பட்டியல் சாதியினருக்கான அரசு இடஒதுக்கீடுகள் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே உள்ள ‘தலித்துகளுக்கு’ நீட்டிக்கப்படுமா என்கிற கேள்விக்கு கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றிய அரசு பதிலளிக்கவில்லை.
அடுத்த மூன்று வாரங்களில் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது, ‘சமூக மாற்றங்களால்’ தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் முடித்து வைக்கும் முயற்சியாகும்.
கடந்த 2004 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பட்டியல் சாதியினர் இந்து, சீக்கியர் மற்றும் புத்த மதங்களுக்கு மட்டுமே உரியவர்கள் என்பது அரசியல் சட்டத்திற்கு முரணாக இருக்கிறது. பல ஆண்டுகளாக, ‘தலித்’ கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பிலும் வலுவான வாதங்கள் இருப்பதால், நடுவர் மன்றத்திற்கு இது மிகவும் சிக்கலாக இருந்த்து.
சீக்கியர்களும் பௌத்தர்களும் இந்துக்கள் அல்லாதவர்களாக இருந்தாலும் இடஒதுக்கீட்டை அனுபவிக்க முடியுமென்றால், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களில் உள்ள ஒடுக்கப்பட்டவர்கள் ஏன் அத்தகைய பலனை அனுபவிக்க முடியாது என்று ஆய்ஸ் வாதிடுகிறார்.
மதம் மாறியவர்கள் ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்டோர் எனும் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர் இந்து மதத்தில் உள்ள சாதியின் அவலத்திலிருந்து தப்பிக்க அவர்கள் கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறியதால், அவர்கள் அட்டவணை சாதி அந்தஸ்து மற்றும் இடஒதுக்கீடு பெறுவதற்கான உரிமையை இழந்தனர், இவை இரண்டும் சாதியை வலுப்படுத்துகின்றன. மதம் மாறியவர்கள் தீண்டாமை அல்லது சாதியப் பாகுபாடுகளை கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு ஏன் எஸ்சி அந்தஸ்த்து தேவை? தீர்க்கப்படாத விவாதம் இடஒதுக்கீட்டின் இறுதி நோக்கத்தை சிதைக்கிறது.
அனைத்து மதங்களிலும் பாகுபாடும் தீண்டாமையும் நிலவுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஒடுக்கப்பட்ட சாதிகள்தான் என்பது கசப்பான உண்மை. பட்டியல் சாதியிலிருந்து மதம் பாறியவர்கள் எஸ்.சி/ எஸ்.டி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தில் இருந்து பயனடையவில்லை.
அவர்கள் எஸ்சிக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தேர்தலில் போட்டியிட முடியாது. ராஜிந்தர் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்கள் தங்களை எஸ்சிக்களாக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தின என்பதும் குறிப்பிட்த்தக்கது.
Madras Hc Judgement on Kallakurichi Case – Tada Rahim | Kallakurichi Case Latest Update | TN CBCID
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.