ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது.
ஈரானில் இஸ்லாமிய மதச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வீட்டைவிட்டு வெளியில் செல்லும் 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம்.
இதற்கிடையே, ஹிஜாப் மத உடைக் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க 2006-ல் அறநெறிக் காவல் பிரிவை ஈரான் அரசு தொடங்கியது. ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்தப் பிரிவுக்கு, உடை கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கைது செய்யும் அதிகாரமும் இருந்தது.
ஹிஜாப் அணிவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் – உலக குத்துச்சண்டை சாம்பியன் நிகத் ஜரீன்
இந்நிலையில், டெஹ்ரானில் பொது இடத்தில் சரியாக ஹிஜாப்அணியவில்லை என்று கூறி, மாஸா அமினி(22) என்ற இளம்பெண்ணை அறநெறி காவல்துறையினர் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி கைது செய்தனர்.
காவலிலிருந்த அவரை காவல்துறையினர் அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் 16-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாபுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே, போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர், தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதில், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.
ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் பெண்கள் குறிவைக்கப்படுவதை நிறுத்துங்கள் – பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சந்து
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஹிஜாப் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பது குறித்து நாடாளுமன்றமும், நீதித் துறையும் ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் ஜாபர் மான்டசெரி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், அறநெறி காவல் துறையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஈரான் அட்டார்னி ஜெனரல் ஜாபர் மான்டசெரி நேற்று கூறும்போது, “அறநெறி காவல் துறைக்கும், நீதித் துறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அந்தப்பிரிவு இப்போது கலைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Source : india today
அம்மா, அம்மா நீ எங்க அம்மா | உன்ன விட்டா அதிமுகவுக்கு யாரு அம்மா | Aransei Roast | admk | ops | eps
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.