Aran Sei

பாஜக ஆளும் உ.பி.,யில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி

நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் பொய்யான விளம்பரங்களைக் கொடுப்பதால் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தி விட முடியாது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் (இருவரும் சகோதரிகள்) பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி, கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்பவர்களிடமிருந்து பெண்களின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது – உ.பி, பட்டியலின சகோதரிகள் கொலை குறித்து ராகுல்காந்தி கருத்து

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ள பிரியங்கா காந்தி, “லக்கிம்பூரில் இரண்டு சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது மனதை உலுக்குகிறது. அந்தச் சிறுமிகள் பட்டடப்பகலில் கடத்தப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நாளிதழ்கள் தொலைக்காட்சிகளில் பொய்யான விளம்பரங்களைக் கொடுப்பதால் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தி விட முடியாது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Suriya Krishnamurthy explains the historical contribution of Arignar Anna on him Birthday

பாஜக ஆளும் உ.பி.,யில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்