Aran Sei

“காந்தியை கொன்றவர்கள் என்னை மட்டும் விட்டுவிடுவார்களா?” – சித்தராமையாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை விசாரிக்க கர்நாடக முதல்வர் உத்தரவு

ர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று (ஆகஸ்ட் 19) தெரிவித்துள்ளார்.

குடகு மாவட்டத்தில் தனக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் குறித்து பேசிய சித்தராமையா “அவர்கள் காந்தியை கொன்றவர்கள், என்னை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றார். அவரது புகைப்படத்தை வணங்கி, வழிபடுபவர்களிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரியமும் பெரியாரியமும் பாஜகவை தோற்கடிக்க முக்கியமானவை – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சாவர்க்கர் படம் வைக்கப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் சாவர்க்கர் படம் வைக்கக்கூடாது என்று அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, சித்தராமையா நேற்று குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்றார். மடிகேரி அருகே சென்ற போது பாஜக, பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் அவருக்கு கறுப்புக் கொடி காட்டினர். அவரது வாகனத்தின் மீது முட்டைகளை வீசினர். மேலும் சாவர்க்கர் பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்குமாறு அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

சாதி அமைப்புக்குக் காரணமானவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள்: இட ஒதுக்கீடு என்பது பிச்சையல்ல, அது நமது அரசியல் சாசன உரிமை – சித்தராமையா கருத்து

இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும், இந்துத்துவ அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

Source : india today

சங்கிகள் வீசிய செருப்பை திருப்பி விட்டெறிந்த PTR | Aransei Roast | Modi | India Today Debate | BJP

“காந்தியை கொன்றவர்கள் என்னை மட்டும் விட்டுவிடுவார்களா?” – சித்தராமையாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை விசாரிக்க கர்நாடக முதல்வர் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்