Aran Sei

பல்வேறு மத அடையாளங்கள் இருக்கும்போது ஹிஜாப்பை மட்டும் குறி வைப்பது ஏன்? – உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பு வாதம்

ல்வி நிலையங்களுக்கு மாணவ, மாணவிகள் பல்வேறு மத அடையாளங்களை அணிந்து வரும்போது அரசு ஹிஜாபை மட்டும் குறி வைப்பது ஏன்?. என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு கல்லூரியில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி மற்றும் நீதிபதிகள் ஜே.எம். காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தேசிய கொடியை அவமதித்த கர்நாடக பாஜக அமைச்சர் – நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் சட்டமன்ர உறுப்பினர்கள் கோரிக்கை

அப்போது மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவிவர்ம குமார், “கல்வி நிலையங்களுக்கு மாணவிகள் வளையல்கள் உள்ளிட்ட 100 விதமான மத அடையாளங்களை அணிந்து வரும்போது, அரசு ஹிஜாப்பை மட்டும்  குறிவைப்பது ஏன் என தெரியவில்லை. கிறிஸ்துவர்களின் சிலுவை, சீக்கியர்களின் தலைப்பாகை உள்ளிட்ட எந்த மதத்தின் அடையாளமும் தடை செய்யப்படவில்லை. ஆனால், இஸ்லாமிய மாணவிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என வாதிட்டார்.

கர்நாடக கல்வி விதிகள், 1995 விதிப்படி, ஒரு கல்வி நிறுவனம் சீருடையை மாற்ற நினைக்கும்போது, ஒராண்டுக்கு முன்பே மாணவர்களின் பெற்றோர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ”அதே சட்டத்தின் கீழ் எந்த ஒரு குறிப்பிட்ட சீருடையையும் பரிந்துரைக்கவில்லை என்பதால், ஹிஜாப் அணிய எந்த தடையும் இல்லை. எனவே, எந்த அதிகாரத்தின் கீழ் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வெளியே நிறுத்தப்பட்டார்கள். இதை மேற்கொள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது” என கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்லூரிக்கு அடுத்து பள்ளிகளில் அமல்படுத்தப்படும் ஹிஜாப் தடை: கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு

”வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் முழக்கமாக இருக்க வேண்டும். மேலும் பன்முகத்தன்மை காக்கப்பட வேண்டும். தலைப்பாகை அணிந்த சீக்கியர்கள் ராணுவத்தில் இருக்க முடியும் என்றால், தங்கள் சொந்த மத அடையாளங்களை கொண்ட ஒருவர் ஏன் பள்ளி, கல்லூரி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்க முடியாது?. ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண்களை வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருப்பது அவர்களின் கல்விக்கே அழிவை ஏற்படுத்தும்” என மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவிவர்ம குமார், வாதிட்டுள்ளார்.

Source : The Hindu Tamil 

 

பல்வேறு மத அடையாளங்கள் இருக்கும்போது ஹிஜாப்பை மட்டும் குறி வைப்பது ஏன்? – உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பு வாதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்