அருண் கோயலை அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
ஒன்றிய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக 1985 பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 37 ஆண்டுகளாக ஒன்றிய அரசில் பணியாற்றி வருகிறார்.
60 வயதான அருண் கோயலின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே, பணிக்காலம் நிறைவடைவதற்கு முன் அருண் கோயல் கடந்த 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளர் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
வெள்ளிக்கிழமை விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் சனிக்கிழமை (நவ.19) அருண் கோயலை இந்தியத் தேர்தல் ஆணையராக ஒன்றிய அரசு நியமித்தது. இந்த நியமன ஒப்புதலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளித்தார்.
இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 21 இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையர்கள் குழுவின் அருண் கோயல் இடம்பெற்றுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா இடம்பெற்றுள்ள குழுவில் 3-வது நபராக அருண் கோயல் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஒன்றிய அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயல் இந்தியத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்ட ஆணையை ஒன்றிய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
மத்திய அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது எவ்வாறு? நியமன நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டன? நியமன ஆணை உள்ளிட்டவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக நியமித்ததில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளதா? நியமன நடைமுறைகள் சரிவர பின்பற்றப்பட்டதா? என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்யும்படி ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அப்போது 18ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில், அதே நாளில் புதிய தேர்தல் ஆணையர் பெயரை பிரதமர் அறிவிப்பதற்கான காரணம் என்ன என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மே 15 முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்த காலகட்டத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி, “அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? 4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து அரசு வழக்குரைஞர் விளக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.
Source : NDTV
SKY க்கும் சாம்சனுக்கும் நூல் வேணுமாம்! | சாதிவெறி BCCI இன் EWS கிரிக்கெட் | Aransei Roast
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.