உலகின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட ஆண்டுக்கு சராசரியாக 1.1 விழுக்காடு மக்கள் தொகை பெருக்கம் பதிவாகி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடந்த 2020ஆம் ஆண்டு மட்டும் மக்கள் தொகை பெருக்கம் ஒரு விழுக்காட்டிற்கு குறைவாக பதிவானது.
இந்நிலையில், இன்று உலக மக்கள் தொகை 800 கோடி என்ற எண்ணிக்கையை எட்டவுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனாவை, இந்தியா 2023 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கும் என ஐநா கணித்துள்ளது. தொடர்ந்து, 2050ல் இந்தியாவின் மக்கள் தொகை 166 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
குடிகளின் நலன் காக்கும் அரசிற்கு மக்கள் தொகை பெருக்கம்: வரமா? சாபமா?
கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை 2 மடங்கு அதிகரித்து 400 கோடியிலிருந்து 800 கோடியாக உயரவுள்ளது. 2050க்கும் 970 கோடியாக உயரும் எனவும் கூறப்படுகிறது. 1950ம் ஆண்டு மக்கள் தொகை என்பது 250 கோடியாக இருந்தது. கடந்த 72 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 550 கோடி அதிகரித்து 800 கோடியை தொடவுள்ளது.
Source : NDTV
Annamalai BJP Under Performer | Amit Shah | Narendra Modi TN Visit | EPS OPS Sidelined | TN BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.