவதிலும் அவர் உறுதியாக உள்ளார்.

“வரப் போகும் நாட்களில் அவரிடமிருந்து பல விஷயங்களை எதிர்பார்க்கலாம்” என்று டிரம்பின் மூத்த ஆலோசகர் ஜேசன் மில்லர் கூறியிருப்பதாக ஏபி செய்தி தெரிவிக்கிறது.

பதவி நீக்கத் தீர்மான தோல்வி – அரசியல் பயணம் தொடரும் என்று டிரம்ப் அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்