“ஞானவாபி மசூதி விவகாரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? இஸ்லாமியர்கள் அவர்களின்(எதிர்க்கட்சிகள்) வாக்கு வங்கி இல்லை என்பதால் அவர்கள் எதுவும் பேசவில்லை” என அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமென் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்துப் பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்கள் கேட்டபடி மசூதியின் உள்பகுதி, அடித்தளம் உட்பட அனைத்து இடங்களிலும் காணொளிப் பதிவு செய்ய வேண்டும். கள ஆய்வுப் பணி மே 17 ஆம் தேதிக்குள் முடிவடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமென் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி ஆகிய வெற்றி கட்சிகள், வீட்டில் மட்டுமே இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும்; வெளியில் இருக்கும்போது அவர்களின் (கட்சிகள்) கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கட்சிகள் விரும்புகின்றன என்று கூறியுள்ளார்.
“இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவ் அவர்களுக்குரிய கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பின்பற்ற அனுமதிக்கிறது. வீட்டிலும் வெளியிலும் நாங்கள்(இஸ்லாமியர்கள்) அதைத் தொடருவோம்” என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.
வாரணாசி: ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்த தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்
முன்னதாக பேசிய ஓவைசி “பாபர் மசூதி இழப்பே போதும். இன்னொரு மசூதியை இழக்க நாங்கள் தயாராக இல்லை. இவ்விவகாரத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம், மசூதி குழு ஆகியவை உச்ச நீதிமன்றத்தை நாடும் என நான் நம்புகிறேன். உத்தரப் பிரதேசத்தை ஆளும் யோகி அரசு, வழிபாட்டுத் தளங்களைச் சர்ச்சைக்கு உள்ளாக்குவோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
Source: The New Indian Express
ஈழத்த பத்தி பாஜக வாயவே திறக்க கூடாது Kalanjiyam Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.