Aran Sei

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் நடத்துவதா?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம்

ல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டியுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்கலைக்கழகங்களின் இணைவேந்தர் பொறுப்பில் உள்ள உயர்கல்வித் துறை அமைச்சருக்கு அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை.

அரசியல் சாசன பதவியின் கண்ணியத்தை கெடுக்கும் தமிழக ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

“நீட் விலக்கு மசோதா உட்பட பல்வேறு விசயங்களில் தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் பேராசிரியர்களுடன் கலந்துகொள்ளும் ஒரு மாநாட்டை ஆளுநர் கூட்டியுள்ளார்” என்று இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஆளுநர் என்பவர் மாநில சட்டப்பேரவை மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்றுச் செயல்பட வேண்டியவர். ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, ஒரு போட்டி அரசை நடத்தும் அதிகபட்ச அத்துமீறலைச் செய்கிறார். தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது” என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசிய தமிழக ஆளுநர் – பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்க வைகோ வலியுறுத்தல்

“அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசுக்கும் மக்களாட்சிக்கும் வழங்கியுள்ள சட்ட உரிமைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு ஆளுநர் கூட்டியுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை ரத்து செய்ய வேண்டும். இந்த மாநாட்டை துணை வேந்தர்களும், பேராசிரியர்களும் புறக்கணிக்க வேண்டும்” என்று இரா. முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

“ஆளுநர் கூட்டியுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் அல்லது உயர்கல்வித் துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும், மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் ஆளுநர் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது” என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு மசோதா: ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் – வேல்முருகன் அறிவிப்பு

“பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் அவருக்கு இத்தகைய அதிகாரங்களை அரசியலமைப்பு சட்டம் வழங்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பறிக்கும் செயலாகும். எனவே, ஆளுநர் கூட்டியுள்ள இந்த கூட்டத்தில் துணைவேந்தர்கள் உட்பட யாரும் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டிய கடமை உயர்கல்வித் துறை அமைச்சருக்கு உள்ளது. அதை அவர் உடனே நிறைவேற்ற வேண்டும்” என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

Source : hindu tamil 

இளையராஜா பேச்சை பொருட்படுத்தக்கூடாது

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் நடத்துவதா?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்