Aran Sei

என் வாழ்நாளில் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

நான் பாஜக கூட்டணியிலிருந்து விலகி விட்டேன். என் வாழ்நாளில் இனிமேல் அக்கட்சியுடன் கைகோர்க்க மாட்டேன் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் சமஷ்டிபூரில், அரசு பொறியியல் கல்லூரியின் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில், வாஜ்பாய், அத்வானி, ஜோஷி போன்ற மாபெரும் தலைவர்களின் காலத்து பாஜகவில் இருந்து தற்போதைய பாஜக வேறுபட்டது. அந்த தலைவர்கள் என் மீது பாசமும், மரியாதையும் வைத்திருந்தனர். தற்போதைய தலைவர்களிடம் அதை பார்க்க முடியவில்லை. மேலும், சாமானியர்கள் மீது அவர்களுக்கு எந்த அக்கறை இல்லை.

பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் திட்டம் – எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் டெல்லி பயணம்

நான் பாஜக கூட்டணியிலிருந்து விலகி விட்டேன். என் வாழ்நாளில் இனிமேல் அக்கட்சியுடன் கைகோர்க்க மாட்டேன். மீதி வாழ்நாளில், சோசலிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன்.

என்னுடன் கூட்டணியில் இருந்தபோது, 2017-ம் ஆண்டு லாலுபிரசாத் யாதவ் வீட்டில் சோதனை நடந்தது. ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் மீண்டும் என்னுடன் கைகோர்த்தவுடன், அரசியல் எஜமானர்கள் உத்தரவுப்படி, அவர் மீது சி.பி.ஐ புதிய வழக்குப் போட்டுத் துன்புறுத்துகிறது என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

Source : indianexpress

நம்ம ஊரு ஆட்டுக்காரனின் அமெரிக்க சாகசம் | அதிபரைச் சொரிந்து விட்டு அடி வாங்கிய கதை | Aransei Roast

என் வாழ்நாளில் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்