“குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவை சந்தித்து அவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் என்று மோகன் பகவத்தால் சொல்ல முடியுமா?” என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பினார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அண்மையில் டெல்லியில் உள்ள மசூதி மற்றும் மதரஸாவுக்கு சென்றதை ‘பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் புதிய நாடகம்’ என்று அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அண்மையில் டெல்லியில் உள்ள மதரஸா என்ற இடத்திற்குச் சென்றார். பில்கிஸ் பானுவை பாலியல் வன்புணர்வு செய்தவர்களை குஜராத் பாஜக அரசால் விடுத்துள்ளது. அவர்கள் மீது மலர்கள் தூவப்பட்டன. பில்கியின் பானுவுக்கு மோகன் பகவத் நியாயம் கொடுப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Source : indiatoday
kallakurichi Sakthi school student case | The consequence | Student Affected | Villavan Ramadoss
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.