Aran Sei

லட்சுமி விலாஸ் வங்கி ஏன் காலாவதி ஆயிற்று: ரூபாய் நோட்டுகளில் லட்சுமி படத்தை அச்சிடச் சொன்ன அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தி.க தலைவர் கி.வீரமணி கேள்வி

ந்தியாவில் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூபாய் நோட்டுக்களில் கடவுள் படங்களை அச்சிட வேண்டும் என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. இதை மேம்படுத்த, கடவுள்களின் ஆசி நமக்குத் தேவை. தற்போது ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவம் உள்ளது. இதைத் தவிர லட்சுமி, விநாயகரின் உருவங்களும் ரூபாய் நோட்டில் இடம்பெற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

விநாயகர், லட்சுமி படத்தை ரூபாய் நோட்டுக்களில் உடனடியாக அச்சடிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்

கடவுள் படம் போட்டால், நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துவிடுமாம். இந்தப் போக்கு அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை, தத்துவத்தை குழிதோண்டிப் புதைப்பது ஆகும். லட்சுமி விலாஸ் வங்கி ஏன் காலாவதி ஆயிற்று. லட்சுமி பேரில் உள்ள வங்கியின் கதை ஏன் இப்படி முடிந்தது என்பதை அவர் அறியாதவரா? பின் ஏன் இப்படி ஒரு திடீர் பக்தி வேஷம் என்றால், அதுவும் தேர்தல் வித்தைதான்.

இந்துத்துவா வாக்கு வங்கியை வசீகரித்து இழுப்பதற்கு பாஜகவைவிட ஒருபடி மேலே போய் குஜராத் தேர்தலையே குறியாக வைத்து இப்படி ஒரு துருப்புச் சீட்டை இறக்கி இருக்கிறார். முதலில் ஊழல் ஒழிப்பு என்று வேஷம் கட்டி இறங்கினார். இது அவரது பக்தி வேஷம். தேர்தல் வெற்றிக்கான உத்தி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

பந்த் இல்லனு பம்மிய ஆட்டுக்குட்டி | பல்பு வாங்கிய வானதி அக்கா | Aransei Roast | Annamalaibjp

லட்சுமி விலாஸ் வங்கி ஏன் காலாவதி ஆயிற்று: ரூபாய் நோட்டுகளில் லட்சுமி படத்தை அச்சிடச் சொன்ன அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தி.க தலைவர் கி.வீரமணி கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்