Aran Sei

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு பறிப்பதா? – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்

8-ம் வகுப்பு வரையில் படிக்கிற மாணவர்களின் கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கிற சிறுபான்மையினர், பட்டியல் பிரிவினர், பழங்குடியினர் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது. இதையொட்டி பிறப்பித்த அறிவிக்கையில், “1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் இலவச, கட்டாய கல்வி அளிப்பது அரசின் கடமை. எனவே 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவர்கள்தான் இனி ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் மற்றும் பழங்குடியினர் அமைச்சகத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் வருவார்கள்” என கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் – பாஜக மாநிலத் தலைவர் பேச்சு

ஒன்றிய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக சாடி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “பிரதமர் மோடி அவர்களே, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கிற தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை உங்கள் அரசு நிறுத்தி இருக்கிறது.

சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் அதிகாரம் – நிலைப்பாட்டை மாற்றிய ஒன்றிய அரசு

ஏழை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை பறித்ததால் என்ன பலன்? ஏழை மாணவர்களுக்கான இந்த கல்வி உதவித்தொகையை பறிப்பதன் மூலம் உங்கள் அரசு எவ்வளவு சம்பாதித்து விடும் அல்லது சேமித்து விடும்? என்று அவர் கேலி எழுப்பியுள்ளார்.

Source : the hindu

Ilaiyaraja background score | Vivek Agnihotri’s Kashmir Files | Ilaiyaraja | Modi| Dalit | Ambedkar

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு பறிப்பதா? – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்