2022 ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.
சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
இந்தியாவில் கொரானா முழு அடைப்பு மற்றும் பட்டினி பேரழிவு – பகுதி ஒன்று
அந்த வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் 101-வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் (99), இலங்கை (64) வங்கதேசம் (84), நேபாளம் (81), மியான்மார் (71) போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் கூட இந்த குறியீட்டில் இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன. ஆசிய நாடுகளில் போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தப் பட்டியலில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பின்தங்கி இருக்கிறது.
4 முக்கிய விஷயங்களை கருத்தில் கொண்டு உலக பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது.அவை
இந்தியாவில் கொரோனா முழு அடைப்பும் பட்டினி பேரழிவும் – பகுதி 2
1.ஊட்டச்சத்துக் குறைபாடு,
ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் போதுமான கலோரி உட்கொள்ளாமல் இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது
2. சைல்டு ஸ்டன்டிங்
சைல்ட் ஸ்டன்டிங் என்பது நாட்டின் மக்கள் தொகையில் 5 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற கணக்கு
3. சைல்ட் வேஸ்டிங்.
சைல்ட் வேஸ்டிங் என்பது 5 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் வயதுக்கேற்ற உடல் எடை மற்றும் உயரம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கான கணக்கு
இதற்கான தரவுகள் ஐ.நா சபை, அதன் கிளை அமைப்புகளான யுனிசெப், எஃப்ஏஓ மற்றும் உலக வங்கியிடம் இருந்து பெறப்படுகிறது. இந்தப் பட்டியலில் சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் 5க்கும் கீழ் GHI ஸ்கோர் பெற்று பட்டினி இல்லாத நாடாக முன்னணியில் உள்ளன.
இந்நிலையில் சர்வதேச பட்டினி குறியீட்டை சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு பிரதமர் மோடி எப்போது ஊட்டச்சத்துக் குறைபாடு, பட்டினி, ஸ்டன்டிங், வேஸ்டிங் போன்ற பிரச்சினைகளைக் கவனிப்பார்? இந்தியாவில் 22.4 கோடி மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். சர்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் இடம் 107 ஆக உள்ளது. 121 நாடுகளில் 107 என்பது கிட்டத்தட்ட கடைசி இடம் தானே” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2014ல் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்தே தொடர்ந்து இந்தியா இந்தக் குறியீட்டில் பின்னடைவை சந்திப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Source : indianexpress
நம்ம ஊரு ஆட்டுக்காரனின் அமெரிக்க சாகசம் | அதிபரைச் சொரிந்து விட்டு அடி வாங்கிய கதை | Aransei Roast
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.