Aran Sei

பள்ளி கட்டிடத்திற்க்கு காவி நிறம் பூசும் பாஜகவினர் தங்களது கார்களுக்கு காவி நிறத்தை பூசாதது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

ள்ளி கட்டிடங்களுக்கு காவி நிறம் பூசும் பாஜகவினர் தங்களின் கார்களுக்கு காவி நிறத்தை பூசவில்லையே ஏன்?. எத்தனை பாஜக தலைவர்கள் தங்களின் வீடுகளுக்கு காவி நிறத்தை பூசியுள்ளனர். வீடு இருக்கட்டும், குறைந்தபட்சம் வீட்டின் சுற்றுச்சுவருக்கு ஆவது காவி நிற சாயம் பூசி இருக்கிறீர்களா? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பள்ளி மாணவர்கள் பேசுவது போல் ஒரு பதிவை இட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் அவர்களே பள்ளி கட்டிடத்திற்கு எந்த நிறத்தை வேண்டுமானாலும் பூசுங்கள். ஆனால் உடுப்பியில் பள்ளிக்கு வரும் சாலை மோசமாக உள்ளது. நாங்கள் பள்ளிக்கு வந்தால் தானே உங்களின் நிறத்தை பார்க்க முடியும். நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சாலையை சீரமைத்துள்ளோம். நீங்கள் உங்களின் கடமையை எப்போது நிறைவேற்ற போகிறீர்கள் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கர்நாடகா: மசூதியில் காவி கொடி ஏற்றியதால் ஸ்ரீராம் சேனை அமைப்பினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல்

பள்ளி கட்டிடங்களுக்கு அரசியல் சாயம் பூசும் பாஜக தலைவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும். மேலும் பாஜகவினர் தங்களின் கார்களுக்கு காவி நிறத்தை பூசவில்லையே ஏன்?. எத்தனை பாஜக தலைவர்கள் தங்களின் வீடுகளுக்கு காவி நிறத்தை பூசியுள்ளனர். வீடு இருக்கட்டும், குறைந்தபட்சம் வீட்டின் சுற்றுச்சுவருக்கு ஆவது காவி நிற சாயம் பூசி இருக்கிறீர்களா? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

முதலில் உங்களின் வீடுகளுக்கு காவி நிறத்தை பூசுங்கள். அதன் பிறகு பள்ளி கட்டிடங்களுக்கு அந்த நிறத்தை பூசுங்கள். குழந்தைகள், நாங்கள் காவி நிறத்தை பார்க்க வர வேண்டுமா? அல்லது படிக்க வர வேண்டுமா?. கல்வி ஆண்டில் 50 சதவீதம் முடிந்துவிட்டது. குழந்தைகளுக்கு இன்னும் பாடப்புத்தகம் வழங்கவில்லை. குழந்தைகள் எப்படித் தேர்வு எழுதுவார்கள்.

கர்நாடகா: பள்ளிகளில் தியான வகுப்பு கட்டாயம் – குழந்தைகளின் வாழ்க்கையில் பாஜக அரசு விளையாட கூடாதென சித்தராமையா கண்டனம்

கொரோனா பரவல் காரணமாக குழந்தைகளின் கல்வி 2 ஆண்டுகள் பாதிக்கப்பட்டது. தற்போது போதிய அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்காததால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. பள்ளிகளில் பெண்களுக்கு என்று தனியாக கழிவறை இல்லாததால் பெண் குழந்தைகள் எப்படி பள்ளிக்கு வருவது?. காவி நிறம் இருந்தாலும் பரவாயில்லை. பெண் குழந்தைகளுக்கு தனி கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

Source : freepressjournal

ஏப்பத்துக்கு கூட வரி போடுவீங்களா? | GST தர முடியாதுனு மிரட்டும் மம்தா | Aransei Roast | BJP | GST

school buildings

பள்ளி கட்டிடத்திற்க்கு காவி நிறம் பூசும் பாஜகவினர் தங்களது கார்களுக்கு காவி நிறத்தை பூசாதது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்