Aran Sei

டிஆர்பி முறைகேடு வழக்கு: ஆதாரம் இருந்தால் அர்னாப்பை குற்றவாளியாக இணைக்காதது ஏன்? – மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி

credits : the indian express

டிஆர்பி முறைகேடு குற்றச்சாட்டில், போதிய ஆதாரங்கள் இருந்தால் ஏஆர்ஜி அவுட்லையர் மீடியாவையும் அர்னாப் கோஸ்வாமியையும் குற்றவாளிகள் பட்டியலில் இணைக்காதது ஏன்? என மும்பை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், டிஆர்பி (தொலைகாட்சி மதிப்பீடு புள்ளிகள்) மோசடிக்காரர்கள், தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி புள்ளிகளில் மோசடி செய்வதாக, மதிப்பீட்டு மீட்டர்களின் மூலமாக டிஆர்பி புள்ளிகளை ஆய்வு செய்யும் “ஹன்சா ரிசர்ச்” என்ற நிறுவனத்தின் அதிகாரி நிதின் தியோகர், பார்வையாளர் ஒளிபரப்பு ஆராய்ச்சி கவுன்சிலிடம் (பார்க்) புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்துடிஆர்பி மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ரிபப்ளிக் டிவியின் இயக்குநர்கள், விளம்பரதாரர்கள்,  பணியாளர்கள் அனைவரும் இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்று மும்பை மாநகரக் காவல்துறை கூறியது.

அர்னாப் கோசாமிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கிய நீதிமன்றம் – மார்ச் 5 வரை நடவடிக்கை கூடாது என உத்தரவு

மேலும், டிஆர்பி புள்ளிகளை அதிகமாகக் கொண்டிருப்பதாகக் கூறும் ரிபப்ளிக் தொலைக்காட்சி, அதிக விளம்பரங்களைப் பெறுவதற்காக, மதிப்பீடு மீட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும் வீடுகளுக்கு பணம் கொடுத்து, டிஆர்பி புள்ளிகளில் மோசடி செய்ததாக காவல்துறை குற்றஞ்சாட்டியது.

பாலகோட் தாக்குதல்: அர்னாப்பிடம் ராணுவ ரகசியத்தைக் கூறியது பிரதமர் மோடியா ? ராகுல் காந்தி சந்தேகம்

இந்நிலையில், காவல்துறையினர் இன்னும் எவ்வளவு காலம் விசாரிப்பார்கள் எனவும் எங்களுக்கு எதிரான ஆவணங்கள் இருந்தால் வெளியிடுங்கள் எனவும் ரிபப்ளிக் நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அர்னாப் வாட்ஸ்ஆப் உரையாடல்: ‘நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணை தேவை’ – காங்கிரஸ் தீர்மானம்

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மனிஷ் பிடலே ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. ரிபப்ளிக் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதிலளித்துள்ள மும்பை காவல்துறையினர்,  ஆதாரங்களை தொடர்ந்து சேகரித்து  வருவதாக நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளனர்

‘தேசதுரோகி அர்னாப் கோஸ்வாமியை கைது செய்’ – மகாராஷ்ட்ராவில் வலுக்கும் எதிர்ப்பு

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”போதிய ஆதாரங்கள் இருக்கும் சூழலில், ஏஆர்ஜி அவுட்லையர் மீடியாவையும், அர்னாப் கோஸ்வாமியையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக இணைக்காதது ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும்,  குற்றவியல் வழக்கில், சந்தேகத்திற்குரியவர் என எவரும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அர்னாப் கோசாமி மீது தேசவிரோத குற்றச்சாட்டு – பாகிஸ்தானின் சதி என்று கூறுகிறது ரிபப்ளிக் தொலைகாட்சி

மேலும், அர்னாப் கோஸ்வாமியும், ஏஆர்ஜி அவுட்லையர் மீடியாவும் தங்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமோ எனும் அச்சத்திலேயே இருப்பதாக மனுவில் கூறியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

SOURCE : PTI

டிஆர்பி முறைகேடு வழக்கு: ஆதாரம் இருந்தால் அர்னாப்பை குற்றவாளியாக இணைக்காதது ஏன்? – மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்