Aran Sei

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 136வது இடம் – வெறுப்பில் முதலிடம் பிடிப்போம் என ராகுல் காந்தி விமர்சனம்

 உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 136வது இடம் பிடித்துள்ள நிலையில், விரைவில் வெறுப்பு மற்றும் கோபத்தில் முதலிடம் பிடிப்போம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற அமைப்பு ஒன்று கடந்த 10 ஆண்டுகளாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் 2021 ஆண்டிற்கான பட்டியலில் இந்தியா 136வது இடம் பிடித்துள்ளது. 2020 ஆண்டு 139 வது இடத்தில் இருந்த இந்தியா 3 இடங்கள் முன்னேறி 136வது இடத்தை இந்தியா அடைந்துள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “பசி குறியீட்டில் 101வது இடம்; சுதந்திரமான நாடு குறியீட்டில் 119வது இடம்; மகிழ்ச்சி குறியீட்டில் 136வது இடம். ஆனால், விரைவில் வெறுப்பு  மற்றும் கோபத்திற்கான தரவரிசையில் முதலிடம் பிடிப்போம்என பதிவிட்டுள்ளார்.

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து நாடுகள் முறையே அடுத்த 4 இடங்களை பிடித்துள்ளன.

மக்களை நேரடியாக சந்திப்பதன் வாயிலாகவும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 136வது இடம் – வெறுப்பில் முதலிடம் பிடிப்போம் என ராகுல் காந்தி விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்