பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் கெளரவத்தின் பெயரால் சுமார் ஆயிரம் பெண்கள் ஆணவக்கொலை செய்யப்படுவதாக அமெரிக்காவை மையமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2021 ஆம் ஆண்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு 478 ஆணவக்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் அண்மையில் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் தெரிவித்திருந்தது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்
“பாகிஸ்தானில் கெளரவத்தின் பெயரால் செய்யப்படும் ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை அதிகம் என்றும் ஒவ்வொரு ஆணவக்கொலை வழக்கையும் காவல்துறை பதிவு செய்வதில்லை” என்று பெண்கள் உரிமைக்காகப் பணியாற்றும் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் தனது 2021 அறிக்கையில் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பெண்ணுரிமை ஆர்வலரான நூர் மகத்தம் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, பாகிஸ்தானில் பெண்கள் கொல்லப்படுவதைக் கருத்தில் கொண்டு அவசரநிலையை அமல்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
நின்று கிடைத்த நீதி – கண்ணகி – முருகேசன் வழக்கின் வரலாறும் தீர்ப்பும்
பாகிஸ்தானில், ஆணவக்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த ஆணவக்கொலை வழக்குகளில் இறந்தவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களான கணவர், தந்தை, மகன், சகோதரர்கள்தான் அதிகளவில் சம்பந்தப்பட்டுள்ளனர். விருப்பப்படி திருமணம் செய்துகொள்வது முதல் அலைப்பேசிகளை பயன்படுத்துவது மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவது போன்றவை இந்த ஆணவக்கொலைகளுக்குக் காரணங்களாக அமைகின்றன.
இன்றும் கூட பாகிஸ்தானில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரிவது மற்றும் மாடலிங் செய்வது பெண்களுக்கான நல்ல தொழிலாக கருதப்படுவதில்லை.
மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன – கௌசல்யா
மாடல் கந்தீல் பலூச், 2016 இல் தனது சகோதரர் வாசிம் கானால் கழுத்தை நெரித்துப் படுகொலை செய்யப்பட்டார். கந்தீல் பலூச் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். ஆணவக்கொலை வழக்கில் இறந்தவரின் குடும்பத்தினர் அவரை மன்னித்தாலும்கூட, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்ற புதிய சட்டத்தைக் கந்தீல் பலூச்சின் ஆணவக்கொலைக்குப் பிறகு பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
இந்த புதிய சட்டம் இஸ்லாத்திற்கு எதிரானது என்று இஸ்லாமியச் சட்டங்களை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானின் செல்வாக்கு மிக்க மதத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இது பாகிஸ்தானின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்கள் இந்த சட்டத்தைப் பாராட்டி வருகின்றனர்.
Source: BBC Tamil
இலங்கையில் நடப்பது இது தான்? | Tu Senan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.