Aran Sei

ஆர்க்டிக் வனவிலங்கு புகலிடத்தில் எண்ணெய் எடுப்பது நிறுத்தப்படும் – ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் முறைப்படி நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற உடனேயே, பல அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை பைடன் மேற்கொண்டார்.

அதனொரு பகுதியாக, ட்ரம்ப் ஆட்சிகாலத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருந்த, அலாஸ்காவின் ஆர்க்டிக் தேசிய வனவிலங்கு புகலிடத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான குத்தகைக்கு, தற்காலிக தடை விதிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது, ஜோ பைடனின் நிர்வாகக் குழு.

“2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, குத்தகை சட்டத்தை தொடர்ந்து, பிற பணிகளைவிடவும், நிறுவனங்களுக்கு குத்தகைகளை வழங்குவதற்குதான் டிரம்ப் நிர்வாகம் முன்னுரிமை தந்தது” என்று அலாஸ்காவில் உள்ள அமெரிக்க நில மேலாண்மை பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் லெஸ்லி எல்லிஸ்-வூட்டர்ஸ் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 6 ஆம் தேதி, கடலோர சமவெளி நிலத்தை டிரம்ப் அரசு முதல்முறையாக குத்தகைக்கு விட்டது. அதிலிருந்து எட்டு நாட்களுக்குப் பிறகு, மொத்தம் 1,770 சதுர கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ள ஒன்பது பகுதிகள் குத்தகைக்கு விடப்பட்டன.

இவ்வாறு, ஏறத்தாழ 685 சதுர மைல் தூரம் குத்தகைக்கு விடப்பட்டபோதும், டிரம்பின் அதிபர் பயணத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வரை, குத்தகை வழங்கல் பற்றிய எந்த ஒரு தகவலும், அதிகாரபூர்வமாக பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை

இருப்பினும், இந்த ஆர்க்டிக் பகுதியில் எண்ணெய்க்காகவும், எரிவாயுக்காகவும் துளையிடுவதை தேர்தல் பிரச்சாரத்தின்போதே பைடன் எதிர்த்தார். தான் ஆட்சிக்கு வந்தால், நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அப்பகுதிக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

ஆகவே பைடன் இந்த குத்தகை திட்டத்தை எதிர்ப்பார் என்பது உறுதியாகியிருந்தாலும், அதுசார்ந்த திட்டங்கள் பற்றிய மற்ற விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை கொடுக்கப்பட்ட குத்தகைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று வாஷிங்டனில் இதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

Source: AP

ஆர்க்டிக் வனவிலங்கு புகலிடத்தில் எண்ணெய் எடுப்பது நிறுத்தப்படும் – ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்